Bootstrap Paradox என்றால் என்ன?

Last updated on August 5th, 2023 at 10:35 pm

இந்தப் பதிவிற்கு முன்னர் Grandfather Paradox பற்றி ஒர் பதிவு எழுதியிருக்கின்றேன். அதில் Paradox என்றால் என்ன? என்பது பற்றியும் Grand Father Paradox பற்றியும் சொல்லியிருக்கின்றேன்.

அதனைத் தொடர்ந்து இந்தக் பதிவில் Bootstrap Paradox பற்றி பார்க்கப்போகின்றோம். Grandfather Paradox போலவே இந்தப் Paradox-ம் சுவாரஷ்யமாக இருக்கும்.

Grandfather paradox-இல் காலப் பயணம் செய்து அங்கே தாத்தாவை கொன்றுவிட்டோம். இங்கே அப்படியில்லை. நிகழ்காலத்தில் இருக்கின்ற ஏதாவது ஒன்றை இறந்த காலத்திற்கு கொண்டு போகப்போகின்றோம்.

Bootstrap Paradox என்றால் என்ன?

Bootstrap Paradox Meaning in Tamil – Bootstrap Paradox என்பது, நிகழ்காலத்தில் உள்ள பொருள், தகவல் போன்ற ஏதாவது ஒன்று இறந்த காலத்திற்கு செல்லும் போது அவை Time Loop ஒன்றில் சிக்கி அவற்றிற்கு தோற்றம் (Origin) என்பது இல்லாமல் போவதுதான் Bootstrap Paradox ஆகும்.

மேலே கூறிய விளக்கம் சில வேளைகளில் புரிந்து கொள்வது கடினமான விடயம். Bootstrap Paradox எவ்வாறு செயல்படுகின்றது என்பதனை ஒரு சிறிய உதாரணத்துடன் பார்க்கும் போது புரிந்துகொள்வதற்கு இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன்.

Bootstrap Paradox பற்றிய உதாரணம்

வானொலியை கண்டுபிடித்தவர் மார்க்கோனி. இன்று வானொலி எப்படி வேலை செய்கின்றது? எப்படி வானொலி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தொழினுட்பம் நம்மிடம் உள்ளது.

உங்களுக்கு ஒரு காலப்பயண இயந்திரம் ஒன்று கிடைக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். காலப் பயண இயந்திரம் மூலமாக மார்க்கோனி வானொலியை கண்டுபிடிப்பதற்கு முற்பட்ட காலத்திற்கு செல்கின்றீர்கள்.

அங்கே சென்று மார்க்கோனியை சந்தித்து வானொலி என்ற ஒன்று இப்படித்தான் வேலை செய்கின்றது. இப்படித்தான் உருவாக்க வேண்டும் என்ற விடயங்களை சொல்லி மார்க்கோனியை வானொலியை கண்டுபிடிக்க சொல்லிவிட்டு நிகழ்காலத்திற்கு வந்துவிடுகிறீர்கள். அவரும் வானொலியை உருவாக்குகிறார்.

இப்போது ஒரு கேள்வி: இந்த கதையில் வானொலியைக் கண்டுபிடித்தது யார்? மார்க்கோனியா?

மார்க்கோனியாக இருக்க முடியாது. காரணம் மார்க்கோனிக்கு எப்படி வானொலியை உருவாக்க வேண்டும் என்று நீங்கள்தான் சொல்லிக் கொடுத்தீர்கள்.

அப்படியானால் வானொலியை கண்டுபிடித்தது நீங்களா? நீங்களாக இருக்க முடியாது. காரணம் நீங்களே மார்க்கோனி கண்டுபிடித்ததை வைத்துத்தான் எப்படி வானொலி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறீர்கள்.

இங்கே வானொலியை முதலில் யார் உருவாக்கியது என்பதே தெரியாமல் போகின்றது. அதாவது வானொலிக்கான தோற்றம் (Origin) என்கின்ற ஒன்றே கிடையாது. 

மேல கூறிய கதை மூலமாக Bootstrap Paradox என்பதனை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

காலப்பயணம் என்பது இதுவரை செயன்முறை ரீதியில் நீரூபிக்கப்படாததாகவே இருக்கின்றது. காலப் பயணம் நிஐ வாழ்வில் சாத்தியமாகினால் மட்டுமே இந்த Paradox-களிற்கான விடை கிடைக்கும்.

காலப்பயணம் நிஐ வாழ்க்கையில் சத்தியபடுகின்றதோ இல்லையோ ஆனால் Time Travel, Paradox போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்வதில் சுவாரஸ்யம் இருக்கின்றது.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading