Grandfather Paradox என்றால் என்ன?

Last updated on August 5th, 2023 at 10:35 pm

காலப் பயணம் (Time Travel) தொடர்பான திரைப்படங்களை பெரும்பாலானோர் பார்த்திருப்பீர்கள். காலப் பயணம் பற்றி கதைப்பதே சுவாரஷ்யத்தை தரக்கூடிய விடயம். தமிழிலும் காலப் பயணத்தை மையமாக வைத்து ஒரு சில திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றது.

காலப் பயணம் தொடர்பான திரைப்படங்களின் கதையானது பெரும்பாலும் இறந்த காலத்திற்குச் சென்று அல்லது எதிர்காலத்திற்குச் சென்று அங்கு நடக்கின்ற சம்பவங்களை மாற்றியமைப்பதாகவே அமைந்திருக்கும்.

நிஜ வாழ்வில் காலப்பயணம் செய்ய முடியுமா? காலப்பயணம் செய்தாலும் அங்கு நடக்கின்ற சம்பவங்களை மாற்றியமைக்க முடியுமா? என பல கேள்விகள் பொதுவாக எல்லோருக்கும் மனதில் தோன்றுபவைதான்.

காலப் பயணம் தொடர்பாக நிறையத் தியரிகள் பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளன. தியரிகள் மட்டுமல்லாது காலப்பயணம் தொடர்பான Paradox-களும் பல முன் வைக்கப்படுகின்றன. அவற்றை பார்க்கும் போது சுவாரஸ்யாமானதாக இருக்கும் அதேவேளை நம்மை சிந்திக்கவும் வைக்கின்றது.

Paradox என்றால் என்ன?

Paradox Meaning in Tamil – Paradox என்பது தமிழில் முரண்பாடு என்று பொருள். ஒன்றுக்கொன்று முரண்பட்டு Logic இல்லாமல் முடிவெடுக்க முடியாமல் இருக்கின்ற கருத்துக்களை முரண்பாடு என்று சொல்லலாம்.  ஒரு சம்பவத்தை/விடயத்தை ஒரு மாதிரியாக யோசித்தால் சரியாக இருக்கும். வேறொரு மாதிரியாக யோசித்தாலும் சரியாக இருக்கும் அவ்வாறனவையும் முரண்பாடுகளாகும்.

சாதாரணமாக கூறப்படும் ஒரு வசனம் (Sentence) தொடக்கம் விஞ்ஞானபூர்வமான (Science) சம்பவங்கள் வரை நிறைய Paradox-கள் இருக்கின்றன.

Grandfather Paradox

காலப் பயணம் தொடர்பான Paradox-களில் மிகவும் முக்கியமானது Grandfather Paradox ஆகும். Grandfather Paradox  இல் சொல்லப்படுவது என்னவென்றால்,

உங்களுக்கு ஒரு காலப்பயண இயந்திரம் (Time Machine) கிடைக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த டைம் மெசின் மூலமாக உங்களுடைய தாத்தா வாழ்ந்த காலத்திற்கு போகின்றீர்கள். அங்கே உங்களுடைய தாத்தாவிற்கு திருமணமாவதற்கு முன்பே அவரை கொன்றுவிடுகிறீர்கள்.

அப்படியானால் தாத்தாவிற்கு திருமணம் ஆகாது. ஆகவே உங்களுடைய அப்பா பிறந்திருக்க மாட்டார். அப்பா பிறக்கவில்லை என்றால் நீங்கள் பிறந்திருக்க மாட்டீர்கள். பிறகு எப்படி உங்களால் டைம் மெசின் மூலமாக தாத்தாவை கொன்றிருக்க முடியும்.

நீங்கள் தாத்தாவை கொல்லாவிட்டால் அவருக்கு திருமணம் ஆகி உங்களுடைய அப்பா பிறந்திருப்பார். நீங்களும் பிறந்திருப்பீர்கள். டைம் மெசின் மூலமாக உங்களுடைய தாத்தா வாழ்ந்த காலத்திற்கு போய் அவரை கொல்வீர்கள்.

Grandfather Paradox தீர்வு என்ன?

Grandfather Paradox இல் என்ன நடக்கும் என்பதை தீர்மானமாக சொல்ல முடியாது. அப்படி நீரூபனமாக சொல்ல முடியாது என்பதால்தான் அது Pradox என்கின்றோம்.

சில பேருடைய கருத்து காலப்பயணம் என்ற ஒன்றே கிடையாது பிறகு எப்படி போய் தாத்தாவை கொள்ள முடியும் என்கின்றனர். வேறு சிலர் தாத்தாவை கொல்லும் இடத்தில் Multiverse Theory எனும் Concept-ஐ கொண்டுவருகின்றார்கள்.

எதுவுமே நிரூபிக்கப்படாதவைதான். காலப்பயணம் சாத்தியமானால் மட்டுமே இதற்கான விடையை கண்டுபிடிக்க முடியும்.

காலப்பயணம் நிஐ வாழ்க்கையில் சத்தியப்படுகின்றதோ இல்லையோ ஆனால் டைம் ராவல், Paradox போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்வதில் சுவாரஸ்யம் இருக்கின்றது.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading