Introvert என்பவர்கள் யார்?

Last updated on March 30th, 2024 at 12:48 pm

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு மாதிரியானவர்கள். ஒவ்வொருவரும் வேறுபட்ட பண்புகளையும் இயல்புகளையும் கொண்டிருப்பார்கள். மனிதர்களை வகைப்படுத்த வேண்டுமென்றால் பல்வேறுபட்ட அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு பல வகையாக வகைப்படுத்த முடியும்.

ஒரு மனிதனின் ஆளுமைப் பண்புகளையும் குணவியல்புகளையும் அடிப்படையாகக்கொண்டு மனிதர்கள் மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகிறார்கள். அவையாவன

  1. Introvert
  2. Extrovert
  3. Ambivert போன்றவையாகும்.

இந்தப் பதிவில் நாம் பார்க்கப்போவது Introvert மனிதர்களைப் பற்றியேயாகும்.

Introvert meaning in Tamil – Introvert என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தத்தைத் தேடினால் உள்முக சிந்தனையாளர்/அகமுக சிந்தனையாளர் போன்ற வார்த்தைகள் குறிப்பிடப்படுகின்றன.

Introvert என்பவர்கள் யாவர்?

Introvert குணப்பண்புகளைக் கொண்ட மனிதர்களால் தங்களின் மனதின் உள்ளே சிந்தனைகள் எண்ணங்களில் கவனம் செலுத்துவதன் மூலமாகவே வசதியாக (Comfortable) இருக்க முடியும்.

Introvert குணப்பண்புகளைக் கொண்டவர்களால் தனிமையில் இருக்கும்போது அல்லது ஒன்று இரண்டு மனிதர்களுடன் இருக்கும் போதுதான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

நீங்கள் உங்களைச் சுற்றி அவதானித்துப் பாருங்கள். சில மனிதர்கள் மக்கள் கூட்டத்துடன் இருப்பதை விட தனிமையில் இருப்பதையே அதிகம் விரும்புவார்கள். கூட்டமாக இருப்பதை விட தனிமையில் இருக்கும் போது ஒரு விடயத்தில் கவனம் செலுத்தி ஈடுபாட்டுடன் செயற்பட முடிகிறது என்றால் அந்த மனிதர் Introvert என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

Introvert மனிதர்களின் பண்புகள்/இயல்புகள்

  • Introvert இயல்புடைய மனிதர்கள் அமைதியான சூழலை விரும்புவார்கள். அவர்களால் அமைதியான சூழலில்தான் வசதியாக செயற்பட முடியும். செயற்பாடு ஒன்றில் கவனம் செலுத்த வேண்டுமென்றால் தனிமையான சூழல் தேவைப்படும்.
  • Introvert மனிதர்களால் உடனடியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவர்கள் தனிமையில் அதிகம் சிந்திப்பவர்களாக இருப்பதால் முடிவொன்றை எடுப்பதற்கு நிறைய நேரம் எடுப்பார்கள்.
  • Introverts அதிகமாக கதைக்க மாட்டார்கள். அதிகமாக செவிமடுப்பார்கள். ஆனால் இவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களுடன் அதிகமாகவே பேசுவார்கள்.
  • இவர்களுடைய வட்டம் மிக மிகக் குறுகியது. மிகக் குறைந்தளவான நண்பர்கள்தான் இவர்களுக்கு இருப்பார்கள். ஆனால் அவர்களோடு மிக நெருக்கமாக இருப்பார்கள்.
  • Introverts பொதுவாக அதிகம் சிந்திப்பவர்களாக இருப்பார்கள். சொல்லப்போனால் கற்பனையிலும் கனவுகளிலும் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
  • இவர்கள் கூட்டமாக நிறைய மனிதர்களுடன் இருப்பதை விட தனியாக இருப்பதையே விரும்புவார்கள். ஒரு வேலை என்று வந்துவிட்டாலும் இதே நிலைதான். தனியாகச் செயற்படும் போதுதான் இவர்களால் சிறப்பாகச் செயற்பட முடியும்.

Introvert பண்புகளைக் கொண்டிருப்பதன் பயன்கள்

ஒருவர் Introvert ஆக இருப்பதால் நன்மைகளும் இருக்கின்றன, தீமைகளும் உள்ளன. முதலில் Introvert இயல்புடையவராக இருப்பது எந்த வகையில் பயனளிக்கின்றது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

  • Introvert மனிதர்கள் மற்றவர்களுடன் அதிகமாக நேரத்தை பகிர்ந்துகொள்ளாததால் அவர்களிடம் தமக்கான நேரம் அதிகமாக இருக்கும். அதனைப் பயன்படுத்தி தமது இலக்குகளை நோக்கி உழைக்கலாம்.
  • இவர்கள் தனிமையிலிருந்து பழக்கப்படுவதால், தனிமை இவர்களுக்கு வசதியாக இருப்பதால், நிறைய வேலைகளை தனியாகச் செய்ய முயற்சி செய்வதால் இவர்களுக்கு யாரும் உதவியாக இல்லாவிட்டாலும் ஏதோவொரு வகையில் செய்ய நினைக்கும் வேலைகளை செய்து முடித்துவிடுவார்கள்.
  • நிறைய மனிதர்களுடன் நேரத்தை செலவிடாமல் சமூகத்துடன் குறைந்தளவான தொடர்பிலே இருப்பதால் தன்னுடைய இலக்குகளிலும் வேலையிலும் அதிக கவனத்தைச் செலுத்தக்கூடியதாக இருக்கும்.
  • Introverts அதிகம் சிந்தனையாளர்கள் ஆகையால் ஆழமாக சிந்திக்கும் திறனே பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் திறனையும் சரியான தீர்மானம் எடுக்கும் திறனையும் வளர்த்துவிடுகின்றது.
  • பொதுவாக மனிதர்கள் அதிகம் கதைப்பதற்கே விரும்புகிறார்களே தவிர செவிமடுப்பவர்களாக இல்லை. ஆனால் Introverts குணவியல்புடையவர்கள் கதைப்பதை விட செவிமடுப்பதற்கும் விரும்புவார்கள். இதனையும் ஒர் நன்மை என்றுதான் சொல்ல வேண்டும்.

Introvert பண்புகளைக் கொண்டிருப்பதன் எதிர்மறை விளைவுகள்

Introvert குணப்பண்புகளால் நிறையப் பயன்கள் இருப்பதைப் போலவே நிறைய எதிர்மறையான விடயங்களும் உள்ளன. Introvert குணப்பண்புகளுடன் இருப்பது எந்த வகையில் எதிர்மறையாகின்றது என்பதைப் பார்க்கலாம்.

  • நிறைய Introvert பண்புகளைக் கொண்ட மனிதர்கள் மக்கள் கூட்டத்தை விரும்புவதில்லை என்பதால் சமூகத்துடன் ஒன்றிணைந்து செயற்பட மாட்டார்கள். இதனால் சமூக நிகழ்வுகள், செயற்பாடுகளை, சமூகத்தொடர்புகளை இழக்க வேண்டி ஏற்படும்.
  • பொதுமக்கள் மத்தியில் பேசுவது, கலந்துரையாடல் போன்ற மக்களுடன் தொடர்பில் அமையக்கூடிய திறன்களை பெரும்பாலான Introverts கொண்டிருக்க மாட்டார்கள்.
  • நிறைய மனிதர்களுடன் தொடர்பிலிருப்பது பல வகைகளில் பயனளிக்கும். வணிகம் ஒன்றை ஆரம்பிப்பது, Personal Brand உருவாக்குவது போன்றவற்றுக்கு வலையமைப்பு (Network) உருவாக்கியிருந்தால் பயனளிக்கும். ஆனால் Introvert மனிதர்களிடம் நண்பர்கள், தெரிந்தவர்கள் மிகச் சொற்பமாகவே இருப்பார்கள்.

Introverts பற்றிய தவறான கருத்துகள்

Introverts ஆக இருப்பவர்களைப் பற்றிய நிறையவே தவறான எண்ணங்கள் காணப்படுகின்றன. நிறைய மனிதர்களுக்கு Introvert, Extrovert பற்றிய சரியான புரிதல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பெரும்பாலானோர் நினைக்கிறார்கள் Introvert குணவியல்புடைய அனைவரும் கூச்ச சுபாவம் கொண்டவர்கள் என்று. ஆனால் அது அப்படியில்லை. கூச்ச சுபாவம் என்பது ஒர் உணர்ச்சி ஆகும். Introvert என்பது ஒரு மனிதனின் ஆளுமைப் பண்பாகும். இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

அதேபோல் Introvert குணவியல்புடையவர்கள் யாருடனும் நண்பர்களாகப் பழகமாட்டார்கள், யாருடனும் நெருக்கமாகப் பழகமாட்டார்கள் என்ற தவறான கருத்துக்களும் உள்ளன. Introvert மனிதர்களுக்கு அதிகமாக நண்பர்கள் இருக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் குறைந்தளவான நண்பர்கள் இருந்தாலும் அவர்களுடன் மிக மிக நெருக்கமான உறவைப் பேணுவார்கள்.

Introverts அமைதியான தனிமையான சூழலை விரும்புவதாலும், சமூகம் சார்ந்த திறன்கள் நிறைய Introvert மனிதர்களிடம் இல்லாததாலும் அவர்களால் எதிலும் சாதிக்க முடியாது, அவர்கள் வெற்றியாளர்களாக இருக்கமாட்டார்கள் என்றும் நிறைய மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் வெற்றியாளர்கள் என்று கருதும் மனிதர்களின் பட்டியலைப் பார்த்தால் நிறைய Introverts அதில் இருப்பார்கள்.

ஒரு துறையில் வெற்றியடைவதற்கு Introvert, Extrovert என்ற ஆளுமைப் பண்புகள் தடையாக இருக்க முடியாது. தொடர்பாடல், சமூகவியல் போன்ற ஏதேனும் திறன்கள் இல்லையென்றால் அவற்றை மேம்படுத்திக்கொண்டால் உங்களுடைய துறையில் வெற்றியடைய முடியும்.

உள்முக சிந்தனையாளராக இருப்பது நல்லதா? கெட்டதா? என்று கேட்டால் Introvert என்பது ஆளுமைப்பண்பு என்பதால் அது தவறாக இருக்க முடியாது. ஆனால் சமூகவியல் திறன்கள் இல்லாவிட்டால் அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும். Introvert ஆக இருந்து அதேநேரம் சமூகவியல் திறன்களையும் வளர்த்துக்கொள்வது மேம்பட்ட சிறந்த மனிதனாகுவதற்கும் உதவும்.

Introvert பண்புகளைக் கொண்ட மனிதர்களைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் சொல்லுங்கள். நீங்கள் Introvert குணவியல்புடையவரா? அல்லது Extrovert குணவியல்புடையவரா? என்பதையும் கருத்துக்களாகத் தெரிவிக்கலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments