Assets and Liabilities

Last updated on December 3rd, 2023 at 09:44 pm

ஒருவர் பணக்காரர் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். அதிகமாக சம்பாதித்தால் பணக்காரன் ஆக முடியுமா? அதிகமாக சம்பாதிப்பதால் மட்டும் ஒருவனால் பணக்காரனாக ஆக முடியாது.

சம்பாதிக்கின்ற பணம் அனைத்தும் கடனை செலுத்தவே சரியாகிவிட்டால் அதிகமாக சம்பாதித்தாலும் அவரிடம் பணம் இருக்காது.

பணக்காரனாக மாற வேண்டுமானால் பணம் பற்றிய அறிவு இருக்க வேண்டும். பணம் பற்றி அறிவு இருந்தால் மட்டுமே சம்பாதிக்கின்ற பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும். அது தெரிந்தால்தான் பணக்காரனாக மாற முடியும்.

Lottery மூலமாக பெரிய அளவில் பணம் கிடைப்பவர்கள் சில நாட்களிலேயே முழு பணமும் செலவழிந்து மறுபடியும் ஏழையாகி விடுபவர்கள் பலர். காரணம் அவர்களிடம் பணம் இருக்கின்றது ஆனால் அதனை எப்படி கையாண்டு பணத்தை பெருக்க வேண்டும் என்பது தெரியாது.

நீங்கள் பணம் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் அதனுடன் தொடர்புடைய புத்தகங்கள் படிப்பதன் மூலம் பணம் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். பணம் பற்றியும் பணக்காரன் ஆவது பற்றியும் கூறுகின்ற புத்தகங்கங்களில் Rich Dad Poor Dad (பணக்கார தந்தை ஏழைத் தந்தை) புத்தகம் மிகவும் முக்கியமானது.

புத்தகத்தின் மூலமாக எழுத்தாளர் பணம் பற்றிய ஏராளமான பாடங்களை (Lessons) நமக்கு சொல்லித் தந்திருக்கின்றார்.

அவர் கூறிய பாடங்களில் Asset and Liabilities பற்றி கூறியது முக்கியமானது. பணம் அதிகமாக சேர்க்க வேண்டும் என்றால் Asset மற்றும் Liabilities இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

Asset Meaning in Tamil: Asset என்பது தமிழில் சொத்துக்கள் என்று பொருள்.

Liabilities Meaning in Tamil: Liabilities என்பது தமிழில் பொறுப்புக்கள், கடன்கள் என்று பொருள்.

பணக்காரர்கள் Asset களை வாங்குகின்றார்கள். ஏழைகள் Asset என நினைத்து Liabilities ஐ வாங்குகின்றார்கள்.

Assets என்றால் என்ன?

Asset என்பதனை தமிழில் சொத்துக்கள் என்று சொல்லலாம். உங்களுக்கு பணத்தை சம்பாதித்து தருகின்றவை சொத்துக்கள் (Asset) ஆகும்.

நீங்கள் ஒரு வீடு வைத்திருக்கின்றீர்கள் அதனை வாடகைக்கு விடுகின்றீர்கள் என்றால் அது ஒரு Asset ஆகும். வீட்டிலிருந்து வாடகை வடிவத்தில் பணம் சம்பாதித்துத் தருவதனால் அது ஒரு Asset ஆகும்.

மேல கூறிய வீட்டினை போலவே உங்களுக்கு பணத்தை சம்பாதித்து தருகின்ற Bonds, Stocks, Rental Properties போன்றவைகள் Assets இற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

Liability என்றால் என்ன?

Liability என்பதனை தமிழில் கடன்கள், பொறுப்புக்கள் என்று சொல்லலாம். உங்களிடமிருந்து பணத்தை எடுத்துக்கொள்கின்றவை  Liabilities ஆகும். 

நீங்கள் கடன் (Loan) வாங்கி ஒரு வீடு கட்டுகின்றீர்கள் என்றால் அது ஒரு Liability ஆகும். காரணம் அந்த வீட்டிற்கான கடனை ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும். உங்களிடமிருந்து அந்த வீடு பணத்தை எடுத்துக்கொள்வதனால் அது ஒரு Liability ஆகும்.

உங்களிடமிருந்து பணத்தை எடுத்துக்கொள்கின்ற அனைத்துமே வீடு, கார், EMI இல் வாங்குகின்ற பொருட்கள், கடன் (Loan) போன்றவைகளை Liabilities-இற்கு உதாரணமாகக் கூறலாம்.

பணக்காரனாக மாற விரும்பினால் Asset களை உருவாக்க வேண்டும். Asset கள் மூலமாக கிடைக்கின்ற வருமானத்தை வைத்து உங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ளலாம். பணக்காரர்கள் அதையே செய்கின்றார்கள்.

ஏழைகள் சம்பாதிக்கின்ற பணத்தை வைத்து வீடு, கார் போன்றவற்றை வாங்குவார்கள். அது மட்டும் இல்லாமல் கடன், EMI போன்றவற்றையும் உருவாக்கிவிடுவார்கள்.

இதன் மூலம் எந்தவித வருமானமும் கிடைக்காது. மாறாக சம்பாதிக்கின்ற பணம் மட்டும் செலவழிந்துகொண்டிருக்கும். பெரும்பாலானோர் பணம் சேர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணமும் இதுதான்.

இதனால் தான் பணக்காரராக விரும்புபவர்கள் Assets மற்றும் Liability பற்றிய புரிதலை கொண்டிருக்க வேண்டும். 

பணம் பற்றி தெரிந்து கொள்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. இணையம், புத்தகங்கள் மூலமாக ஏராளமான விடயங்களை கற்றுக்கொள்ளலாம். எல்லோருமே அதிகமாக பணம் சேர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading