கூகுள் என்ற பெயருக்கான காரணம்

Last updated on January 24th, 2024 at 03:36 pm

கூகுள் (Google) என்ற பெயரைக் கேள்விப்படாதவர்கள் இன்றைய தலைமுறையில் இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு கூகுளினுடைய தயாரிப்புகளின் பயன்பாடு மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது. பெரும்பாலானோர் வாழ்க்கையில் கூகுளினுடைய தயாரிப்புகளை தினமும் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள்.

உலகின் முன்னணி நிறுவனங்களில் கூகுளும்  ஒன்றாகும். உலகளவில் பெரியளவில் அறியப்படும் கூகுள் (Google) என்ற பெயர் எப்படி உருவானது என்ற காரணம் தெரியுமா? அது ஒரு சுவாரஸ்யமான கதை.

கூகுள் என்ற பெயர் எவ்வாறு உருவானது என்ற சுவாரஸ்யமான கதையை இந்த பதிவின் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

கூகுள் தேடுபொறி (Search Engine) 1996 ஆம் ஆண்டு லாரி பேஐ் , சேர்ஐி பிரின் எனும் இரண்டு நண்பர்களால் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது உருவாக்கப்பட்டது. அவர்கள் உருவாக்கிய தேடு பொறிக்கு முதன் முதலாக அவர்கள் வைத்த பெயர் BackRub என்பதாகும். கூகுள் தேடுபொறியினுடைய ஆரம்பப்பெயர் BackRub ஆகும். 

பின்னர் 1997 ஆம் ஆண்டுகளில் லாரி பேஐ் அந்தப் பெயரை விட சிறந்த பெயரை தேர்வு செய்ய யோசித்தார். அப்போது ஸ்ரான்போர்ட் கல்லூரியில் படித்த நண்பர் ஒருவரால் லாரி பேஐிற்கு பரிந்துரை செய்யப்பட்ட பெயர் Googolplex என்பதாகும். ஆனால் அது பெரிதாக இருந்ததால் அதனைச் சுருக்கமாக Googol என பெயர் வைக்க முடிவு செய்தார்.

Googolplex என்ற வார்த்தையின் அர்த்தம் ஒன்றிற்கு பின்னால் நூறு பூச்சியங்களை சேர்த்தால் வரும் இலக்கத்தையே Googolplex என குறிப்பிடுவார்கள். அவ்வளவு தேடல்களை கையாள வேண்டும் என்பதற்காக இந்த பெயர் சூட்ட முடிவு செய்தார்கள்.

ஆனால் பதிவு செய்வதற்காக Googol எனும் பெயரை தேடும் போது லாரிபேஐ் தவறுதலாகத்தான் Google என்கின்ற பெயரை தேடினார். Googol என்கின்ற பெயரை விட Google என்ற பெயரையே லாரி பேஐ் விரும்பினார். அந்த பெயர்தான் பதிவு செய்யப்பட்டு இன்றுவரை Google என்கின்ற பெயரிலேயே தேடுபொறி இயங்குகின்றது.

உண்மையில் கூகுள் என்கின்ற பெயர் உருவானதை பார்க்கும் போது சுவாரஸ்யமாக தோன்றுகிறது. கூகுளினுடைய பெயர் உருவான கதையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading