IOT – Internet of Things

Last updated on September 8th, 2023 at 11:48 am

எந்தவொரு தொழினுட்பமும் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்ததைப் போல தொடர்ந்து இருப்பதில்லை. காலத்தின் போக்கில் ஒவ்வொரு தொழினுட்பமும் மேம்பட்டுக்கொண்டே இருக்கும்.

IOT (Internet of Things) என்பதும் இணையத்துடன் இணைந்த தொழினுட்பங்களின் அடுத்தகட்ட வளர்ச்சி என்று சொல்லலாம்.

இணையம் (Internet) உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து கணிணி, மொபைல் போன்ற சாதனங்களை இணையத்துடன் இணைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

அதனுடைய அடுத்த கட்ட வளர்ச்சியாக மொபைல், கணிணி போன்ற சாதனங்களைத் தாண்டி இணையத்தை பொருட்களோடு இணைத்து பயன்படுத்தினால் அதனையே IOT என அழைக்கின்றோம்.

IOT Meaning in Tamil – ஒரே வரியில் கூறினால் பொருட்களுக்கு (Things) இணையத்தை (Internet) வழங்கினால் அதுவே Internet of Things ஆகும்.

பொருட்களுடன் இணையம் இணைக்கப்படுவதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். IOT-யினுடைய நோக்கம் மனிதனுடைய வேலைகளை வினைதிறனாக்குவதற்காகவும், இலகுவாக்குவதற்காகவும் பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்பாடலை மேற்கொண்டு Smart ஆக தன்னிச்சையாக இயங்க வைப்பதாகும்.

உதாரணமாக, ஸ்மார்ட் கதவு (Smart Door) ஒன்றை எடுத்துக்கொள்வோம். கதவில் பல தொழினுட்பங்களை பயன்படுத்தி (Censors, Software) தன்னிச்சையாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

வீட்டின் உரிமையாளர் கதவருகில் வரும் போது கதவு தானகவே திறந்து கொள்ளும், வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கதவு தானாகவே மூடிக்கொள்ளும், வேறு யாராவது கதவை திறக்க முற்பட்டால் எச்சரிக்கை சமிஞ்ஞை உரிமையாளரின் மொபைலிற்கு செல்வது போன்று பல அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

சதாரணமான ஒரு கதவு எனும் பொருளில் தொழினுட்பங்களைப் புகுத்தி இணைய இணைப்பை வழங்கும் போது எவ்வளவு ஸ்மார்ட்(Smart) ஆக இயங்குகின்றது.

இதே போன்றுதான் சாதாரணமான பொருட்களுக்கு இணைய இணைப்பை வழங்கி ஸ்மார்ட் ஆக செயற்பட வைப்பது Internet of Things ஆகும்.

IOT ஆரம்பமும் வளர்ச்சியும்

இன்றைய நவீன தொழினுட்பங்கள் திடீரென சில வருடங்களில் உருவாகியதல்ல. நூற்றுக்கணக்கான வருடங்களின் தொடர் வளர்ச்சியினால் உருவானதே இன்றைய தொழினுட்பம்.

மனிதனுடைய தொழினுட்பம் ஒவ்வொரு தடவையும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து புரட்சியை ஏற்படுத்துவது தொழிற்புரட்சி என அழைக்கப்படுகின்றது. தொழிற்புரட்சிகள் இதுவரை நான்கு தொழிற்புரட்சிகள் ஏற்பட்டிருக்கின்றன.

மனிதனுடைய நவீன தொழிநுட்பத்திற்கான முதற்கட்டம் நீராவியினால் இயங்குகின்ற இயந்திரங்களிலிருந்து ஆரம்பித்தது. நீராவி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது முதலாவது தொழிற்புரட்சி ஆகும்.

நீராவி இயந்திரங்களின் பின்னர் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு மின்சாரத்தின் மூலம் இயந்திரங்கள் இயக்கப்பட்டது இரண்டாவது தொழிற்புரட்சி ஆகும்.

அதன் பின்னர் மூன்றாவது தொழிற்புரட்சி. இங்குதான் முதன் முதலாக கணணி பயன்படுத்தப்பட்டது. கணிணியின் ஆரம்ப காலகட்டம் இது. இயந்திரங்களை நிரல்படுத்தி (Programming) பகுதியளவாக தன்னிச்சையாக இயங்க வைத்து அதனை தொழிற்துறைக்கு பயன்படுத்திய காலம்.

மூன்றாம் தொழிற்புரட்சியின் பின்னர் நாம் தற்போது நான்காம் தொழிற்புரட்சியில் இருக்கின்றோம்.

நான்காம் தொழிற்புரட்சி தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன உலகம். இணையம் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு புரட்சியை ஏற்படுத்தியது நான்காம் தொழிற்புரட்சியில் முக்கிய நிகழ்வு.

இன்றைய உலகை அவதானியுங்கள். ஏராளமான புதிய தொழினுட்பங்கள் நான்காம் தொழிற்புரட்சியில் உருவாக்கியிருக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன் நினைத்தே பார்த்திருக்கமுடியாத தொழினுட்பங்கள் எல்லாம் நான்காம் தொழிற்புட்சியில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

நான்காம் தொழிற்புரட்சியின் முக்கிய பங்கு வகிக்கின்ற வகிக்கப்போகின்ற தொழினுட்பம் Internet of Things ஆகும். அத்துடன் செயற்கை நுண்ணறிவு(AI), Web3, Block Chain, Quantum Computing போன்ற நிறைய தொழினுட்பங்கள் 4ம் தொழிற்புரட்சியில் உள்ளடங்கியிருக்கின்றன.

Industry04

Internet of Things என்ற வார்த்தையை 1999-ம் ஆண்டு Kevin Ashton என்பவர் முதன் முதலாக முன்வைத்தார். ஆனால், அதற்கு முன்பே பொருட்களுடன் இணையத்தை இணைத்து இயங்க வைக்கின்ற முயற்சிகள் நிறையவே நடந்திருக்கின்றன.

Coca-Cola இயந்திரத்தில் Coca-Cola தீர்ந்துவிட்டால் இணையத்தின் மூலமாக உரிய நபருக்கு தகவல் தரக்கூடிய Coca Cola இயந்திரம் முதலாவது IOT என சொல்லப்படுகின்றது. இதே போன்ற ஆரம்பகட்ட IOT Projects 1999-இற்கு முன்னர் நிறையவே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இரண்டாயிரமாம் ஆண்டுக்கு பின்னர்தான் IOT வணிகமானது. IOT பொருட்கள் உருவாக்கப்பட்டன. ஒர் வீட்டில் உள்ள பொருட்களுக்கு இணையத்தை வழங்கி தன்னிச்சையாக இயங்க வைத்து Smart Home போன்றவை உருவானது.

படிப்படியாக IOT வளர்ந்து இன்று எல்லாத் துறைகளிலுமே IOT பயன்படுத்தப்படுக்கின்றது. நாம் வசிக்கின்ற அறையிலிருந்து தொழிற்சாலையில் பொருட்கள் உற்பத்தி செய்வது வரை எல்லா இடங்களிலுமே Internet of Things வியாபித்திருக்கின்றது.

Applications of IOT

IOT சாதனங்கள் எங்கே, எப்படி பயன்படுத்தப்படுகின்றது என்பதை பார்த்தால் IOT பற்றி இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.

வீடு – Smart Home

இன்று Smart Home பல இடங்களிலும் சாதாரணமாகிவிட்டது. வீட்டிற்கு தேவையான IOT சாதனங்களை இணைத்து உருவாக்குவதுதான் Smart Home ஆகும். ஒரு வீட்டில் மனிதன் செய்கின்ற வேலைகளையெல்லாம் IOT சாதனங்கள் தன்னிச்சையாக செய்துகொள்ளும்.

Smart Home இல் பயன்படுத்தப்படுகின்ற IOT தொழினுட்பங்களுக்கான உதாரணங்கள்.

  • வீட்டின் நுழைவாயிலில் போய் நின்றால்/கட்டளையிட்டால் நீங்கள் உரிமையாளர் என்றால் கதவு தன்னிச்சையாக திறந்துகொள்ளும்.
  • வீட்டின் வெப்பநிலையை கண்டறிந்து வெப்பமாக்கி/குளிரேற்றி தன்னிச்சையாக சரியான வெப்பநிலையை பேணும்.
  • வீட்டினுள் அனுமதியில்லாமல் யாராவது நுழைய முற்பட்டால் எச்சரிக்கை சமிஞ்ஞை ஒலிக்கும்.
  • வெளிச்சம், இருளை கணித்து மின்விளக்குகள் தானாகவே ஒளிரவும் அணைந்து கொள்ளவும் இயலும்.
  • நீர்த் தாங்கியில் உள்ள நீரை சரியான அளவில் பேணிக்கொள்ளலாம்.
  • Voice Controller மூலமாக இருந்த இடத்திலிருந்தே கட்டளையிட்டு சாதனங்களை இயக்கலாம்.
  • வீட்டின் தரையை சுத்தப்படுத்துவதற்காக தன்னிச்சையாக இயங்கும் Bots பயன்படுத்தப்படுகின்றது.

விவசாயம் – Smart Agriculture

விவசாயத்துறையை எடுத்துக்கொண்டாலும் மிகப்பெரியளவில் வணிகமாக செய்கின்ற இடங்களில் IOT தொழினுட்பங்களை சாதாரணமாக அவதானிக்க முடியும். சிறியளவில் விவசாயம் செய்வோரும் தொழினுட்பத்தை கற்றுக்கொண்டு சிறிய விவசாய பரப்புக்களிலும் கூட IOT தொழினுட்பங்களை பயன்படுத்தி வினைத்திறனான உற்பத்தியை செய்வது அதிகரித்து வருகின்றது.

Smart Farm இல் பயன்படுத்தப்படுகின்ற IOT தொழினுட்பங்களுக்கான உதாரணங்கள்.

  • பரந்தளவிலான பரப்புக்களை கண்காணித்தல், விதைகள் விதைத்தல், நடுதல், இரசாயனங்கள் தெளித்தல் போன்ற நோக்கங்களிற்கு ரோன்ஸ் (Drones) பயன்படுத்தப்படுகின்றது.
  • தாவரங்களைப் பற்றியதரவுகள், காலநிலை தரவுகள், சூழல் நிலைமைகள் பற்றிய தரவுகளை IOT உதவியுடன் சேமித்து எதிர்காலத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
  • வெப்பநிலை, ஈரப்பதனை கண்டறிந்து அதற்கேற்றாற்போல தன்னிச்சையாக தாவரங்களுக்கு நீர் பாய்ச்சக்கூடிய தொழினுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றது.
  • விவசாயப் பரப்புக்களை பாதுகாக்க கண்காணிப்பு கமெராக்கள், கண்காணிப்பு ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஸ்மார்ட் நகரம் – Smart City

ஒர் நகரில் உள்ள வசதிகளிற்கு நவீன தொழினுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டால் அது Smart City ஆகும். Smart City ஒன்றை IOT தொழினுட்பம் இல்லாமல் நிர்மாணிக்க முடியாது. இன்று உலகின் பல நகரங்களும் Smart ஆக உருவாக்கப்படுகின்றன.

Smart City இல் பயன்படுத்தப்படுகின்ற IOT தொழினுட்பங்களுக்கான உதாரணங்கள்.

  • நகரின் வளியின் மாசுபாட்டை கண்டறிந்து பேணுவதற்கான தொழினுட்பங்கள்.
  • வீதி விளக்குகள் வெளிச்சத்தைப் பொறுத்து தன்னிச்சையாக இயங்குவதற்கான தொழினுட்பம்.
  • வீதி சமிஞ்ஞை விளக்குகள் போக்குவரத்தைப் பொறுத்து தன்னிச்சையாக இயங்கும்.
  • வாகனத்தை நிறுத்துவதற்கான வழிகாட்டல்களை IOT தொழினுட்பம் வழங்குகின்றது (Smart Parking)
  • மக்கள், போக்குவரத்து, சூழல் தொடர்பான தரவுகளை சேமித்து முடிவுகள் எடுத்து முகாமை செய்வதற்கான தரவு சேகரிக்க IOT உதவுகின்றது.

மேலே கூறியவை சில உதாரணங்களே. இவற்றைத்தவிர தொழிற்சாலைகளில் உற்பத்திகள் செய்வதற்கு, மருத்துவத்துறை, நவீன வாகனங்கள், பாதுகாப்பு, விண்வெளித் துறை போன்று எல்லா துறைகளிலும் IOT தொழினுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

IOT இன் அவசியம்?

உலகில் உள்ள பல பிரச்சினைகளுக்கு Internet of Things தீர்வாக அமைகின்றது. உதாரணமாக நகரில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல் என்ற பிரச்சினையை தீர்க்க துல்லியமான தரவுகளை சேகரித்து நேரம், இடம், வாகனங்கள் போன்றவற்றிற்கு ஏற்றாற் போல் வீதி சமிஞ்ஞைகளை தன்னிச்சையாக செயற்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு IOT தொழினுட்பம் உதவுகின்றது.

வளங்களை சரியாகப் பயன்படுத்தி வேலைகளை வினைத்திறனாக செய்வதற்கும் திறம்படச் செய்வதற்கும் IOT அவசியம்.

துல்லியமான தரவுகளை சேமிப்பதற்கு Internet of Things உதவி செய்கிறது. அதிகமான துல்லியமான தரவுகளை சேமித்து வைத்து சரியான முடிவுகளை எடுப்பதற்கும் எதிர்கால தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

ஒர் நிறுவனம், தொழிற்சாலை, அரசாங்கம் எதுவானாலும் அவற்றை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு IOT தொழினுட்பங்கள் உதவி செய்யும்.

IOT இன் எதிர்மறையான விளைவுகள்

IOT-யில் நிறைய பயன்பாடுகள் இருக்கின்றன. மனிதனை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்கின்றன. அப்படியானால் IOT-யில் நன்மைகள் மட்டுமா உள்ளது என்றால் இல்லை.

IOT தொழினுட்பத்தின் வளர்ச்சி நிறைய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இயந்திரங்கள் அதிகரிக்க அதிகரிக்க மனிதர்களுடைய வேலைகளை இயந்திரங்கள் செய்து கொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும் போது தன்னிச்சையாக வேலைகளைச் செய்யக்கூடிய தொழினுட்பங்கள் அதிகரிக்கும் போது மனிதனுடைய வேலைகள் இயந்திரங்களிடம் செல்வதால் மனிதர்கள் வேலைகளை இழக்க நேரிடும்.

இன்றைக்கு ஒவ்வொருவருடைய கைகளிலும் இருக்கின்ற மொபைல் போன் பலருடைய வாழ்க்கையிலிருந்து Privacy என்ற ஒன்றை இல்லாமல் செய்துவிட்டது. யோசித்துப்பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள கதவு, குளிரூட்டி, கண்காணிப்புக்க கமரா, மின் விளக்கு எல்லாம் இணையத்துடன் இணைந்திருக்கின்றது. இந்த நிலையில் Privacy என்ற ஒன்றிற்கு யாராலும் உத்தரவாதமளிக்க முடியாது.

இன்றைய சூழ்நிலையிலேயே பலரும் நிஜ உலகத்தில் வாழ்க்கையை வாழாமல் மொபைலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது தற்போது இருப்பதை விட பல மடங்கு தொழினுட்பம் வளரும் போது ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் தொழினுட்பம் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும்.

IOT இன் எதிர்காலம்

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொழினுட்பம் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். அந்த வகையில் IOT தொழினுட்பமும் தற்போது இருப்பதை விட பல மடங்கு வளர்ச்சியடையும்.

இன்றைக்கு மொபைல், இணையம் சாதாரணமாக எல்லோருடைய வீடுகளிலும் இருப்பது போல எதிர்காலத்தில் IOT சாதனங்களை சாதாரணமாக எல்லோர் வீடுகளிலும், வீதிகளிலும், தொழிற்சாலைகளிலும் காணக்கூடிய நிலைமை வரும்.

அதே போல் எதிர்காலத்தில் IOT தொழினுட்பம் சார்ந்த வணிகமும் வளர்ச்சியடைந்ததாக இருக்கும்.

நாம் வளர்ந்துவருகின்ற தொழினுட்பங்களை பற்றி தெரிந்துகொண்டு அவற்றுடன் வாழ்வதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்.

IOT போன்ற எதிர்காலத் தொழினுட்பங்களை கற்றுக்கொண்டு நமது திறமைகளை மேம்படுத்திக்கொண்டால் எப்போதும் நமக்கான வேலைகளும், வணிகவாய்ப்புக்களும் இருந்துகொண்டே இருக்கும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading