டிஜிற்றல் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

Last updated on December 21st, 2023 at 04:40 pm

எந்தவொரு வணிகமாக இருந்தாலும் சந்தைப்படுத்தல் (Marketing) இல்லாவிட்டால் அந்த வணிகத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வெற்றிகரமான வணிகமாக மாற்ற முடியாது.

ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை (Product) அல்லது சேவைகளை (Services) மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு மார்க்கெட்டிங் மிகவும் முக்கியமானது. மார்க்கெட்டிங் சரியாக செய்தாலே வணிகம் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிவிடும்.

மார்க்கெட்டிங் செய்யும் போது காலத்திற்கு ஏற்ற மாதிரியான மார்க்கெட்டிங் நுட்பங்களையும் யுத்திகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம். இன்றைய காலத்தை பொறுத்தவரை டிஜிற்றல் மார்க்கெட்டிங் மிகவும் வினைத்திறனானதாகவும் வெற்றிகரமானதாகவும் உள்ளது.

டிஜிற்றல் மார்க்கெட்டிங் காலத்திற்கு முன்னர் மார்க்கெட்டிங் செய்வதற்கு மரபுவழியான மார்க்கெட்டிங் முறைகள் (Traditional Marketing) பயன்படுத்தப்பட்டன.

மார்க்கெட்டிங் செய்வதற்கு ஆரம்ப காலத்திலிருந்து பின்பற்றப்படுகின்ற வழிமுறைகள் அதாவது பாரம்பரியமாக பின்பற்றப்படுகின்ற முறைகள் Traditional Marketing-இற்குள் அடங்குகின்றன.

உதாரணமாக செய்தித்தாள்களில் விளம்பரங்கள் பிரசுரித்தல், தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.

டிஜிற்றல் தொழினுட்ப ஊடகங்களின் வளர்ச்சியினால் டிஜிற்றல் மார்க்கெட்டிங் வளர்ச்சியடைந்தது.

டிஜிற்றல் மார்க்கெட்டிங் – Digital Marketing

Digital Marketing Meaning in Tamil – Digital Marketing என்ற வார்த்தையில் Digital என்பது டிஜிற்றல் என்பதையும் Marketing என்பது சந்தைப்படுத்தல் அல்லது விளம்பரப்படுத்தல் என்பதையும் குறிக்கின்றது.

இணையம் மூலமாக டிஜிற்றல் ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மார்க்கெட்டிங் (Marketing) டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகும்.

இன்று பெரும்பாலான மக்கள் இணையம் பயன்படுத்துகின்றார்கள். நிறைய நேரத்தை இணையத்தில் செலவிடுகிறார்கள். இணையத்தில் பொருட்கள் வாங்குகிறார்கள். நிகழ்நிலையில் உள்ள சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

நமது தேவைகளை இணையத்தில் நிறைவேற்றிக் கொள்ளமுடிகின்றது. சொல்லப்போனால், இணையம் என்பது மக்கள் அதிகமாகக் கூடுகின்ற, வணிகம் நடைபெறுகின்ற இடமாக மாறிவிட்டது. இணையத்தை டிஜிட்டல் சந்தை என்று கூடச் சொல்லலாம்.

அதிகமாக மக்கள் சேர்கின்ற இடத்திலேதான் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும். எனவே, பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்ற இணையத்தில் மார்க்கெட்டிங் செய்வது புத்திசாலித்தனம். இதற்காகத்தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயன்படுத்தப்படுகின்றது.

எப்படி டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்யலாம்

இணையத்தில் சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், தேடுபொறிகள், மொபைல் செயலிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பல்வேறு வழிகளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய முடியும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்று பார்க்கப்போனால் நிறைய வகைகள் இருக்கின்றன. அவற்றுள் சில மார்க்கெட்டிங் வகைகளைப் பார்க்கலாம்.

Digital Marketing

 • Social Media Marketing

சமூக வலைத்தளங்களின் மூலமாக விளம்பரப்படுத்துவது Social Media Marketing ஆகும். இணையம் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களையே பயன்படுத்துகின்றனர். அங்கே விளம்பரப்படுத்தல்களை மேற்கொண்டால் தேவையான மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.

 • Pay Per Click Marketing

இந்த மாதிரியான மார்க்கெட்டிங்கை வெப்சைட்டுக்களில் பார்த்திருப்பீர்கள். Pay Per Click என்ற பெயரில் இருப்பதைப் போலவே ஒவ்வொரு பயனரும் விளம்பரத்தைச் சொடக்கும் போதும் விளம்பரப்படுத்தியவர்களிற்கு பணம் தருவார்கள்.

இந்த வகையான மார்க்கெட்டிங்கிற்கு உதாரணமாக கூகுள் அட்சென்ஸ்சை சொல்லலாம். விளம்பரதாரர்கள் கூகுள் மூலமாக வலைத்தளங்களில் விளம்பரங்களை காட்சிப்படுத்துவார்கள். விளம்பரங்களை ஒவ்வொருவர் சொடக்கும் போதும் வலைத்தளங்களுக்கு பணம் கிடைக்கும்.

 • Email Marketing

மின்னஞ்சல் மூலமாக விளம்பரப்படுத்தலை மேற்கொண்டால் அதனை Email Marketing என்று சொல்லலாம்.

உங்களுடைய தயாரிப்பு அல்லது சேவை தேவைப்படுகின்ற நபர்களினுடைய மின்னஞ்சல் முகவரிகளை சேகரிக்க வேண்டும். உங்களுடைய தயாரிப்பு/சேவையைப் பற்றிச் சொல்லி அவர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டும்.

உங்களுடைய மின்னஞ்சலிற்கும் நிறைய நிறுவனங்களினுடைய மின்னஞ்சல்கள் வந்திருக்கலாம். அதனை Email Marketing என்று சொல்லலாம்.

 • Affiliate Marketing

Affiliate Marketing மூலமாக பொருட்களை விற்பனை செய்வதை அமசோன் போன்ற இணையத்தளங்களில் பார்க்க முடியும். நமது பொருளை நிகழ்நிலையில் வேறொரு நபர் விற்பனை செய்து தந்தால் விற்பனை செய்து தந்தவருக்கு குறிப்பிட்ட தரகு (Commission) கொடுக்க வேண்டும்.

நம்மால் நமது பொருளை விற்பனை செய்ய முடியாவிட்டாலும் கூட இன்னொருவர் நமது பொருளை விற்பனை செய்து தருவார். பொருட்களினுடைய விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் Affiliate Marketing செய்யப்படுகின்றது.

 • Search Engine Optimization

இணையத்தளங்களை தேடுபொறிகளில் (Search Engine) முன்னிலைக்கு கொண்டுவருவதற்கு Search Engine Optimization செய்யப்படுகிறது. Search Engine Optimization செய்வதன் மூலமாக கூகுள் போன்ற தேடுபொறிகளில் மக்கள் தேடும் போது நமது வலைத்தளங்களை முன்னிலைக்கு கொண்டுவரலாம்.

கூகுள் மாதிரியான தேடுபொறிகளைப் பயன்படுத்தி நமது சேவைகள் தேவைப்படுகின்ற மக்களிற்கு நமது இணையத்தளத்தை கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்.

 • Influencer Marketing

சமூக வலைத்தளங்களில் உள்ள பிரபல்யமான நபர்கள், அதிமாக பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள நபர்களிடம் அதாவது Influencer-களிடம் பணம் கொடுத்து அவர்களைக் கொண்டு மார்க்கெட்டிங் செய்விப்பதை Influencer Marketing என்று சொல்லலாம்.

Influencer-கள் ஒரு பொருளையோ சேவையையோ விளம்பரப்படுத்தும் போது அவர்களை பின்தொடர்பவர்கள் அவற்றைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 • Search Engine Marketing

Search Engine Marketing  என்பது கிட்டத்தட்ட Search Engine Optimization மாதிரியாகவே இருக்கும்.

தேடுபொறியில் ஒரு விடயத்தைத் தேடும் போது வரும் முடிவுகளில் தமது இணையத்தளங்களின் முடிவுகளை முன்னிலையில் கொண்டுவருவதற்காக தேடுபொறிகளிற்கு பணம் செலுத்தி தமது முடிவுகளை முன்னிலைக்கு கொண்டுவந்தால் அதனை Search Engine Marketing என சொல்லலாம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்னுடைய பயன்கள்

பாரம்பரியமான வழிகளில் மேற்கொள்ளப்படுகின்ற மார்க்கெட்டிங்குடன் ஒப்பிடும் போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் பல்வேறு வகைகளில் வினைத்திறன் கூடியது. டிஜிற்றல் மார்க்கெட்டிங் செய்வதில் எவ்வாறான அனுகூலங்கள் உள்ளன என்பதைப் பார்க்கலாம்.

 • துல்லியத்தன்மை கூடியது

பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்யும் போது விளம்பரம் தேவைப்படுபவர்கள் மட்டுமல்லாமல் விளம்பரம் தேவைப்படாதவர்களும் பார்ப்பார்கள். அதில் எந்தப் பயனும் இல்லை. நம்மால் யாருக்கு அந்த விளம்பரம் சென்றடைய வேண்டும் என கட்டுப்படுத்த முடியாது.

ஆனால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்யும் போது யாருக்கு அந்த விளம்பரம் சென்றடைய வேண்டும் என்பதை கட்டுப்படுத்தி துல்லியமாக விளம்பரப்படுத்த முடியும். வயது, பாலினம், ஆர்வம், இடம் என பலவற்றை வைத்து யாருக்கு விளம்பரம் சென்றடைய வேண்டும் என்பதை கட்டுப்படுத்த முடியும்.

 • செலவு குறைந்தது

செலவு மிகவும் குறைவாக இருக்கும். எவ்வளவு பணம் இருக்கின்றதோ அதை வைத்தே மார்க்கெட்டிங் செய்துகொள்ள முடியும். மிகவும் குறைந்தளவான பணமே போதுமானது.

செலவும் குறைவாக இருந்து துல்லியத்தன்மையும் அதிகமாக இருப்பதால் இலாபகரமான மார்க்கெட்டிங் ஆக இருக்கும்.

 • அளவிடூகள் செய்ய முடியும்

நமது விளம்பரம் எத்தனை பேரைச் சென்றடைந்திருக்கின்றது, எத்தனை பேர் நமது விளம்பரங்களை சொடக்கியிருக்கிறார்கள், நமது வலைத்தளத்தை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள், எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள், எந்த வயதினர், எந்த நாட்டிலிருந்து பயன்படுத்துகிறார்கள் போன்ற நிறைய வகையான அளவீடுகளைச் செய்துகொள்ள முடியும்.

அந்த அளவீடுகளை வைத்து முடிவுகளை எடுத்துக்கொள்ள முடியும். அவ் முடிவுகளையும் எதிர்காலத்தில் துல்லியமாக மார்க்கெட்டிங் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம்.

 • மாற்றங்கள் செய்ய முடியும்

பத்திரிகை விளம்பரம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு தடவை விளம்பரப்படுத்திவிட்டால் தேவைப்பட்டாலும் கூட எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது.

இதுவே ஒர் இணையத்தளத்தில் விளம்பரப்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஏதோவொரு மாற்றம் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் எப்போது வேண்டுமானாலும் செலவு இல்லாமல் மாற்றங்களைச் செய்துகொள்ள முடியும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்-ஐ நமக்கான விளம்பரங்களைச் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலமாக பணம் சம்பாதித்துக் கொள்ளவும் முடியும். டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பணம் சம்பாதிப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையானது மார்க்கெட்டிங் துறையாகவும், பணம் சம்பாதிக்கக்கூடிய துறையாகவும் மிகவும் வளர்ச்சி அடைந்து வருகின்றது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வதற்காக நிறைய நிறுவனங்களும் உள்ளன.

இன்று எல்லாமே டிஜிற்றல் மயமாக உள்ளதால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையை நமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி பணம் சம்பாதித்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading