அக்னிப்பிரவேசம் சிறுகதை பற்றி

Last updated on August 30th, 2023 at 01:11 pm

ஜெயகாந்தன் அவர்கள் பிரபலமான சிறந்த தமிழ் எழுத்தாளர். நான் இதுவரை அவருடைய நூல்களை படித்ததில்லை. உண்மையைச்சொல்லப்போனால் நான் இதுவரை அவ்வளவாக நூல்களே வாசித்ததில்லை. இப்போதுதான் சில காலமாகவே புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு உருவாகியிருக்கிறது.

நான் ஜெயகாந்தன் அவர்களுடைய “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற நாவலை வாசிக்க வேண்டும் என்று எண்ணினேன். தமிழில் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்கள்/நாவல்கள் பற்றி தேடினால் ஜெயகாந்தன் அவர்களின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் முக்கியமான இடத்தைப்பெற்றிருந்தது.

“சில நேரங்களின் சில மனிதர்கள்” நாவலின் முன்னுரையை வாசித்த போது “அக்னிப்பிரவேசம்” என்ற ஜெயகாந்தனின் சிறுகதையின் முடிவை மாற்றி எழுதியதன் விளைவுதான் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அக்னிப்பிரவேசம் சிறுகதையை தேடியபோது நிறையத்தகவல்கள் கிடைத்தன. 1960-களின் இறுதியில் வெளிவந்து மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான சிறுகதையே அக்னிப்பிரவேசம். சிறுகதையை வாசித்து முடித்த பின்புதான் நாவலை வாசிக்க வேண்டும் என்பதால் விகடன் வலைத்தளத்தில் சிறுகதையை முழுமையாக படித்துமுடித்துவிட்டேன்.

அக்னிப்பிரவேசம் சிறுகதையை சுருக்கமாக சொன்னால், கல்லூரியில் படிக்கும் ஒர் பெண்ணை காரில் அழைத்துச்சென்று தகாத முறையில் நடந்துகொள்கிறான் ஒர் இளைஞன். அந்த இளைஞன் மறுபடியும் அவளை காரில் அழைத்து வந்து வீட்டிலேயே விட்டுவிடுகிறான். ஒர் அசிங்கத்தை காலால் மிதித்தால் காலையா வெட்டுகிறோம் அதனை கழுவிவிட்டு பூஜை அறைக்குள் செல்கிறோம் அதை போல வாழ்வில் படிந்த கறையை கடந்து செல்ல வேண்டும் என்பதை போல அம்மா அறிவுரை கூறுகிறார். நடந்ததை வெளியில் சொன்னால் சமூகத்தின் பார்வை எப்படியிருக்கும் என்பது தெரியும் ஆகவே நடந்ததை சொல்லக்கூடாது என்றும் சத்தியம் வாங்குகிறார். இப்படி சிறுகதை முடிகிறது.

உண்மையில் அக்னிப்பிரவேசம் சிறுகதை மிகவும் நன்றாகவே இருந்தது. சிறுகதை வெளிவந்த அப்போதைய நாட்களில் சிறுகதையின் முடிவிற்கு எதிர்ப்புக்கள் வந்ததாக கூறப்படுகிறது. பலரும் முடிவை மாற்றி தாம் விரும்பியது போல சிறுகதை எழுதினார்கள் என்று ஜெயகாந்தன் அவர்கள் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ச்சியாக சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை படிக்க வேண்டும். படித்து முடித்த பின்னர் அந்நாவல் பற்றிய என்னுடைய கருத்துகளை எழுதுவேன்.

நீங்கள் அக்னிப்பிரவேசம் சிறுகதை படித்திருந்தால் அல்லது சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் படித்திருந்தால் அதைப்பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

Share
Subscribe
Notify of
guest

5 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading