கூகுள் தேடுபொறி எவ்வாறு இயங்குகிறது

Last updated on February 15th, 2024 at 06:40 pm

நீங்கள் இந்தப்பதிவை வாசித்துக்கொண்டிருந்தால் கூகுள் என்ற பெயர் தெரியாமல் இருக்க மாட்டீர்கள். ஏதேனும் தகவல் தேவைப்பட்டாலோ, சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதற்கோ, தேடல்களை மேற்கொள்வதற்கோ கூகுள் தேடுபொறியை தான் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றார்கள். நீங்கள் ஏதேனுமொரு விடயத்தைப் பற்றி கூகுளில் தேடுகின்ற போது நிறைய முடிவுகள் வரிசைப்படுகின்றன.

உங்களைப் போலவே நிறைய மக்களால் பயன்படுத்தப்படுகின்ற கூகுள் தேடுபொறியானது எவ்வாறு நமக்கு முடிவுகளை கொண்டு வந்து தருகின்றது? கூகுள் தேடல் எவ்வாறு வேலை செய்கிறது? போன்ற விடயங்களைப் பற்றியே இந்தப் பதிவின் மூலமாக பார்க்கப்போகின்றோம்.

இணைய உலகில் ஏராளமான இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் காணப்படுகின்றன. நாம் ஒரு விடயத்தைத் தேடும்போது தேடலுக்குப் பொருத்தமான விடயங்களின் இணைப்புகளைதான் (Links) கூகுள் ஆனது தேடல் முடிவுகளாக வரிசைப்படுத்துகின்றது.

கூகுள் மட்டுமல்லாமல் எல்லாத் தேடு பொறிகளும் தங்களுக்கென ஒரு Automated Programs மற்றும் Algorithms போன்றவற்றைக் கொண்டிருக்கும். புதிதாக ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டாலோ அல்லது ஒரு இணையத்தளத்தில் புதிதாக ஏதாவது Update செய்யப்பட்டாலோ கூகுளினுடைய web crawler எனப்படும் Automated Program ஆனது அந்த வலைத்தளத்தை முழுவதுமாக பகுப்பாய்வு (Analyze) செய்யும்.

அந்த இணையத்தளத்திலோ அல்லது இணையப்பக்கத்திலோ என்ன உள்ளடக்கம் (Content) காணப்படுகின்றது, என்ன தலைப்பில் Content உள்ளது, அந்த இணையத்தளத்தில் உள்ள படங்கள், இணைப்புக்கள் மற்றும் வேறு விடயங்களை முழுமையாக பகுப்பாய்வு செய்யும்.

கூகுள் தான் பகுப்பாய்வு செய்ததை வைத்து அந்த இணையத்தளம்/இணையப்பக்கத்தினை கூகுள் தன்னுடைய Server-இல் வரிசைப்படுத்தி (Indexing) வைத்திருக்கும்.

இப்போது யாராவது ஏதேனுமொரு விடயத்தைப் பற்றி கூகுளில் தேடுகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் கூகுளானது பயனர் தேடுகின்ற விடயத்தை ஆராய்ந்து அதற்கேற்றாற் போல் தான் வரிசைப்படுத்தி வைத்திருக்கின்ற பக்கங்களை தேடுகின்ற நபருக்கு வரிசைப்படுத்தி காட்சிப்படுத்தும். அவைதான் நாம் கூகுளில் தேடும் போது கிடைக்கின்ற முடிவுகளாகும்.

மேலும், வரிசைப்படுத்தி வைத்திருக்கின்ற பக்கங்களை பயன்படுத்துவர்கள் எவ்வளவு நேரம் அந்த பக்கத்தில் இருக்கின்றார்கள், பக்கத்தினுடைய வடிவமைப்பு, SEO எந்த அளவிற்கு இருக்கின்றது, Keywords, Backlinks போன்ற பல்வேறுபட்ட விடயங்களை பார்த்து வரிசைப்படுத்தி கூகுளில் முன்னிலைக்கு கொண்டு செல்வதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும்.

இதனைத் தவிர உங்களுடைய தேடலை வினைதிறனாக்குவதற்காக சில வேலைகளை கூகுள் செய்யும். நீங்கள் ஏற்கனவே தேடியிருக்கின்ற தேடல்களையும் உங்களுடைய விருப்பங்களையும் அடிப்படையாக வைத்து கூகுள் தனது முடிவுகளை காட்சிப்படுத்தும். மற்றும் நீங்கள் வசிக்கும் நாட்டினை அடிப்படையாக வைத்தும் தேடல் முடிவுகளை காட்சிப்படுத்தும்.

நாம் ஒரே வரியில் தேடி காட்சிப்படுத்தப்படுகின்ற கூகுள் தேடல் முடிவுகளிற்கு பின்னால் இவ்வளவு செயற்பாடுகள் நடைபெறுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading