- தரவறிவியல் – Data Science - November 27, 2023
- திருக்கார்த்திகை தீபம் - November 25, 2023
- 1984 (நாவல்) - November 14, 2023
இன்று பல மனிதர்களுக்கும் தேவைப்படுகின்ற ஒன்று Motivation. பெரும்பாலான மனிதர்கள் தமக்குத் தேவையான Motivation-ஐ இணையத்தில் உள்ள வீடியோக்களை பார்ப்பதன் மூலமாக பெற்றுக்கொள்ள நினைக்கின்றார்கள். Motivational வீடியோவைப் பார்த்துவிட்டு இன்றிலிருந்து நான் அதைச் செய்யப் போகின்றேன், இதைச் செய்யப் போகின்றேன் என்று தன்னுடைய இலக்கை நோக்கி வேலை செய்ய ஆரம்பிப்பார்கள். ஆனால் அந்த வீடியோ தந்த Motivation சில மணிநேரம் வேலை செய்ய மட்டும்தான் உதவி செய்யுமே தவிர நீண்ட காலத்திற்கான Motivation ஆக இருக்காது.
நானும் Motivational வீடியோக்கள் பார்த்திருக்கின்றேன். பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்கும். நம் மனதில் வெற்றிபெற வேண்டும் என்ற உணர்ச்சியை தற்காலிகமாகத் தூண்டிவிடும். ஆனால் அது தற்காலிகமானது என்பது ஒரு கட்டத்தில் புரிந்துவிட்டது. Motivational வீடியோக்கள் நமக்கு ஏற்படுத்துவது வெற்றிபெற வேண்டும் என்ற உண்மையான எண்ணத்தை அல்ல. Motivational வீடியோக்கள் பார்க்கும் போது ஏற்படுவது உணர்ச்சிவசப்படுகின்ற நிலை என்றுதான் நினைக்கின்றேன். ஒரேயொரு வீடியோவைப் பார்க்கும் போது மனதில் வெற்றிபெற வேண்டும் என்ற உணர்வு தூண்டப்பட்டு சில மணிநேரங்கள் மட்டும் துடிதுடிப்புடன் வேலை செய்தால் வீடியோவைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறீர்கள் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது என்று தெரியவில்லை.
உண்மையான Motivation மெதுவாகத்தான் கிடைக்கும். ஆமை வேகத்தில் நம்மை வந்தடைய பல நாட்கள் ஆகும். நினைத்தவுடன் வீடியோ ஒன்றைப் பார்த்ததும் அடுத்த நொடியில் கிடைக்காது. அதுவும் Motivation எங்களால்தான் எங்களுக்கு கிடைக்கும். நாம் ஒர் பெரிய இலக்கு வைத்திருப்போம். அதனை அடைவதற்காக நாம் செய்கின்ற சிறிய சிறிய செயற்பாடுகளில் வெற்றி கிடைக்கும் போது ஒர் உத்வேகம் வரும். அந்த உத்வேகம் நம்மை அடுத்த அடியை எடுத்து வைக்க தூண்டுதலாக அமையும். அதுதான் உண்மையான Motivation ஆக இருக்க முடியும். அதாவது நாம் செய்கின்ற செயற்பாடுகள் மூலமாக நமக்கு கிடைக்கின்ற உத்வேகம். நிறைய சந்தர்ப்பங்கள் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நான் நிறைய சந்தர்ப்பங்கள் உணர்ந்திருக்கின்றேன். நாம் செய்கின்ற சிறிய சிறிய செயல்கள் மூலமாக கிடைக்கும் வெற்றி அடுத்த இலக்கை நோக்கி அதிகமாக உழைப்பதற்கான உத்வேகத்தை கொடுக்கும். அதுதான் உண்மையில் Motivation அளிப்பதாக இருக்கும்.
உதாரணத்திற்கு, இந்தப் பதிவை நான் வலைப்பதிவிலே எழுதிக்கொண்டிருப்பதால் வலைப்பதிவையே எடுத்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் வலைப்பதிவை பெரிதாக யாருமே படிக்காத போது ஏன் எழுதிக்கொண்டிருக்கின்றேன் என்ற சோர்வான எண்ணம் தோன்றியது. பின்னரான நாட்களில் குறிப்பிட்ட சில பார்வைகள் வலைப்பதிவிற்கு அதிகமாக கிடைக்கும் போது ஒர் உத்வேகம். யாரோ சிலர் பதிவுகளை படித்துள்ளார்கள் என்ற எண்ணம் ஏதாவது எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது. நான் செய்த வேலையால் சிறிய வெற்றி கிடைத்த போது அல்லது ஏதோவொரு பலன் கிடைக்கும் போது ஒர் உத்வேகம் வருகின்றதல்லவா? அதுதான் நான் செய்த வேலைக்கான Motivation ஆக இருந்திருக்கின்றது.
நான் வலைப்பதிவை உதாரணத்திற்காகத்தான் கூறினேன். நீங்கள் உங்களுக்கான இலக்குகளை எடுத்துக்கொள்ளுங்கள். நமது இலக்குகளை அடைவதற்கான உண்மையான Motivation நாம் சிறிய சிறிய வெற்றிகளை அடையும் போதுதான் கிடைக்கின்றது. நாம் இலக்குகளை அடைவதற்கான உண்மையான Motivation அப்படித்தான் அமையுமே தவிர Motivation வீடியோக்களை பார்த்தவுடன் வருகின்ற Motivation நிலையானதாக நீண்ட நேரத்திற்கு இருக்காது.
ஆகவே, Motivation தேவை என்றால் நமது இலக்குகளை நோக்கிப் போகும் போது கிடைக்கின்ற சிறிய சிறிய வெற்றிகளை அடைந்து Motivation-ஐ பெற்றுக்கொள்ளலாம். அதை விடுத்து நான் வீடியோக்கள் பார்த்து நிமிடங்களில் Motivate ஆகப்போகின்றேன் என்று போனால் அதில் பயனில்லை என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட எண்ணம்.
நீங்கள் Motivation பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? உங்களுக்கு Motivation ஆக அமைவது என்ன? என்பது பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் தெரிவியுங்கள்.