பிளொக்செயின் என்றால் என்ன?

Last updated on February 4th, 2024 at 10:34 pm

Blockchain தொழினுட்பத்தை மையமாக வைத்து Web 3.0, NFT, Cryptocurrency போன்ற பல்வேறுபட்ட தொழினுட்பங்கள் கட்டமைக்கப்படுவதால் பிளொக் செயின் முக்கியமானதொன்றாக உள்ளது.

Blockchain தொழினுட்பம் சதொஷி நாகமொட்டோ (Satoshi Nakamoto) என்பவரால் 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவர்தான் உலகின் முதல் கிரிப்டோகரன்சியான பிட்கொயினை உருவாக்கியவர். பிட்கொயினை பரிமாற்றம் செய்யும் நோக்கிற்காக பிளாக்செயின் தொழினுட்பத்தை உருவாக்கினார்.

பிளொக்செயின் உருவாக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் வங்கி போன்ற மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல் பாதுகாப்பாக பிட்கொயின் பரிமாற்றம் செய்வதற்காக பிளொக்செயின் தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டது. இன்று கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தைத் தாண்டி தரவுப் பாதுகாப்பு என்ற நோக்கிற்காக Blockchain தொழினுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.

Block Chain என்ற வார்த்தையிலிருந்தே Block Chain-ஐ புரிந்துகொள்ள முடியுமாக இருக்கும். தரவுகளானது Block-களாக சேமிக்கப்பட்டு Chain போன்று ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டிருப்பதால் Blockchain என்று சொல்லப்படுகின்றது. பல Blockchain-களை சேர்த்து Blockchain Network என்று அழைக்கப்படுகின்றது.

பிளொக்செயின் பயன்படுத்தப்படுவதன் நோக்கம்

இன்றைய டிஜிற்றல் உலகில் ஒவ்வொரு தனிமனிதனுடைய தரவுகளும் உலகில் ஏதோவொரு இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை. உதாரணமாக நம்மை பற்றிய தரவுகள் கூகுள், மெட்டா போன்ற இணையத்தை அடிப்படையாகக்கொண்ட நிறுவனங்களிடம், வங்கிகளிடம், அரசாங்கத்திடம் என பல இடங்களிடமும் இருக்கும்.

நமது தரவுகள் இன்னொருவரிடம் வெளிப்படையாக இருப்பதால் நமது தரவுக்களுக்கான பாதுகாப்பு, பிரைவசி போன்றவை இல்லாமல் உள்ளது. ஒரு மனிதனினுடைய தரவுகள் மூலமாக அவனை கட்டுப்படுத்த முடியும்.

இணையத்தில் தரவுகளை பயன்படுத்துகின்ற இடங்களில் தரவுகளை நாம் பாதுகாப்பதற்கு பிளொக்செயின் தொழினுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

அதே போன்று, வங்கி போன்ற இடைநிலையில் உள்ள நபர்களை தவிர்ப்பதற்கு பிளொக்செயின் பயன்படுகின்றது. பணம் அனுப்புவது என்று எடுத்துக்கொண்டால், வங்கி என்ற மூன்றாவது நபர் தேவைப்படுவார். பணம் அனுப்புவதற்காக நம்மிடம் மேலதிகமாக பணமும் அறவிட்டுக் கொள்வார்கள். ஆனால் பிளொக்செயின் தொழினுட்பத்தின் மூலமாக இடைநிலையில் யாருமில்லாமல் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

நமது தனிப்பட்ட தரவுகளை நாமே பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், பணம் அனுப்புவது போன்ற வேலைகளில் மூன்றாம் நபரின் தலையீட்டினை இல்லாமல் செய்வது போன்ற நோக்கங்களிற்காக பிளொக்செயின் தொழினுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

பிளாக்செயின் எவ்வாறு வேலை செய்கிறது

பொதுவாக குறிப்பிட்ட தரவுத்தொகுதி என்று எடுத்துக்கொண்டால் அவை ஒரே இடத்தில் சேமிக்கப்படும். ஆனால் பிளொக்செயினில் தரவு சேமிப்பு வித்தியாசமானதாக இருக்கும். தரவுகள் Block Block ஆக சேமிக்கப்படும். ஒவ்வொரு Block-களிலும் உள்ள தரவுகள் Encrypt செய்யப்பட்டு அவற்றிற்கு Hash Value ஒன்று வழங்கப்படும். 

தரவுகள் சேமிக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு Block-ம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு Block-ம் முந்தைய Block இன் Hash Value மற்றும் அடுத்த Block இன் Hash Value போன்றவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இப்படி பல Block-கள் உருவாக்கப்பட்டு சங்கிலி (Chain) போன்று இணைக்கப்பட்டு Blockchain உருவாக்கப்படும். பல Blockchain-கள் சேர்ந்து Blockchain Network ஒன்று உருவாக்கப்படும்.

பிளொக்செயின் மிகவும் பாதுகாப்பானது. ஒரு தடவை தரவு ஒன்றினை இணைத்துவிட்டால் அதனை மாற்ற முடியாது. பிளொக்செயினின் இடையில் புதிதாக ஒரு Block ஐ செருக முடியாது. யாராலும் Hack செய்ய முடியாது.

ஒரு Hacker ஒரு Block இல் உள்ள தரவுகளை Hack செய்து தரவுகளை மாற்ற நினைக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு குறிப்பிட்ட Block இன் Hash Value மாறிவிட்டால் அதற்கு முந்தைய மற்றும் அடுத்த Block-களுடன் அதே Hash Value இணைக்கப்பட்டிருக்கும் என்பதால் அடுத்த மற்றும் முந்தைய Block-களையும் Hack செய்ய வேண்டும். அப்படியே தொடர்ச்சியாக எல்லாவற்றையும்  Hack செய்ய வேண்டும். அதற்கான சாத்தியம் இல்லை.

சொல்லப்போனால், பிளாக்செயின் தொழினுட்பத்தில் சேமிக்கப்படும் தரவுகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லலாம்.

பிளொக்செயின் எங்கு பயன்படுத்தப்படுகின்றது

Blockchain முதலில் பிட்கொயின் பரிமாற்றம் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது. இன்று Bitcoin போன்று பல கிரிப்டோகரன்சிகள் இருக்கின்றன. எல்லா கிரிப்டோகரன்சிகளும் Blockchain Networks மூலமாகவே இயங்குகின்றன.

வங்கி போன்ற மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல் இரண்டு பேர் நேரடியாக பணம் பரிமாற்றம் (Cryptocurrency) செய்துகொள்வதற்கு பிளொக்செயின் தொழிநுட்பமே உதவி செய்கின்றது. வங்கி முறையை பிளொக்செயின் தொழினுட்பத்தில் கட்டமைக்க முடியும்.

பிளொக்செயின் தொழினுட்பத்தை வைத்து Voting System ஒன்றை உருவாக்கிக்கொள்ளலாம். இதன் மூலமாக தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கலாம்.

அரசாங்கத்தில் உள்ள சில விடயங்களை கட்டமைப்பதற்கு பிளொக்செயினைப் பயன்படுத்தலாம். தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கும் பிளாக்செயினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நவீன தொழினுட்பங்களாக உள்ள NFT, Web 3.0, Cryptocurrency போன்ற தொழினுட்பங்கள் பிளாக்செயினை அடிப்படையாக கொண்டுதான் இயங்குகின்றது.

பிளொக்செயின் நிறைய வழிகளில் மனிதனுக்கு உதவியாக உள்ளது. எதிர்காலத்தில் பிளொக்செயினை அடிப்படையாக வைத்து இயங்குகின்ற நிறையத் தொழினுட்பங்கள் உருவாகும் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading