மெட்டாவேர்ஸ் என்றால் என்ன?

Last updated on January 24th, 2024 at 03:25 pm

மெட்டாவேர்ஸ் (Metaverse) என்பது பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்திய தொழினுட்பம் ஆகும். மெட்டாவேர்ஸ் என்பது மெய்நிகர் தொழினுட்பத்துடன் (Virtual Reality) தொடர்புடைய ஒரு தொழினுட்பம்.

பேஸ்புக் தனது நிறுவனத்தினுடைய பெயரை Meta என்று பெயர் மாற்றம் செய்வதாக 2021-ம் ஆண்டு October மாதம் அறிவித்திருந்தது. பேஸ்புக் நிறுவனத்தின் பிரதானமான எதிர்கால தொழினுட்பத் திட்டமாக மெட்டாவேர்ஸ் இருந்தது. அதனை கருத்திற்கொண்டுதான் பேஸ்புக் என்ற தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா (Meta) என பெயர்மாற்றம் செய்திருந்தது.

1992 இல் நீல் ஸ்டீபென்சன் எழுதிய ஸ்னோ கிராஷ் (Snow Crush) நாவலில் மெட்டாவேர்ஸ் மாதிரியான தொழினுட்பம் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது. மக்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி கிளாஸ் மாதிரியான கருவிகளைப் பயன்படுத்தி டிஐிட்டலில் விர்ச்சுவலாக ஒரு உலகத்தை உருவாக்கி அங்கே ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதாக நாவலில் விபரிக்கப்படுகின்றது.

இந்த நாவல் மட்டுமல்ல ஏராளமான விஞ்ஞானப் புனைவு நாவல்களில் இது மாதிரியான தொழினுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. விஞ்ஞான புனைவு கதைகள், திரைப்படங்களில் பார்த்த தொழினுட்பத்தை மெட்டாவேர்ஸ் மூலமாக நிஜத்தில் பார்க்கமுடியும் என்று சொல்லலாம்.

ஒரு டிஐிட்டல் கிளாஸ் ஒன்றை கண்களில் அணிந்து கொண்டால் அது நாம் புதிய உலகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை நமக்குள் கொண்டுவரும். விர்ச்சுவல் ரியாலிட்டி கேம்ஸ் விளையாடிய அனுபவம் உங்களுக்கு இருந்தால், அதே போன்றுதான் மெட்டாவேர்ஸ் இருக்கும் என்று சொல்லலாம். ஆனால் மெட்டாவேர்ஸ் அவற்றை விட மேம்பட்ட தொழினுட்பமாக இருக்கும்.

Metaverse

மெட்டவேர்ஸ் உலகத்தில் உங்களுக்கென அவதார் (Avatar) ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நிஐ உலகத்தில் உங்களது உடல் இருப்பது போன்று டிஐிட்டல் உலகத்தில் அவதார் இருக்கும். அங்கே ஒருவரை சந்திக்கும் போது அவதார் மூலமாக அவரை நேரில் சந்திப்பதை போன்றுதான் உணர்வீர்கள்.

மெட்டாவேர்ஸ் மூலமாக வீட்டிலிருந்தே உங்களது அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். முதலில் Virtual Reality Box மாதிரியான கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும்.

அங்கே விர்ச்சுவலாக உங்களுடைய அலுவலகம் உருவாக்கப்பட்டிருக்கும். நிஐமான அலுவலகம் போன்ற தோற்றத்தை கொண்டுவரும். உங்களை போன்றே அங்கே மற்ற ஊழியர்களும் அவதார் மூலமாக விர்ச்சுவலாக காட்சியளிப்பார்கள். நிஐமான அலுவலகம் எப்படி இருக்குமோ அதனை விர்ச்சுவலாக காணலாம்.

மெட்டாவேர்ஸ் உலகத்தில் உங்களுக்கென ஒரு வீட்டை அமைத்துக்கொள்ளலாம். உங்கள் வீட்டிற்கு நண்பர்களை வரவழைக்கலாம். அந்த உலகில் விர்ச்சுவலாக எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். யாரையும் சந்தித்துப் பேசலாம்.

மேலே சொன்ன உதாரணத்தை போன்று நிஜ வாழ்க்கையை விர்ச்சுவலாக கொண்டுவருவதுதான் மெட்டாவேர்ஸ். அது ஒரு விர்ச்சுவலான் தனி உலகமாக இருக்கும்.

எப்படி நம்மால் மெட்டாவேர்ஸை பயன்படுத்த முடியும்

ஒர் உண்மை என்னவென்றால் மெட்டாவேர்ஸ் புதிய தொழினுட்பம் கிடையாது. மெட்டாவேர்ஸ் மாதிரியான தொழினுட்பங்கள் ஏற்கனவே இருக்கின்றன.

விர்சுவல் ரியாலிட்டி தொடர்பான தொழினுட்பங்கள் பல வருடங்களாகவே தொழினுட்ப உலகில், தொழிற்துறையில் இருக்கின்றன. ஆனால், நாம் அவற்றை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதில்லை.

உதாரணமாக, விர்ச்சுவலான உலகத்தை உடைய வீடியோ கேம்கள் இருக்கின்றன. அங்கேயும் நமது நண்பர்களை சந்தித்து புதிய உலகத்தில் வாழ்வது போன்றெல்லாம் இருக்கும். மெட்டாவேர்ஸில் செய்யமுடியும் என சொல்லப்படுபவற்றை அங்கேயும் செய்யலாம்.

பேஸ்புக் எனும் மிகப்பெரிய நிறுவனம் இதனையே ஒரு நிறுவனத்தின் திட்டமாக எடுத்து விரச்சுவலான புதிய உலகத்தை உருவாக்குவதால் பெரியளவில் பேசப்பட்டது. மெட்டா நிறுவனம் சொல்வது போன்று நடைமுறை வாழ்க்கையில் மெட்டாவேர்ஸ் எனும் விர்ச்சுவல் உலகத்தை அனுபவிப்பதற்கு பல வருடங்கள் ஆகலாம்.

நாம் இப்போது மெட்டாவேர்ஸ் தொழினுட்பத்தில் ஆரம்ப கட்டத்தில்தான்  இருக்கின்றோம். மெட்டாவேர்ஸ் பயன்படுத்துவதற்கு விர்ச்சுவல் கிளாஸ் மாதிரியான மேம்பட்ட கருவிகள் தேவைப்படும்.

மெட்டா நிறுவனத்தின் இந்தக் கருவிகளை நாம் பணம் செலுத்தி வாங்க வேண்டும். இன்றைக்கு மெட்டாவேர்ஸ் மேல் பலர் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். யாரும் பணம் செலுத்தி கருவிகளை வாங்கி பயன்படுத்துவதை விரும்பமாட்டார்கள்.

மெட்டாவேர்ஸ் போன்ற தொழினுட்பத்தில் மெட்டா நிறுவனம் மட்டுமா ஆர்வம் காட்டுகின்றது என்றால் இல்லை. பல முன்னணி நிறுவனங்கள் இதே போன்ற தொழினுட்பங்களை உருவாக்குவதற்கு முதலீடுகள் செய்துள்ளன.

உதாரணமாக Fortnite, Roblox, Epic Games, Google, Microsoft போன்ற நிறுவனங்கள் இந்த மாதிரியான தொழினுட்பத்தில் ஆர்வம் காட்டுகின்றன. Fortnite என்ற Game மெட்டாவேர்ஸ் போன்ற கருத்தை கொண்டுதான் உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

மெட்டாவேர்ஸ் ஏற்படுத்தப்போகும் விளைவுகள்

மெட்டாவேர்ஸ் நமது நடைமுறை வாழ்க்கையில் வந்தால் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கேள்வி தோன்றலாம். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களை விர்ச்சுவலாக புதிய உலகமாக பயன்படுத்துகின்ற அனுபவங்கள் கிடைக்கும். நிஜ உலகத்தை அனுபவிப்பது போன்று அங்கே விர்ச்சுவல் உலகத்தில் வாழலாம்.

மெட்டாவேர்ஸ் நடைமுறை வாழ்க்கையில் எதிர்மறையான பல விளைவுகளையும் ஏற்படுத்தும். இன்று மொபைல் பயன்பாட்டினால் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்திப்பதே குறைந்துவிட்டது. நிறையப்பேர் நிஜமான உலகத்தை அனுபவிப்பதை விட மொபைல், இணையம் போன்றவற்றில் நேரத்தை அதிகமாக செலவு செய்து அதிலேயே வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

மெட்டாவேர்ஸ் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தினால் எல்லோருமே விர்ச்சுவலான உலகத்தில் அதிகமான நேரத்தை செலவு செய்வார்கள். நிஐமான உலகத்தை அனுபவிக்க மறந்துவிடுவோம் என்பதுதான் உண்மை.

மொபைல் போன் நமது கையில் இருக்கும் போது நமக்கே தெரியாத நம்முடைய தரவுகள் பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு தெரியும். மெட்டாவேர்ஸ் நமது Privacy என்ற விடயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

எந்தவொரு தொழினுட்பமாக இருந்தாலும் இது போன்ற எதிர்மறையான பிரச்சினைகள் நிச்சயமாகவே இருக்கும். தொழினுட்பம் அடுத்த கட்டத்திற்கு செல்வது நல்லதுதான். அதனை நாம் சரியாக பயன்படுத்தினால் எந்தப்பிரச்சினையும் இல்லை.

நம்முடைய நிஐ உலகத்தை மறந்து டிஐிட்டல் உலகில் தொடர்ந்து இருப்பதால்தான் பிரச்சினைகள் வருகின்றன. மொபைல், இணையத்தை பயன்படுத்தலாமே தவிர அதற்கு அடிமையாக இருக்கக்கூடாது.

மெட்டாவேர்ஸ் எதிர்காலத்தில் இன்றைய சமூகவலைத்தளங்கள் போல எல்லோராலும் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்? என்பதை பார்க்க நான் ஆர்வத்துடன் இருக்கின்றேன்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading