டோபமைன் என்றால் என்ன?

Last updated on February 5th, 2024 at 06:23 pm

டோபமைன் (Dopamine) என்பது நமக்கு உத்வேகத்தை ஏற்படுத்துகின்ற ஹர்மோன் ஆகும். நீங்கள் ஏதோவொரு செயலைச் செய்வதால் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் இருக்கின்றீர்கள் என்றால் அதற்குக் காரணம் டோபமைன் எனும் ஹர்மோன் ஆகும். டோபமைன் குறைந்தளவில் இருக்குமாயின் எந்த வேலையைச் செய்தாலும் உத்வேகம், சந்தோஷம் இல்லாத நிலைமைதான் உண்டாகும்.

நீங்கள் ஏதோவொன்றில் அடிமைத்தனமாக இருக்கின்றீர்கள் என்றால் அதற்கும் டோபமைன்தான் காரணம். உதாரணமாக Social Media Addiction, Game Addiction, Porn Addiction, Food Addiction போன்றவற்றைச் சொல்லலாம்.

ஏதோவொன்றிற்கு அடிமையாக இருக்கின்றீர்கள் என்றால் அந்த விடயம் நல்லதோ கெட்டதோ அது மகிழ்சியை தருகின்றது என்பதால்தான் அதற்கு அடிமையாக இருக்கின்றீர்கள்.

எல்லோராலும் இலகுவாகச் செய்யக்கூடிய விருப்பமான வேலைகளாக சமூகவலைத்தளம் பயன்படுத்தும் போதும், வீடியோ கேம் விளையாடும் போதும் மூளையில் டோபமைன் உற்பத்தியாகும் அளவு அதிகமாக இருக்கும். இதனால்தான் அவற்றை பயன்படுத்தும் போது சந்தோசமாக இருக்க முடிகின்றது. தொடர்ந்து எவ்வளவு நேரமானாலும் பயன்படுத்த முடிகின்றது.

இது நல்லதா என்று கேட்டால் இல்லை. நல்லதா கெட்டதா என்று யோசிக்காமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் நேரத்தை செலவு செய்து கொண்டிருப்போம். நமது மூளைக்கு நல்லது கெட்டது எல்லாம் தெரியாது. அதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றாயா அது போதும்.

நாம் நமது இலக்குகளுக்காக உழைக்கின்றோம் அல்லது ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கின்றோம் என்றால் நமக்கு மகிழ்சி, உற்சாகம் என்பது குறைந்த அளவிலேயே இருக்கும். காரணம் இவை உடனடி மகிழ்ச்சியை நமக்கு பெற்றுத்தராது.

நமது இலக்குகளில் வெற்றியடைந்து மகிழ்ச்சியை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். இதுவே Social media, Game, Porn போன்றவை உடனடிச் சந்தோஷத்தை தரக்கூடியது. நமது மூளை நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கே விரும்பும். இதனால் எதனை செய்தால் உடனடியாக டோபமைன் கிடைக்குமோ அதனைச் செய்யவே நம்மைத் தூண்டும்.

நாமும் சந்தோஷமாக இருப்பதற்காக உடனடி சந்தோஷத்தை தரக்கூடிய செயல்களை செய்து நமது இலக்குகளை மறந்து அதற்காக உழைப்பதை விட்டுவிடுகின்றோம்.

எப்போதும் உடனடியாக கிடைக்கின்ற மகிழ்ச்சியை விட்டு நீண்ட கால உழைப்பின் மூலம் கிடைக்கின்ற வெற்றியை பெரிதாக நினைக்க வேண்டும். உங்களுடைய இலக்குகளுக்காக உழைப்பதற்கு உங்கள் மூளையை தயார்ப்படுத்த வேண்டும்.

ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் நம்மை ஒரு விடயத்திற்கு அடிமைப்படுத்துவது டோபமைன் ஆகும். அதேநேரம் டோபமைன் என்பது குறைவானாலும் நமது சாதரணமான வாழ்க்கையிலும் மகிழ்ச்சி என்பது இல்லாமல் போய்விடும். நமது மூளையை நாம்தான் எப்படி இருக்க வேண்டும் என்று பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்

நாம் இணையம், சமூகவலைத்தளங்கள், வீடியோ கேம் போன்றவற்றைப் பயன்படுத்தி தேவையில்லாமல் வீணாக நேரத்தைச் செலவழிப்பதற்கு பதிலாக நமது இலக்குகளுக்காக உழைத்து அதன் மூலம் கிடைக்கின்ற வெற்றியையும் சந்தோஷத்தையும் கொண்டாடலாம். அவ்வாறு கிடைக்கின்ற சந்தோஷம் நிதந்தரமாக நிலைத்திருக்கும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading