Pareidolia என்றால் என்ன?

Last updated on January 30th, 2024 at 06:31 pm

பரேடோலியா (Pareidolia) என்பது உளவியல் சார்ந்த நிகழ்வாகும். உங்களுடைய வாழ்கையிலும் நிச்சயமாக Pareidolia எனும் உளவியல் நிகழ்வை உணர்கின்ற சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கும்.

ஒருவர் தான் பார்க்கின்ற நிஜமான ஒரு விடயத்தை வேறொரு உருவமாக நினைத்துப் பார்த்துக் கற்பனை செய்துகொள்வாராயின் அதனை பரேடோலியா என்று சொல்லலாம்.

உதாரணமாக, வானில் மேகங்களை பார்க்கின்றீர்கள். அந்த மேகங்கள் பல்வேறு உருவங்களில் காட்சியளிப்பதை பல நேரங்களிலும் அவதானிக்கக்கூடியதாக இருக்கும். விலங்குகளின் வடிவத்தில், மனிதனுடைய வடிவத்தில், இதயத்தின் வடிவத்தில் என பல வடிவங்களிலும் காட்சியளிப்பதை பார்க்கலாம்.

அவை மேகங்கள்தான் ஆனால் நாம் மேகத்தின் உருவத்தை வேறொரு பொருளை போல அல்லது உருவங்களை போல கற்பனை செய்துகொள்கின்றோம். மலைகள், மரங்கள் போன்ற இயற்கையான அமைப்புக்களைப் பார்க்கும் போதும் சில நேரங்களில் ஒரு நபரின் முகத்தை போலக் காட்சியளிப்பதை உணர்ந்திருப்பீர்கள். இதே போன்று பல பரேடோலியா நிகழ்வுகள் நமது வாழ்க்கையில் நிறையவே ஏற்படும்.

பரேடோலியா எப்படி ஏற்படுகின்றது?

How

ஒரு பொருளை பார்க்கின்றோம் என்றால், எங்களுடைய மூளை ஏற்கனவே நமக்கு பழக்கப்பட்ட உருவத்துடன் ஒப்பிட்டு அதனைப் போல கற்பனை செய்துகொள்ளும். அப்போதுதான் அந்தப்பொருள் நமது கற்பனையில் வேறு உருவங்களை அவதானிக்க முடிகிறது.

இரவு நேரங்களில் பேய்களை அவதானிக்க முடிவதற்கான காரணமும் பரடேலியா உளவியல் நிகழ்வுதான்.

நிறைய பேர் தனக்கு ஏற்பட்ட பேயைப் பார்த்த அனுபவத்தைச் சொல்வார்கள். இரவு வேளைகளில் உருவங்கள் தெரிவது, வித்தியாசமான சத்தங்கள் கேட்பது போன்ற பலவற்றை பலரும் சொல்வார்கள். ஏன் நமக்கே இப்படியான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

இவை எல்லாம் பரேடோலியாவினுடைய விளைவுகள்தான். இரவு வேளையில் மரத்தினுடைய கிளை காற்றில் அசையும் போது அதனுடைய நிழலைப் பார்த்து பேய் என பயந்திருப்போம். இதற்குக் காரணம் பரடோலியா உளவியல் மூலமாக நமது மூளை நிழலை பேய் என கற்பனை செய்துகொள்கின்றது.

இதே போன்றுதான் இரவு வேளைகளில் நிழல்கள், சத்தங்களை பேய் என கற்பனை செய்துகொள்வதால் இல்லாத விடயத்தையும் இருக்கின்றதென நினைத்துக்கொள்கின்றோம். இவை அனைத்தும் உளவியல் நிகழ்வுகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

பரேடாலியா நிகழ்வால் ஏற்படுகின்ற பேய் போன்றவற்றை பார்த்து பயப்படாமல் இயற்கையில் தெரிகின்ற உருவங்களை அதாவது முகில், மரம், பாறைகள் போன்றவற்றில் தெரிகின்ற உருவங்களை இரசித்து மகிழலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading