நாவல்கள் வாசிக்க கடினமாகவுள்ளன

இன்றைக்கு காலையில் “அம்மா வந்தாள்” என்ற நாவலை வாசிப்பதற்காக எடுத்தேன். அடுத்து ஏதேனும் புத்தகம் பற்றி எழுதினால் இந்த நாவல் பற்றியே எழுதுவேன் என்று நினைக்கின்றேன்.

இந்நாவலை சில நாட்களாகவே வாசித்துக்கொண்டிருக்கின்றேன். ஆனால் சில பக்கங்களே படித்து முடித்திருக்கின்றேன். வாசித்து முடித்துவிட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் புத்தகத்தை எடுப்பேன். ஆனால் சில வரிகளை படித்துவிட்டு திருப்பவும் வைத்துவிடுவேன்.

இப்பவெல்லாம் நாவல்களை தொடர்ச்சியாக வாசிப்பதற்கு எனக்குப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு நாவலும் ஒவ்வொருவிதமான பேச்சுவழக்கில் உரையாடல்கள் எழுதப்பட்டிருக்கும். அதுதான் சுவாரஷ்யமாக வாசிப்பதற்கு கடினமாக இருக்கின்றது. நிறைய நேரங்களில் புரிந்துகொள்ள கடினமாக இருப்பதால் வாசிப்பது தவிர்க்கப்படுகின்றது. நாவல்கள் அல்லாத மற்றைய நூல்கள் எழுத்துவழக்கில் எழுதப்படுவதால் அவை வாசிப்பதற்கு இலகுவாக உள்ளது.

அதனால்தான் நாவல்கள் வாசிப்பதை விடவும் மற்றைய நூல்கள் வாசிப்பது இப்போது பிடித்துப்போகின்றன என்று நினைக்கின்றேன். ஆனால் நாவல்களும் மிக நன்றாக இருக்கும். நாவல்கள் வாசிக்கப்பட வேண்டும் நிச்சயமாக. கொஞ்சம் பொறுமையாக வாசித்து பேச்சுவழக்கு உரையாடல்களை புரித்துகொள்ள வேண்டும். அந்தப் பொறுமைதான் எனக்கு இல்லைப் போல.

எது எப்படியோ நிறையவே நாவல்கள் வாசித்தாக வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

Share
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading