VPN – Virtual Private Network

Last updated on January 28th, 2024 at 12:37 pm

VPN என்பது Virtual Private Network-ஐ குறிக்கின்றது. Virtual Private Network என்பது தமிழில் “மெய்நிகர் தனியார் வலையமைப்பு” என அழைக்கப்படுகின்றது.

Virtual Private Network என்ற வார்த்தையிலிருந்தே VPN என்பதற்கான அர்த்தத்தை ஒரளவு புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். VPN என்பது தனிப்பட்ட முறையில் Virtual ஆக வலையமைப்பு ஒன்றை உருவாக்கி அதனூடாக பாதுகாப்பாக தொடர்பாடலை மேற்கொள்ளும் தொழினுட்பம் ஆகும்.

உதாரணமாக, நிறுவனம் ஒன்று பல கிளைகளை வைத்திருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு கிளைகளிற்கிடையேயும் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு VPN மூலமாக வலையமைப்பு ஒன்றை உருவாக்கி தொடர்பாடலை மேற்கொள்ளலாம்.

VPN தொழினுட்பத்தை செயலிகள், மென்பொருட்கள் மூலமாக மக்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். பெரும்பாலும் நீங்களும் பயன்படுத்தியிருப்பீர்கள்.

உதாரணமாக, தடை செய்யப்பட்டிருக்கின்ற அல்லது முடக்கப்பட்டிருக்கின்ற இணையத்தளங்களை, சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவதற்காக VPN செயலியை பயன்படுத்துவது பரவலாக காணப்படுகின்றது.

பொதுமக்களால் பயன்படுத்தப்படுகின்ற VPN செயலிகளும் ஆரம்பத்தில் கூறியது போன்றுதான் இயங்குகின்றது.

ஒருவர் VPN செயலியினுடாக இணையத்தை அணுகுவாராயின் அவருக்கென தனியாக Virtual ஆக வலையமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலமாக பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் இணையத்தை அணுகமுடியும்.

நமக்கு இணையத்தை பயன்படுத்துவதற்கு வழிவகை செய்பவர்கள் Airtel, Dialog போன்ற ISP என அழைக்கப்படும் Internet Service Provider ஆவார்கள்.

ஒரு நாட்டில் இணையத்தளங்களை ISP-களின் உதவியுடன்தான் அரசாங்கத்தால் தடைசெய்யமுடிகின்றது. அதே போன்று நமது IP Address-ஐ வைத்து நாம் எங்கே இருக்கின்றோம் என்பதை ISP-களால் அறிந்து கொள்ள முடியும். 

ஒர் இணையத்தளம் நமது நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கின்றது என்றால் நமது நாட்டில் இருந்துகொண்டுதான் அதனை பயன்படுத்த முடியாதே தவிர வேறொரு நாட்டில் இருந்து பயன்படுத்தலாம்.

நாம் பயன்படுத்தும் சாதனத்தை வேறு நாடுகளின் Server-களுடன் வலையமைப்பாக இணைத்து குறிப்பிட்ட இணையத்தளங்களை அனுகினால் நம்மால் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பயன்படுத்த முடியும். இந்த வேலையைச் செய்வதுதான் VPN ஆகும்.

பல Server-கள் வலையமைப்பாக இணைக்கப்பட்டு இணையம் பயன்படுத்தப்படுவதால் நாம் எங்கிருந்து இணையத்தை பயன்படுத்துகின்றோம்?, நமது சாதனத்தின் IP என்ன?, நாம் யார்? போன்ற விடயங்களை ISP, அரசாங்கம் போன்ற யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

VPN நமது நாட்டில் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பயன்படுத்தும் நோக்கிலேயே நிறையப்பேர் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் இவற்றைத் தாண்டி பல நோக்கங்களுக்காக VPN பயன்படுத்தப்படுகின்றது. VPN பயன்படுத்துவதால் நிறைய நன்மைகளும் இருக்கின்றன.

இணையத்தில் நமது Privacy-ஐ பாதுகாப்பதற்காக VPN பயன்படுத்தலாம். Hacking நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தமது அடையாளத்தை மறைப்பதற்காக VPN-ஐ Hackers பயன்படுத்துகின்றார்கள். VPN வலையமைப்பினூடாக தகவல்கள் பரிமாற்றம் Encryptions செய்யப்பட்டு நடைபெறுவதனால் நமது தரவுகள் பாதுகாக்கப்பட்டு Privacy பாதுகாக்கப்படுகின்றது.

ஒரே வரியில் கூறினால் இணையத்தில் நாம் பாதுகாப்பாக இருப்பதற்கும், தரவுகளை இரகசியமாக பரிமாறுவதற்கும், மறைமுகமாக இருப்பதற்கும், Privacy-ஐ பாதுகாப்பதற்கும் VPN பயன்படுத்தலாம்.

VPN இணையத்திலிருந்து செயலிகள் மற்றும் மென்பொருள் வடிவில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

VPN சேவையை வழங்குகின்ற நிறுவனங்கள் நிறையவே உள்ளன. சில இலவசமாகவும் சில பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் பல அம்சங்களையும் உள்ளடக்கி VPN இருக்கின்றது.

பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய VPN-களில் விரும்பிய நாட்டு Server-களுடன் நமது சாதனத்தை இணைப்பது, வேகமான இணைய இணைப்பு போன்ற பல வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் சாதாரணமாக பயன்படுத்த உங்களால் இலவசமாகவே VPN-சேவையை பயன்படுத்த முடியும். இலவசமாக இணையத்திலிருந்து Download செய்து கொள்ள முடியும். இலவசமாக கிடைக்கின்ற VPN-கள் மூலமாகவே நமது நாட்டில் இயங்காத இணையத்தளங்களை அணுகக்கூடியதாக இருக்கும்.

VPN தொழினுட்பத்தை சரியாக தெரிந்துகொண்டு நமக்கு சாதகமாக பல வழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading