சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்

Last updated on August 30th, 2023 at 12:57 pm

தமிழர்களின் பண்டிகைகளில் சித்திரை புத்தாண்டு மக்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளில் முக்கியமானது. சித்திரை மாதம் ஆரம்பிக்கும் போது சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து புதிய காரியங்களை ஆரம்பிப்பதற்காக காத்திருப்பவர்கள் பலர். சித்திரை தமிழர்களின் புதிய ஆண்டின் தொடக்கமாக கருதப்படுவதால் சித்திரைப் புத்தாண்டில் நல்ல காரியங்களை புத்துணர்வுடன் தொடங்குவதற்கு மக்கள் விரும்புவார்கள்.

உலகளவில் ஆங்கில வருடத்தின் ஆரம்பமாக தை மாதம் கொண்டாடப்படுகின்றது. தமிழ் நாட்காட்டியின் படி தமிழ் வருடத்தின் தொடக்க நாளாக சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது.

ஆனால் தமிழ் வருடத்தின் தொடக்கம் எது? என்பதில் பலருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ஒரு தரப்பினர் தமிழர்களின் வருட ஆரம்பம் தை எனவும், இன்னொரு தரப்பினர் தமிழர்களின் வருடம் ஆரம்பிப்பது சித்திரை எனவும் வேறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளார்கள். எது எவ்வாறாயினும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் காலம் காலமாக தொடர்ச்சியமாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை சித்திரைப்புத்தாண்டு தமிழ் சிங்களப் புத்தாண்டு என்று அழைக்கப்படுகின்றது. சித்திரைப்புத்தாண்டு சிங்கள மக்களாலும் கொண்டாடப்படுகின்றது. தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்துகொண்டாடுவதால் தமிழ் சிங்களப் புத்தாண்டு என அழைக்கப்படுகின்றது. உலகளவில் பார்த்தால் இலங்கை, இந்தியாவுடன் மற்றும் தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் தமிழ் மக்கள் சித்திரைப் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

சித்திரைப் புத்தாண்டில் நிறைய பாரம்பரியங்கள், மரபுகள் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

சித்திரைப் புத்தாண்டு தினத்தில் அதிகாலை எழுந்து மருத்து நீர் வைத்து நீராடுவது மரபு. மருத்து நீர் என்பது இயற்கையில் கிடைக்கின்ற மூலிகைப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்ற நீர் ஆகும். மருத்து நீரினை கோயில்களில் பெற்றுக்கொள்ள முடியும். மருத்து நீரை தலையில் வைத்து நீராடுவது நம்மை சுத்தப்படுத்தும் முறையாக கருதப்படுகின்றது.

சித்திரைப் புத்தாண்டில் பின்பற்றப்படும் இன்னொரு மரபு கைவிசேடம் வழங்குதல். கைவிசேடம் என்பது புத்தாண்டு தினத்தில் பெரியோர்களால் வெற்றிலை பாக்குடன் பணம் வழங்கப்படுவது ஆகும். இன்று வீடுகளில் மட்டுமல்லாது, தொழில் நிறுவனங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள் போன்ற இடங்களில் கைவிசேடமாக சிறுதொகை வழங்கப்படுகின்றது. புதிய ஆண்டின் ஆரம்பத்தில் கைவிசேடம் வழங்குவது அந்த வருடத்தில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ஒரு பண்டிகை நாளில் உணவுகள் இடம்பெறாமல் எப்படி? சித்திரைப் புத்தாண்டு மகிழ்ச்சியமாக கொண்டாடப்படும் வருடத்தின் ஆரம்பமாகும். எந்தவொரு சைவசமயப் பண்டிகையாக இருந்தாலும் அங்கே அசைவ உணவுகளுக்கு இடமில்லை. நாமும் சித்திரைக் கொண்டாட்டத்தில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சித்திரைக் கொண்டாட்டத்தில் பலகாரங்கள்/சிற்றுண்டிகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. பலகாரங்கள் தயாரித்து குடும்பத்துடன், உறவினர்களுடன், அயலவர்களுடன் பகிரந்துண்பது பகிர்ந்துண்ணும் பண்பையும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகின்றது.

சித்திரைப் புதுவருடம் என்று கூறும் போது எனக்கு முதலில் நினைவுக்கு வருவது சித்திைரப்புத்தாண்டு விளையாட்டுக்கள். சித்திரைப் புத்தாண்டு நெருங்கும் போது ஆங்காங்கே பல இடங்களிலும் விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். மரதன் ஒட்டம், சறுக்கு மரம் ஏறுதல், தலையணைச் சண்டை, கயிறிலுத்தல், முட்டி உடைத்தல் போன்று ஏராளமான விளையாட்டுக்கள் பாரம்பரியமாக பின்பற்றப்படுகின்றது.

இவற்றைப் போன்று பல விளையாட்டு நிகழ்வுகள், இனிமையான உணவு வகைகள், உறவினர்களை சந்திக்கும் நிகழ்கள், கலைக் கலாசார நிகழ்வுகள், சமயம் சார்ந்த நிகழ்வுகள் போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கிய பண்டிகை சித்திரைப் புத்தாண்டு.

சித்திரைப் புத்தாண்டு தமிழ் வருடத்திற்கான ஆரம்பமாக கொண்டாடப்படுவதோடு சித்திரைப் புத்தாண்டு முழுவதுமே மகிழ்ச்சியை தரக்கூடிய கொண்டாட்டங்களால் நிறைந்துள்ளது. நாமும் பாரம்பரியங்களை தொடர்ச்சியாக பேணும் வகையில் சித்திரைப் புத்தாண்டை தொடர்ச்சியாக பேணும் வகையில் மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading