Ethical Hacking என்றால் என்ன?

Last updated on September 2nd, 2023 at 12:15 am

Ethical Hacking வரப்போகும் காலங்களில் அதிகமான கேள்வி (Demand) உடைய தொழிற்துறைகளில் முக்கியமானதொன்றாக இருக்கும். இன்று உலகில் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அங்கே இணையத்துடன் இணைந்த தொழினுட்பம் தவிர்க்க முடியாததாக மாறிக்கொண்டிருக்கின்றது.

அதனால், நவீன தொழினுட்ப உலகை பாதுகாப்பதற்கு Ethical Hacking, Cyber Security போன்றவை தவிர்க்க முடியாதவையாக மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது.

Ethical Hacking என்றால் என்ன? என்பதை புரிந்துகொள்ள முதலில் Hacking பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

Hacking என்றால் என்ன?

உலகில் நிறையவே திருட்டுச் சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. உதாரணமாக வங்கிக்குள் புகுந்து கொள்ளையடிப்பார்கள், வீதியால் செல்லும் நபரிடமிருந்து திருடிச் செல்வார்கள்.

இணைய உலகிலும் அவ்வாறான திருட்டுச் சம்பவங்கள், ஊடுருவல்கள் நடைபெறுகின்றன. இணைய உலகில் நடைபெறுகின்ற ஊடுருவல்கள், திருட்டுகள் Hacking என்று அழைக்கப்படுகின்றது.

Hacking ஆனது, நிஐ உலகில் நடப்பதைப் போன்ற திருட்டு சம்பவங்கள், கொள்ளை சம்பவங்கள் போன்று இருக்காது.

Hacking ஆனது கணணி அறிவைப் பயன்படுத்தி கணணி, வலையமைப்புகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றினூடாக ஊடுருவதல் மற்றும் திருடுதல் ஆகும். பெரும்பாலான நேரங்களில் Hack செய்து தரவுகள் மற்றும் தகவல்களையே திருடுவார்கள். இணைய உலகில் மிகவும் பெறுமதியானவை தரவுகள்தான். தரவுகளை வைத்து எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்.

இணையம் மூலமாக தனிநபருடைய மொபைலிருந்து தரவுகளைத் திருடுவது, தரவுத்தளங்களிலிருந்து (Database) தரவுகளைத் திருடுவது, நிறுவனங்களின் வலையமைப்புகளில் மூலமாக தரவுகளைத் திருடுவது, ஒரு நாட்டின் இராணுவ மற்றும் அரசாங்கத்தின் இரகசிய தகவல்களைத் திருடுவது போன்ற பல்வேறு விதமான Hacking செயற்பாடுகள் இன்று நடைபெறுகின்றன.

Ethical Hacking என்றால் என்ன?

Ethical Hacking Meaning in Tamil – Ethical என்பது தமிழில் நெறிமுறை என்று பொருள். நெறிமுறைகளிற்கு உற்பட்டு Hacking இல் ஈடுபடுவது Ethical Hacking ஆகும்.

Ethical hacking என்பது Hacking-இலிருந்து எதிர்மாறானது. Hacking என்பது அனுமதியில்லாமல், நெறிமுறைகளிற்குட்படாமல் நடைபெறுவதாகும். Ethical Hacking ஆனது அனுமதியுடன் நெறிமுறைகளிற்கு உற்பட்டு கணணி வலையமைப்பு, தரவுத்தளங்கள், இணையத்தளங்களினுடைய பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்து பாதுகாக்கும் நோக்கத்துடன் ஊடுருவுகிற செயற்பாடு Ethical Hacking ஆகும்.

நிறைய நேரங்களில் நிறுவனங்கள் தமது இணையத்தளங்கள், வலையமைப்புகள், தயாரிப்புகளை (Product) பாதுகாப்பு பரிசோதனை செய்யும் நோக்கிற்காக Hackers மூலமாக Hack செய்து பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிவார்கள். இவ்வாற செயற்பாடு Ethical Hacking ஆகும்.

Hacker-களின் வகைகள் (Types of Hackers in Tamil)

Hacking இல் ஈடுபடுபவர்கள் Hackers என்று அழைக்கப்படுகிறார்கள். Hacker-கள் அவர்கள் செய்யும் Hacking செயற்பாடுகளைப் பொறுத்து பல வகைகளாக வகைப்படுத்தலாம்.

Black Hat Hackers

Hacking-ஐ சட்டவிரோதமான செயற்பாடுகளிற்கு பயன்படுத்துபவர்கள் Black Hat Hackers ஆவார்கள். தம்மிடம் உள்ள திறமைகளை தவறாக பயன்படுத்தி அதன் மூலமாக Hack செய்து பணம் சம்பாதிப்பார்கள்.

White Hat Hackers

Hacking-ஐ நேர்மையான செயற்பாடுகளிற்குப் பயன்படுத்துபவர்கள் White Hat Hackers ஆவார்கள். ஒரு நிறுவனத்தின் வலையமைப்பு, தரவுத்தளங்களை பாதுகாப்பதற்காக நிறுவனத்தில் வேலை செய்வார்கள். இவர்கள்தான் Ethical Hackers என்று அழைக்கப்படுவார்கள்.

Gray Hat Hackers

இவர்கள் Hacking-ஐ சில நேரங்களில் நேர்மையாக பயன்படுத்துவார்கள், சில நேரங்களில் தவறாகவும் பயன்படுத்துவார்கள். சில வேளைகளில் ஒரு நிறுவனத்தை பாதுகாப்பதற்காகவும் வேலை செய்வார்கள். சில நேரங்களில் Hack செய்து தகவல்களை திருடுகிற வேலைகளையும் செய்வார்கள்.

பொதுவாக Hackers-ஐ மேல கூறியது போலவே மூன்று வகையாக வகைப்படுத்தலாம். ஆனாலும் இவற்றை தவிர Red Hat Hackers, Green Hat Hackers, Blue Hat Hackers, Script Kiddie போன்று பல வகைகளிலும் வகைப்படுத்த முடியும்.

எப்படியெல்லாம் Hacking நடைபெறுகிறது

இன்று, உலகம் இயங்குவதற்கு இணையம் அவசியமானதொன்றாக மாறிவிட்டது. ஒரு நாளில் தொழினுட்பத்தினதும் இணையத்தினதும் பயன்பாடு எல்லா இடங்களிலும் இருக்கின்றது. அங்கெல்லாம் ஹக்கிங் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இணையத்தைப் பயன்படுத்தி தனி நபர்களிடமிருந்து பெருமளவான பணத்தை திருடிக்கொண்டு போகிறார்கள். அதே போல மொபைல்-ஐ Hack செய்து பணத்தை திருடுகிறார்கள். இப்படியான செய்திகளை அடிக்கடி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

இவை சிறியளவில் நடைபெறும் ஹக்கிங் செயற்பாடுகள். இவை பெரும்பாலும் மக்களுடைய அறியாமையினால் மொபைலில் ஹக் செய்ய முடிகிறது.

அடுத்து இணையத்தளங்கள், அவற்றினுடைய தரவுத்தளங்கள் Hack செய்யப்பட்டு தரவுகள் திருடப்படுவதை சொல்லலாம். இந்த மாதிரியான Hacking செயற்பாடுகள் அடிக்கடி நடைபெறுகின்றன.

இவற்றுக்கெல்லாம் மேலாக உலகின் முன்னனி நிறுவனங்களின் வலையமைப்புகள், தரவுத்தளங்கள் ஹக் செய்யப்பட்டு தரவுகளை திருடுகிற செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. இவற்றை Black Hat Hackers ஒரு குழுவாக செய்வார்கள். இது தொடர்பான செய்திகளும் அடிக்கடி நம்மால் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

இவற்றையெல்லாம் தாண்டி தற்போதைய காலத்தில் இன்னொரு நாட்டினுடைய இரகசிய தகவல்களை திருடுவதற்கும், அவர்களை உளவு பார்ப்பதற்கும் ஹக்கிங் பல வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

தரவுகளை திருடுவதற்கும், பணத்தை திருடுவதற்கும் வைரஸ்-களை தயாரித்து பரப்புகிற செயற்பாடுகளும் நடைபெறுகின்றன.

சொல்லப்போனால் இன்று ஹக்கிங் என்பது எல்லா இடங்களிலும் சக்திவாய்ந்த ஆயுதமாக மாறிவருகிறது என்று சொல்லலாம்.

ஹக்கிங் செயற்பாடுகள் தனி மனிதனுக்கும், நிறுவனத்திற்கும், அரசாங்கத்திற்கும், இராணுவம் போன்ற எல்லாவற்றிற்கும் சவாலானதாக இருக்கிறது. ஆகவே ஹக் செய்யப்படுவதிலிருந்து தடுக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக Ethical Hacking பயன்படுத்தப்படுகிறது. நிறுவனங்களுக்கும் Ethical Hackers தேவைப்படுகிறார்கள்.

நிறுவனங்கள் தமது வலைத்தளம், வலையைப்புகள், தயாரிப்புகளை நேர்மையான முறையில் Hack செய்தால் அவர்களிற்கு Rewards கொடுப்பார்கள். அதனை Bug Bounty என்று சொல்லலாம். நீங்களும் Hacking திறமையை வளர்த்துக்கொண்டால் இவ்வாறான வழிகள் மூலமாகவும் நிறையவே சம்பாதிக்கலாம்.

Ethical Hacking துறையின் எதிர்காலம்

இன்று தொழினுட்பத்தின் வளர்ச்சி மிக மிக வேகமாக இருக்கிறது. எதிர்காலத்தில் தொழினுட்பத்தின் பங்கு இல்லாத துறையென்று எதுவும் இருக்க முடியாது.

ஒரு விடயத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இணையத்துடனான தொழினுட்பம் எந்த அளவு வளர்கிறதோ அதே அளவிற்கு அதனை பாதுகாப்பதற்கான தொழினுட்பமும் வளர்ந்துகொண்டேயிருக்கும்.

அதாவது எதிர்காலத்தில் Cyber Security, Ethical Hacking துறை பெரியளவில் வளரும். அதே நேரம் Hacking என்பதும் எல்லா இடங்களிலும் அதிகமாகவே இருக்கும்.

இன்று Ethical Hackers இற்கு அதிகமான கேள்வி (Demand) இருக்கிறது என்று சொல்லலாம். இன்று Ethical Hacking, Cyber Security சம்பந்தமான துறைகளை கற்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading