நான் வாங்கிய முதல் புத்தகங்கள்

Last updated on November 9th, 2023 at 10:38 pm

நிறையக் காலமாகவே வீட்டிலே ஒர் புத்தக இறாக்கை இருந்தது. அதே போல ஒர் பெட்டியும் இருந்தது. அந்தப் பெட்டியில் சில பழைய புத்தகங்களும், கிழிந்துபோன புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அந்தப் புத்தகங்கள் இறாக்கையில் அழகாக அடிக்கிவைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டிலே நான் பிறப்பதற்கு முன்பிருந்தே இறாக்கையும் புத்தகங்களும் இருக்கின்றன. ஆனால் நான் எண்ணுகின்ற மாதிரியாக அந்தப் புத்தகங்கள் இறாக்கையில் அடுக்கப்பட்டு அமைப்பாக பராமரித்து வைக்கப்படவில்லை.

ஒரு வேளை புத்கங்களை பெட்டியில் போட்டுவைக்காமல் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தால் அந்த நூல்கள் சேதமடையாமல் நல்ல நிலையில் இருந்திருக்கலாம்.

நான் சிறு வயதாக இருக்கும் போது அதில் நிறைய புத்தகங்களை எடுத்துப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவற்றை முழுமையாக வாசித்ததில்லை. அந்த நூல்களை இறாக்கையில் நான் அடுக்கி வைத்திருந்தேன். ஆனால் அப்போது மிகச்சிறிய வயது என்பதால் புத்தகங்கள் சேமிக்க வேண்டும், புத்தகங்கள் வாசிக்க வேண்டும், நூலகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இருக்கவில்லை.

நான் பெரிதாக புத்தகங்கள் வாசித்ததில்லை. சிறுவர்களுக்கான கதைப்புத்கங்கள் படித்திருக்கிறேன். வேறு நூல்கள் படித்ததில்லை. பின்னர் புத்தகங்கள் படிக்கிற பழக்கம் எனக்கு இருந்ததில்லை.

தற்போது இணையத்தில் நிறையவே வாசிப்பேன். ஆனாலும் புத்தகமாக எதையும் படிப்பதில்லை. கடந்த சில காலங்களாக புத்கங்கள் பற்றி, புத்தகச்சுருக்கம், புத்தகங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், நாவல்கள் போன்ற பலவற்றை யூடியூப் இல் காணொளிகளாக பார்ப்பேன்.

புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் நிறைய காணொளிகளையும், பதிவுகளையும் நிறையவே பார்க்கூடியதாக இருந்தது.

அதனாலேயோ என்னவோ தற்போது புத்தகங்கள் வாசிக்க வேண்டும் எண்ணம் எனக்குள் ஆழமாக உருவாகியுள்ளது. நிறைய புத்தகங்கள் வாங்கி இறாக்கையில் அடுக்கி வைக்க வேண்டும். வீட்டில் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

மொபைலில் E-book வாசிப்பதை விட வீட்டில் புத்தகங்களை அடுக்கி வைத்து வாசிக்கிற உணர்வு தனித்துவமாக இருக்கும் என்று பலர் சொல்கிறார்கள். அதனை அனுபவிக்க எனக்கும் விரும்பம்தான்.

அதனாலே புத்தகங்களை வாங்கி வாசிக்கலாம். நிறைய புத்தகங்கள் சேகரிக்கலாம். சிறிதாக நூலகம் ஒன்றை அமைக்கலாம் என்று முடிவெடித்திருக்கிறேன். கடந்தவாரம், எந்த மாதிரியான புத்தகங்களை படிக்கலாம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டாயமாக வாசிக்க வேண்டிய நூல்கள் பற்றி இணையத்தில் தேடி நூல்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்து வைத்திருக்கிறேன். இணையத்தில் பலரும் பல்வேறு புத்தகங்களை பரிந்துரை செய்தார்கள்.

தமிழில், ஆங்கிலத்திலும் மட்டும் இல்லாமல் வேற்றுமொழி நூல்களும் வாசிக்க வேண்டும். உதாரணமாக ரஷ்ய இயக்கியங்கள் படிக்க வேண்டும் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கும். ஆங்கிலத்தில் ஆரம்பத்தில் முழுமையாக நூல் ஒன்றை வாசிக்க எனக்கு கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் புத்தகங்கள் வாசிப்பதன் மூலமாக ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொள்ள முடியும். புத்தகங்களை குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிவிடாமல் எல்லா வகையான புத்தகங்களும் வாங்கி படிக்க வேண்டும்.

நான் தற்போது இரண்டு நூல்கள் வாங்கியிருக்கிறேன். அந்த புத்தகங்கள் வாங்குவதற்கு முன் எங்கே, எப்படி புத்தகங்களை வாங்குவது என்று யோசித்தேன். நான் இணையத்தில் தேடிப்பார்த்தேன் இலங்கை முழுவதும் புத்தகங்களை விநியோகம் செய்யும் தளங்கள் சில இருக்கின்றன. நாம் விரும்பும் புத்தகங்களை அதில் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் இணையத்தில் எந்தவொரு புத்தகமும் வாங்கவில்லை.

நேரடியாக கடைக்கு சென்றுதான் வாங்கினேன். எனக்கு யாழ்ப்பாணத்தில் எங்கு புத்தகக்கடைகள் இருக்கின்றன? நான் தேடுகிற புத்தகங்கள் அங்கு கிடைக்குமா? விலைகள் எப்படியிருக்கும் என்று எதுவுமே தெரியாது. ஏனென்றால் இதுவரை பாடப்புத்தகங்களை தவிர வேறு நூல்கள் வாங்கியது கிடையாது. தெரியாவிட்டால் என்ன? தேடித்தெரிந்துகொள்ளலாம்.

நான் வாங்கிய நூல்களில் ஒன்று புயலியே ஒரு தோணி எனும் நாவல் மற்றையது பொருளாதார அடியாளின் வாக்குமூலம் எனும் உலக அரசியல் பற்றிய புத்தகம். இவற்றிலிருந்து புத்தக வாசிப்பை ஆரம்பிக்கிறேன்.

நான் ஆரம்பத்தில் கூறிய என் வீட்டிலிருந்த பழைய புத்தக இறாக்கையை நானே அழகாக வர்ணம் பூசி மேம்படுத்தியிருக்கிறேன். அதற்கான காரணம் நான் நிறைய புத்தகங்கள் வாங்கி சேகரித்து அந்த இறாக்கையில் அடுக்கி வைக்க வேண்டும் என்ற ஆசைதான். நான் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்த பழக்கம் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை எதிர்காலத்தில்தான் பார்க்கவேண்டும்.

நான் புத்தகங்கள் வாங்கியவுடன் புத்தகத்தின் சில பக்கங்களை புரட்டிப்பார்த்தேன். புத்தகத்தை கையால் தொட்டு பக்கங்களை புரட்டுவது தனியொரு உணர்வுதான். நான் வாங்கிய நூல்களை வாசித்து முடித்துவிட்டு என்னுடைய கருத்துக்களை நிச்சயமாக எழுதுவேன்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

4 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading