About

வலைத்தளத்தின் இந்தப் பக்கம் என்னைப் பற்றியும் வலைத்தளத்தைப் பற்றியும் சொல்வதற்காகவே.

இந்த வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் நான் எழிற்பிரகாஷ்.

எழுதுவதில் இருந்த ஆர்வத்தினால் இணையத்தில் எழுதுவது நிறையப் பேரை சென்றடையும் என்ற எண்ணம் தோன்றிய போது வலைப்பதிவொன்றை ஆரம்பித்தேன். அந்த வலைப்பதிவிற்கு அடுத்து இந்தத் தளத்தை ஆரம்பித்தேன். இங்கே நான் எழுதத் தொடங்கியது 2022 மார்ச் ஆகும். அப்போது எனக்கு உயர்தரப்பரீட்சை (A/L Exam) முடிவடைந்திருந்த காலம்.

எழுதுவது பிடிக்கும் என்பதைத் தாண்டி நிறைய தகவல்களை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆங்கில மொழியுடன் ஒப்பிடும் போது தமிழில் நிறையத் தகவல்கள் இணையத்தில் இல்லை. அப்படியிருந்தாலும் நிறைய நேரங்களில் முழுமையான விளங்கிக்கொள்ளும் படியாக, உண்மைத் தகவல்களாக, சுவாரஷ்யமாக இல்லாததை அனுபவத்தின் மூலமாக உணர்ந்திருக்கின்றேன்.

அவற்றை நினைவில் வைத்துக்கொண்டுதான் எல்லோராலும் விளங்கிக் கொள்ளக் கூடியவாறு அதே சமயம் சுவாரஷ்யமாகவும் தகவல்களை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

இந்தத் தளத்தில் வருகின்ற பதிவுகள் தனிப்பட்ட ஒர் தலைப்பை மையமாக வைத்து எழுதப்படுவதில்லை. தமிழ் வலைப்பதிவில் எழுதுவதை ஒரு வரையறைக்குள் கொண்டுவரவில்லை. இங்கே எல்லா விதமான தலைப்புக்களிலும் பதிவுகள் இடம்பெறும். பொதுவான கட்டுரைகள், புத்தகங்கள், தொழினுட்பம், அறிவியல், வாழ்வியல், சுவாரஷ்யமான தகவல்கள், சுய முன்னேற்றம் போன்ற பல்வகையான பதிவுகளையும் கட்டுரைகளையும் தமிழில் எதிர்பார்க்கலாம்.

தமிழ் வலைப்பதிவில் உள்ள பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாகவும் சுவாரஷ்யமானதாகவும் இருக்கும் என்று நம்புகின்றேன். நமது வலைப்பதிவில் உள்ள பதிவுகளை முழுமையாக வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

வலைத்தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்களுடைய கருத்துக்கள் மூலமாகவே வலைத்தளத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொருவருடைய கருத்துக்களும் எனக்கு மிகவும் முக்கியமானதாகவே தோன்றுகிறது.

வலைத்தளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்.