Esports என்றால் என்ன?

Last updated on February 14th, 2024 at 09:34 pm

அறிவியலும் தொழினுட்பமும் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது. தொழினுட்பம் வளரும் போது அதனுடன் இணைந்து பல்வேறுபட்ட துறைகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன. அவற்றுள் முக்கியமானதொன்று கேமிங் துறை.

பொழுது போக்கு என்பதைத் தாண்டி கேமிங், தற்போது மிகப்பெரிய வணிகமாக மாறிவிட்டது. எதிர்காலத்தில் கேமிங் துறை இன்னும் பெரிய அளவில் வளரும் என்பதை உறுதியாக கூறமுடியும்.

வீடியோ கேம்ஸ் என்று எடுத்துக்கொண்டால் பல வகைகள் உள்ளன. அவற்றுள் Multiplayer ஆக ஆன்லைனில் விளையாடக்கூடிய Battle Royale Game களினுடைய தாக்கத்தினை தற்போது அதிகமாக அவதானிக்க முடிகின்றது.

Multiplayer என்றால் வீடியோ கேம் ஒன்றை பல பேர் போட்டியிட்டு விளையாடி ஒரு நபர் அல்லது ஒரு குழு வெற்றியீட்டுகின்ற மாதிரியான கேம்ஸ் Multiplayer Games ஆகும்.  இவ்வாறான Multiplayer கேம்ஸ் ஆனது ஒரு படி மேலே போய் ஒரு Sport நிகழ்வாக நடாத்தப்படுகின்றது. அதுதான் E-sport என்று அழைக்கப்படுகின்றது.

Esports Meaning in Tamil : Esports என்ற வார்த்தையின் அர்த்தத்தைப் பார்த்தால் E என்பது Electronic என்றும் Sport என்பது விளையாட்டு என்றும் சொல்லலாம். இலத்திரனியலில் நடாத்தப்படும் விளையாட்டுப் போட்டிதான் Esport என்று அழைக்கப்படுகின்றது.

தற்போது Battle Royale Game-கள் பல நபர்களால் விரும்பி விளையாடப்படுவதால் Battle Royale Game களிற்கான E-sports Tournaments நடாத்தப்படுவது அதிகமாகும்.  

ஒரு Esport நாடாத்தப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். சாதாரணமான விளையாட்டுப்போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வதனை போல Esport ஒன்றில் Gamers அல்லது Gaming Teams பங்கு கொள்வார்கள்.

எப்படி மைதானத்தில் போட்டியாளர்களிடையே விளையாட்டு போட்டி நடாத்தப்படுகின்றதோ அதே போல Esport இல் Esport Player கள் கணணியில் ஆன்லைனில் விளையாடுவதன் மூலமாக போட்டியிட்டு வெற்றியடைய வேண்டும்.

பெரிய அளவில் நடாத்தப்படுகின்ற Esports Tournoment களில் கலந்து கொண்டு வெற்றியீட்டுகின்ற நபர்களிற்கு பல லட்சங்களில் பண பரிசில்கள் கிடைக்கும். பல்வேறுபட்ட Esports போட்டிகளில் விளையாடி அதில் அதிகமாக பணம் சம்பாதித்த பலர் இருக்கின்றார்கள்.

வீடியோ கேம்ஸ் மிகப்பெரும் துறையாக இருக்கின்ற அதே நேரம் Esports நடாத்துவதற்கென்றும் பல நிறுவனங்கள் பெரியளவில் இருக்கின்றன. எதிர்காலத்திலும் நிறையவே உருவாகும்.

இப்போது எல்லா Battle Royale Game களிலும் Esports Players கள் உருவாகின்றார்கள். Esports Teams பல உருவாகின்றன. Esports கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைகின்றது என்று சொல்லலாம்.

கேமிங் மற்றும் Esports போன்ற தொழிற்துறைகள் எதிர்காலத்தில் பெரிய அளவில் வளரும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading