Cloud Gaming எனும் கேமிங் தொழினுட்பம்

Last updated on January 17th, 2024 at 04:52 pm

ஒரு காலத்தில் வெறும் பொழுதுபோக்காக அறியப்பட்ட கேமிங் (Gaming) இன்று வளர்ச்சியடைந்த மிகப்பெரிய துறையாக மாறியுள்ளது. அதிகளவில் பணம் சம்பாதித்துத் தரக்கூடிய துறையாக இன்றைய கேமிங் துறை வளர்ந்துள்ளது. எதிர்காலத்தில் கேமிங் இன்னும் பெரியளவில் வளர்ச்சியடையும்.

கேமிங் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது மாற்றங்களிற்கு உள்ளாகி வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது. இன்று ஒரு வீடியோ கேம் ஆட வேண்டும் என்றால் நல்ல வன்பொருள் (Hardware) கொண்ட கணணி தேவைப்படும். வீடியோ கேம்-களின் அளவும் பெரிதாக மாறிக்கொண்டே வருகின்றது.

Gaming என்று வந்துவிட்டாலே முதலில் கவனிப்பது Hardware-தான். நல்ல Hardware இல்லாதது நிறையப் பேரால் பெரிய கேம்ஸ் விளையாடுவது பிரச்சினையாக இருக்கின்றது.

Cloud Gaming இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக அமைந்திருக்கின்றது.

Cloud Gaming என்றால் என்ன?

வீடியோ கேம் ஒன்று ஆட வேண்டும் என்றால் முதலில் உங்களுடைய கணணியில் நீங்கள் விளையாட விரும்பும் கேம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். உங்களுடைய கணணி கேம்-ஐ Process செய்யும். நீங்கள் கேம்-ஐ Control செய்து விளையாட முடியும்.

ஆனால் Cloud Gaming என்பது இதிலிருந்து மாறுபட்டது.

கேம்ஸ்-ஐ உங்களுடைய கணணியில் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. கேம்-ஸ் எல்லாம் Server-இல் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். கேமிங் Process Server-இல் தான் நடைபெறும். உங்களுடைய கணணியிலிருந்து வழமையாக கேம் ஆடுவதை போல Control செய்தால் மட்டும் போதுமானது.

இந்த மாதிரியான கேமிங்-ஐ Cloud Gaming என்று சொல்கின்றோம்.

Cloud Gaming தொழினுட்பத்தை இலகுவாக விளங்கிக் கொள்ள Cloud Gaming-ஐ Netflix, Amazon Prime போன்ற Streaming தளங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

Netflix

சில காலங்களுக்கு முன்னர் ஒரு திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால், நம்மிடம் DVD மாதிரியான சேமிப்பு சாதனங்கள் (Storage Devices) இருக்க வேண்டும். அதில் படத்தை சேமித்து வைத்து விரும்பிய நேரங்களில் பார்த்துக்கொள்ளலாம்.

ஆனால் இன்று அந்தத் தேவை இல்லை. Netflix, Amazon Prime போன்ற OTT தளங்கள் தங்களுடைய Server-களில் திரைப்படங்களை பதிவேற்றம் செய்து வைத்திருப்பார்கள். நாம் Subscription மூலமாக பணம் செலுத்தி மொபைலிலேயே திரைப்படங்களை பார்த்துக்கொள்ள முடியும்.

Cloud Gaming என்பதும் இதே போன்றதுதான், நாம் Hard Disk-இல் வீடியோ கேம்ஸ் இன்ஸ்டால் செய்து விளையாடுவதற்குப் பதிலாக கேம்ஸ்-ஐ Server இன்ஸ்டால் செய்து வீட்டிலிருந்து விளையாட முடியும்.

OTT தளங்களைப் போலவே Cloud Gaming சேவையும் Subscription முறையில் நம்மால் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். Cloud Gaming சேவையை வழங்குகின்ற நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. தற்போதுதான் Cloud Gaming வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கின்றது. நமது நாடுகளில் இன்னும் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. ஆனால் எதிர்காலத்தில் உலகளவில் Cloud Gaming கேமிங் துறையில் பெரியவளவில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

Cloud Gaming தற்போது உருவான தொழினுட்பம் இல்லை. 2000-ஆம் ஆண்டுகளிலேயே G-Cluster எனும் நிறுவனம் Cloud Gaming யோசனையை ஆரம்பித்து வைத்தது.

ஆனால் அப்போது இருந்த இணையம், தொழினுட்பத்திற்கு Cloud Gaming பெரிதாக வெற்றியளிக்காத ஒன்றாக இருந்திருக்கலாம்.

அதன் பின்னர் 2010-இல் OnLive என்ற கம்பெனி Cloud Gaming மூலமாக எல்லோரும் கேம்ஸ் ஆடக்கூடிய வகையில் அறிமுகப்படுத்தியது. இதுதான் முதல் Cloud Gaming Service என்று சொல்லலாம்.

இப்போது Sony, Microsoft என பல நிறுவனங்கள் Cloud Gaming-இல் ஆர்வம் காட்டுகின்றன. காரணம் தற்போது தொழினுட்பத்தின் வளர்ச்சியால் பல்வேறு வகையான சேவைகளும் Cloud-ஐ மையமாகக் கொண்டு கட்டமைக்கப்படுகின்றன. அதே போன்றுதான் எதிர்காலத்தில் கேமிங்-ம் Cloud-ஐ அடிப்படையாக கொண்டு இயங்கும்.

Cloud Gaming இன் நன்மை மற்றும் பிரச்சினை

Cloud Gaming என்பது கேமிங்-இன் அடுத்த கட்ட வளர்ச்சி. Cloud Gaming-இன் வளர்ச்சியால் கேமிங் துறையும் பெரியளவில் வளர்ச்சியடையப்போகின்றது. PC-யில் இன்ஸ்டால் செய்து விளையாடுவதை விடவும் நிறைய நன்மைகள் Cloud Gaming-இல் இருக்கின்றன.

ஒரளவான PC-யும் நல்ல இன்டர்நெட் இணைப்பும் இருந்தாலே விரும்பிய கேம்களை விளையாடலாம். நல்ல Hardware உள்ள PC தேவை என்ற அவசியம் இருக்காது. அடிக்கடி Update செய்ய வேண்டிய தேவையும் இருக்காது.

PC இல்லாவிட்டாலும் கூட மொபைல் மூலமாகவே பெரியளவிலான கேம்ஸ்-ஐ விளையாட முடியும். இதனால் எல்லோராலும் எல்லா கேம்களையும் விளையாடி அனுபவிக்கின்ற வாய்ப்பு கிடைக்கும்.

கேமிங் துறையில் Cloud Gaming என்பது நல்ல முன்னேற்றம். ஆனால் அதில் சில பிரச்சினைகளும் இருக்கின்றன.

Cloud Gaming இன்டர்நெட் மூலமாக இயக்கப்படுவதால் இன்டர்நெட் இணைப்பு மிக வேகமாக இருந்தால் மட்டுமே கேம்ஸ்-ஐ எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விளையாட முடியும்.

நமக்கும் Server இற்கும் இடையிலான தூரமும் குறைவாக இருக்க வேண்டும். நாம் இங்கே இருந்து கொண்டு Server அமெரிக்கா போன்று தூரத்தில் இருந்தால் Cloud Gaming-ல் பிரச்சினைகள் வரும். வீடியோ கேம்ஸ்-ஐ சேமித்து வைத்துள்ள Server, இன்டர்நெட் இரண்டும் சரியாக இருந்தால் Cloud Gaming நன்றாக வேலை செய்யும்.

எல்லா தொழினுட்பங்களும் வளர்ச்சியடைந்து கொண்டேதான் இருக்கும். அதே போன்றுதான் கேமிங் தொழினுட்பமும். எதிர்காலத்தில் எல்லாராலும் Cloud Gaming மூலமாக கேம்ஸ் ஆடக்கூடியதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading