NFT என்றால் என்ன?

Last updated on November 26th, 2023 at 07:46 pm

எழில்(-ற்-)பிரகாஷ்
Follow me
Latest posts by எழில்(-ற்-)பிரகாஷ் (see all)

ஒருவர் தன்னிடமிருந்த படம் ஒன்றை பல கோடி ரூபாய்களுக்கு NFT மூலமாக விற்பனை செய்திருக்கின்றார். அந்த படத்தை கோடி ரூபாய்கள் கொடுத்து இன்னொருவர் வாங்கியிருக்கின்றார். போன்ற மாதிரியான செய்திகளை NFT சார்ந்து அதிகமாக கேட்கக்கூடியதாக இருந்தது.

சாதாரணமான JPEG படத்தை பல கோடிகள் கொடுத்து ஏன் வாங்க வேண்டும்? என்ற கேள்வி எழும்போதே, NFT என்றால் என்ன? என்ற கேள்வியும் தோன்றலாம். இந்தப் பதிவினூடாக உங்களால் NFT பற்றிய விடயங்களை தெரிந்துகொள்ள முடியும்.

NFT என்றால் என்றால் என்ன?

NFT என்பது Non Fungible Tokens என்பதைக் குறிக்கின்றது. Non Fungible Tokens பற்றி பார்க்கும் முன் Fungible Tokens பற்றி புரிந்துகொண்டால் NFT-ஜ புரிந்துகொள்ளலாம்.

Fungible Tokens

ஒரு பொருளிற்கான மதிப்பை அதே போன்ற வேறு பொருட்களை வைத்து ஈடு செய்ய முடியுமானவற்றை Fungible Tokens என்று சொல்லலாம்.

உதாரணமாக, உங்கள் நண்பருக்கு ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றை கொடுக்கிறீர்கள். நண்பர் அந்த பணத்தை உங்களுக்கு திரும்ப தருகின்ற போது வேறொரு ஆயிரம் ரூபாய் தாளை உங்களிடம் தரலாம் அல்லது இரண்டு ஜந்நூறு ரூபாய்த் தாள்களை தரலாம் அல்லது பத்து நூறு ரூபாய் தாள்களை தரலாம்.

எப்படி பணத்தை உங்களிடம் திரும்பத் தந்தாலும் அதனுடைய மதிப்பு சமனாகவே இருக்கும். இவ்வாறானவை Fungible Tokens ஆகும். Fungible Token இற்கு உதாரணமாக பணம், தங்கம், வெள்ளி, பங்குகள் போன்றவற்றைச் சொல்லலாம்.

Non-Fungible Tokens

Non-Fungible Tokens அதாவது NFT என்பவை ஒரு பொருளினுடைய மதிப்பை இன்னொரு பொருளைக் கொண்டு ஈடு செய்ய முடியாத பொருட்கள் NFT என்று அழைக்கப்படும்.

NFT இற்கு உதாரணமாக மோனலிசா ஒவியம் போன்ற பிரபல்யமான ஒவியங்களைச் சொல்லலாம். என்னதான் உண்மையான படத்தை பிரதி செய்தாலும் ஒவியரின் கையால் வரையப்பட்ட உண்மையான ஒவியமே மதிப்பு மிக்கது. உலகில் அதற்கு ஈடாக வேறொன்றை கொடுக்க முடியாது.

NFT இற்கு உதாரணங்களாக ஒவியங்கள், புகைப்படங்கள், ஆள்களப் பெயர்கள் (Domain Names), அடையாள அட்டை, பாடல்கள், கையெழித்து ஆக்கங்கள் போன்றவற்றைச் சொல்லலாம்.

இன்று தொழினுட்பம் வளர்ந்து வரும் போதே Non Fungible Token-களும் டிஜிற்றல் வடிவத்திற்கு மாறிக்கொண்டு வருகின்றது. இன்று NFT என்று சொன்னாலே டிஜிட்டலில் உள்ள NFT-கள் தான் ஞாபகம் வரும்.

நீங்களும் உங்களிடம் உள்ள படங்கள், ஒவியங்கள், பாடல்கள், தனித்துவமான விடயங்களை டிஜிற்றலில் NFT-யாக மாற்றி விற்பனை செய்யலாம். அதே போன்று வேறு நபர்களினுடைய NFT-களையும் உங்களால் வாங்க முடியும்.

பல கோடி ரூபாய்கள் கொடுத்து வாங்கிய படங்கள் கூட டிஜிற்றல் NFT-களே ஆகும். ஒரு படத்தை வாங்கிவிட்டால் அது அந்த நபருக்குச் சொந்தமாகிவிடும். அது தனித்துவமானது. அசல் என்பது ஒன்றே ஒன்றுதான். அதே போன்று இன்னொரு படம் கிடையாது என்பதால் அது பெறுமதியானது.

NFT எப்படி வேலை செய்கிறது?

Block chain

NFT ஆனது Block Chain தொழினுட்பம் மூலமாக தொழிற்படுகின்றது. ஒரு NFT-ஐ எவ்வளவு பிரதி செய்தாலும் அசல் என்பது ஒன்றுதான். அந்த அசலான NFT இற்கு தனித்துவமான அடையாளம் இருக்கும். அந்த NFT யாருக்கு சொந்தமானது என்ற விபரங்கள் பிளொக் செயினில் பாதுகாப்பாக இருக்கும்.

யாராலும் அதனை மாற்ற முடியாது என்பதால் ஒருவருடைய NFT இனுடைய உரிமத்தை யாராலும் திருட முடியாது.

இது நல்ல விடயம்தான். கலைஞர் ஒருவர் தன்னுடைய பாடலை NFT யாக மாற்றியிருந்தால் அதை யாராலும் திருட முடியாது. யார் அந்த பாடலை பிரதி செய்து தன்னுடையது என்று சொன்னாலும் உரிமையாளரின் விபரம் Block Chain இல் பாதுகாப்பாக இருக்கும். எல்லோருக்குமே பாடலின் உரிமம் யாருடையது என்பது தெரியும்.

நீங்கள் கூட ஒரு NFT ஐ உருவாக்கி விற்பனை செய்ய முடியும். NFT-களை வாங்குவதற்கும் விற்பதற்கும் இணையத்தளங்கள் உள்ளன. 

ஏன் இவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டும்

NFT

அதிகம் பெறுமதி கொடுக்கப்பட்டு நிறையவே NFT-கள் வாங்கப்படுகின்றன. விற்கப்படுகின்றன. எதற்காக இவ்வளவு பணத்தைக் கொடுத்து ஒரு படத்தை வாங்க வேண்டும் என்ற கேள்வி எல்லோருக்குமே இருக்கும். இதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

01. NFT களை சேகரிப்பாக வைத்திருப்பதற்காக வாங்குவார்கள். நிஐத்தில் பழைய காலத்து ஒவியங்கள், நாணயங்களை பணம் கொடுத்து வாங்கி சேகரிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அதே போல டிஜிற்றலிலும் சேகரிப்பதற்காக பணம் கொடுத்து வாங்குவார்கள்.

02. பிரபல்யமான நபர்கள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களுடைய NFT-களை விற்பனை செய்கின்றார்கள். பிரபல்யங்கள் மேல் உள்ள விருப்பத்தால் அவர்களுடைய ரசிகர்கள் NFT-களை வாங்குவார்கள்.

03. NFT-கள் தனித்துவமானவை பெறுமதியானவை. நிறைய பேர் தனித்துவமான பொருள் வைத்திருப்பதை ஒரு அந்தஸ்தாக நினைக்கின்றார்கள். அவர்களும் பெறுமதியாக இருக்கின்ற NFT களை பணம் கொடுத்து வாங்குகின்றார்கள்.

04. NFT-களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் குறைந்த விலைக்கு NFT-களை வாங்கி அதனை கூடிய விலைக்கு விற்பார்கள். அவரிடமிருந்து இன்னொருவர் வாங்குவார். அதனை வாங்கியவரும் அதனை விட அதிக விலைக்கு விற்கலாம். இப்படி NFT-களில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

NFT-யின் எதிர்காலம்

டிஜிற்றல் தளங்களில் NFT வாங்குவது, விற்பது, முதலீடு செய்வது பற்றி சில காலங்களுக்கு முன்னர் மிகவும் வைரலாக பேசப்பட்டது. நிறைய பேர் தங்களுடைய NFT-களை விற்பனை செய்தார்கள். நிறையப்பேர் முதலீடு செய்தார்கள். தற்போது NFT பற்றிய பேச்சுக்கள் குறைந்திருக்கின்றன.

ஆனால் NFT-என்பது எதிர்காலத்திற்கான தொழினுட்பம் என்பது பலருடைய கருத்து. உலகமே டிஜிற்றலாக மாறிக்கொண்டிருக்கின்றது. எதிர்காலத்தில் டிஜிற்றல் தளங்களில் வாங்குவதும், விற்பதும், முதலீடுகள் செய்வதும் அதிகரிக்கும். அப்போது NFT-ஐ பலரும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்ள் உள்ளன. Web 3.0 தொழினுட்பத்தில் NFT-யின் பங்கு முக்கியமானதாக இருக்கலாம்.

NFT-யினுடைய எதிர்காலம் எப்படியிருக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

6 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
%d bloggers like this: