0

Lucid Dreaming என்றால் என்ன?

Share

Last updated on February 12th, 2024 at 01:43 pm

நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவுகள் காண்கிறோம். நிறைய நேரங்களில் கனவுகள் நமக்கு மிகவும் பிடித்தமானதாக அமைந்துவிடும். சில நேரங்களில் நமக்கு பிடிக்காததாக பயங்கரமானதாக அமைந்துவிடும்.

இனிமையான கனவுகள் காண்பது நிறைய பேருக்கு பிடித்தமானதாக இருக்கும். கனவுகளுக்கு எல்லை என்பது இல்லை என்பதால் எது வேண்டுமானாலும் கனவுகளில் வரலாம்.

பெரும்பாலான நேரங்களில் நாம் காண்கின்ற கனவுகள் நமக்கு ஞாபகம் இருக்காது. காலையில் விழிக்கும் போது கனவு கண்டிருக்கிறோம் என்பது தெரியும் ஆனால் என்ன கனவு கண்டோம் என்பது நினைவில் நிற்காது.

ஆனாலும், ஒரு சில நேரங்களில் கனவுகள் தூக்கத்தை விட்டு எழுந்த பின்னரும் நினைவில் நிற்கும். இனிமையான கனவுகள் காணும் போது எழுந்துவிட்டால் தொடர்ச்சியாக தூங்கியிருக்கலாமோ என்றும் நமக்கு தோன்றும்.

இனிமையான கனவுகளை போலவே பயங்கரமான கனவுகளை கண்டு தூங்கத்தை விட்டு எழுந்த சந்தர்ப்பங்களும் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.

கனவுகள் நம்மை அறியாமல் வருபவை. கனவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? நமது விரும்பியவற்றை கனவுகளில் வரவைக்க முடியுமா? என்று உங்களிடம் கேள்வி கேட்டால், பெரும்பாலானோருடைய கருத்து அதற்கெல்லாம் சாத்தியம் இல்லை என்றுதான் இருக்கும்.

ஆனால் உண்மையில் கனவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். நாம் விரும்புகிற விடயங்களை கனவில் வரவைக்கலாம். நமது விரும்பம் போல கனவு காணலாம். கனவுகளை கட்டுப்படுத்தி நமது விருப்பம் போல கனவு காண்பது Lucid Dreaming என்று அழைக்கப்படுகிறது.

Lucid Dreaming என்றால் என்ன?

Lucid Dreams Meaning in Tamil – Lucid Dreaming என்ற வார்த்தையை தமிழில் தெளிவான கனவுகள் என்று அழைக்கிறார்கள்.

உங்களால் நீங்கள் விரும்பும் கனவுகளை வரவழைத்து உங்களுடைய விருப்பப்படி கட்டுப்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும். நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த மாதிரியாக கனவுகளை கட்டுப்படுத்தி Lucid Dream காண்பவர்களை Lucid Dreamers என்று அழைப்பார்கள்.

பொதுவாக தூக்கத்தில் காண்கின்ற கனவுகள் நம்மால் கட்டுப்படுத்த முடியாதவை. ஒரு திரைப்படம் போல தொடர்ச்சியாக சென்றுகொண்டிருக்கும். ஆனால் Lucid Dreaming என்பது வீடியோ கேம் போன்றது என்று சொல்லலாம். அவை நம்மால் கட்டுப்படுத்தக்கூடியவை.

Lucid Dreaming இல் இருக்கின்ற நபருக்கு நான் கனவில் தான் இருக்கின்றேன் என்பது புரியும். Lucid Dream இல் இருக்கின்றவர்களால் தன்னுடைய கனவு எப்படி இருக்க வேண்டும். எதனை கனவாக காண வேண்டும் போன்றவற்றை தீர்மானித்துக்கொள்ள முடியும். அவற்றை கனவில் வரவழைத்து இனிமையான அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

சில பேர் இயற்கையாகவே Lucid Dreaming காணக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் Lucid Dream என்பதை உணராமல் இருந்திருப்பார்கள். நிறைய பேரால் Lucid Dream ஐ வரவழைக்க முடியாமல் இருக்கும்.

உங்களிடம் இயற்கையாக Lucid Dreaming காணும் திறன் இல்லாவிட்டால் பரவாயில்லை. Lucid Dream காண்பதற்குரிய பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றினால் யாராலும் Lucid Dream காண முடியும். Lucid Dream இற்கு அதிகாலை வேளை சிறந்ததாக இருக்கும்.

Lucid Dreamms-இல் என்னவெல்லாம் செய்யலாம்?

Lucid Dream இல் உங்களால் நிஐ வாழ்வில் செய்ய முடியாதவற்றைச் செய்யலாம். வானில் பறக்கலாம், காலப்பயணம் செய்யலாம், சூப்பர் பவர்களை பெறலாம், மிக பெரிய பணக்காரராக மாறலாம், இந்த உலகை புதிய கோணத்திலிருந்து பார்க்கலாம், வேறு கிரகங்களிற்கு பயணிக்கலாம். எதனை வேண்டுமானாலும் செய்யலாம்.

எதை வேண்டுமானாலும் செய்யலாம் என சொல்வதற்கான காரணம் கனவை உங்களுக்கு பிடித்தது போல நீங்களே உருவாக்க முடியும் என்பதால்தான்.

நிஐ வாழ்வில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களிற்கு Lucid Dream இல் பதில் தேடலாம். உலகில் உள்ள மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் பல கனவுகள் மூலமாகவே நிகழ்த்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்க விடயம். குறிப்பாக Lucid Dream கனவுகள் காணும் நேரத்தில் மூளையினுடைய சக்தி அதிகமாக இருக்கும்.

Lucid Dreaming இனுடைய பயன்கள்

உங்களுடைய Creativity-ஐ வளர்ப்பதற்கு Lucid Dream உதவி செய்யும். நிஐ வாழ்வில் தீர்க்க முடியாத பல சந்தேகங்களிற்கு Lucid Dream இல் பதில் கிடைக்கலாம். நிஐ வாழ்வில் பயம், பதட்டம் உள்ளவர்கள் Lucid Dream இல் பயம், பதட்டம் தரக்கூடிய செயல்களை செய்தால் அவற்றிலிருந்து விடுபடலாம் என்ற கருத்துக்களை இணையத்தில் பல பேர் சொல்லியிருக்கின்றனர்.

இவற்றைத் தாண்டி உங்களால் நிஐ வாழ்வில் செய்ய முடியாத செயல்களை செய்து பார்த்துக்கொள்ளலாம். அது ஒரு அழகான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தூக்கம் இயற்கையாகவே நமக்கு அமைந்தது. நமக்கு துக்கம், மன அழுத்தம், சோகம், கவலை போன்றவை இருந்தாலும் நிம்மதியாக தூங்கி எழுந்தால் அவை பெரிதாக தெரியாது. நமக்கு நல்ல மனநிலையை தரக்கூடிய தூக்கத்தின் போது இனிமையான கனவுகளை காண்பதன் மூலம் நமது மனதை எப்போதும் மகிழ்சியாக வைத்திருக்க முடியும்.

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading