டார்க் வெப் எனும் இருண்ட இணையம்

Last updated on February 17th, 2024 at 03:38 pm

இணையம் என்பது நீங்கள் பயன்படுத்தும் இணையம் மட்டுமல்ல. அதனையும் தாண்டி சாதாரணமாக கண்ணுக்குத் தெரியாமல் இணையத்தின் பெரும்பகுதி இருக்கின்றது. அதனை டார்க் வெப் (Dark web), டார்க் நெட் (Dark net) போன்ற பல்வேறுபட்ட பெயர்களால் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

டார்க் வெப் என்பது இணையத்தின் ஒரு பகுதி. இதனை டார்க் நெட் என்றும் அழைக்கலாம். இணையத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் டார்க் வெப்பில் உள்ள இணையத்தளங்களும், தகவல்களும் நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் கூகுள் போன்ற எந்தவொரு தேடுபொறிகளிலும் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்காது.

சாதாரணமாகப் பயன்படுத்தும் எந்தவொரு தேடுபொறிகளின் தேடல்களிலும் கிடைக்காத இணையத்தின் பகுதியாகும். டார்க் வெப் இணையத்தளங்களை அவற்றிற்கான இணைய முகவரியினைப் (URL) பயன்படுத்தி Tor உலாவி மூலமாக அணுக முடியும். 

இணைய உள்ளடக்கம்

டார்க் வெப் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டுமானால் முதலில்  இணையத்தின் உள்ளடக்கம், இணையத்தின் பகுதிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

மொத்த இணையத்தினையும் சமுத்திரத்திலுள்ள பனிப்பாறை ஒன்றுடன் ஒப்பிட்டுக் கூற முடியும். கடலிற்கு மேலே நமக்கு தெரிவது Surface Net எனவும், கடலிற்கு கீழே குறிப்பிட்ட ஆழத்தில் தெரியும் பகுதி Deep Web எனவும், அடி ஆழத்தில் உள்ள பகுதி Dark Net எனவும் ஒப்பீடு செய்ய முடியும்.

Internet Content

04% – Surface net
90% – Deep web
06% – Dark web

இணைய உள்ளடக்கம் (Internet Content) என்பது ஒட்டு மொத்த இணையத்தில் உள்ள தகவல்கள் எங்கே இருக்கின்றது என்பதே ஆகும். அதில் கிட்டத்தட்ட 4% தகவல்கள் Surface Net இலும் 90% தகவல்கள் Deep Web இலும் 06% தகவல்கள் Dark Web இலும் காணப்படுகின்றது.

[1] Surface Web

Surface Web என்பது நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் இணையம் ஆகும். தேடுபொறிகளில் தரவரிசைப்படுத்தப்படும் தகவல்கள், வலைத்தளங்கள், சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தப்படும்  தகவல்கள் போன்ற அனைத்தும் இந்த Surface Web என்பதில் அடங்கும். மேலே குறிப்பிட்டுள்ளதை போல மொத்த இணையத்தில் கிட்டத்தட்ட 4% ஐ Surface Web கொண்டுள்ளது. இந்த Surface Web ஐ சாதாரணமாக எல்லோராலும் அணுக முடியும். 

[2] Deep Web

Deep Web என்பது நாம் சாதாரணமாக அணுக முடியாத இணையத்தின் பகுதியாகும். அதாவது Deep web இல் உள்ள தகவல்கள் தேடுபொறிகளினால் வரிசைப்படுத்தப்பட்டிருக்காது. இங்கு தனிப்பட்ட தரவுத்தளங்கள், நிறுவனமொன்றின் தனிப்பட்ட தரவுகள், அரசாங்கத்தினுடைய தரவுகள், தனி நபர்களின் தரவுகள் போன்றவை Deep web என்பதில் காணப்படுகின்றன. இது மொத்த இணையத்தில் கிட்டத்தட்ட 90% தகவல்களைக் கொண்டுள்ளது. இணையத்தில் அதிகளவு தகவல்களை கொண்ட பகுதியாக Deep web காணப்படுகின்றது. 

[3] Dark web

Dark web என்பதும் நாம் சாதாரணமாக அணுக முடியாத இணையத்தின் பகுதியாகும். இந்த Dark web இணையத்தளங்களும் தேடுபொறிகளினால் வரிசைப்படுத்தப்பட்டிருக்காது. இங்கு காணப்படுகின்ற இணையத்தளங்கள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இது மொத்த இணையத்தில் கிட்டத்தட்ட 6% இனை கொண்டுள்ளது. Dark-web தான் இணையக்குற்றங்கள் அதிகளவு நடைபெறுகின்ற இணையத்தின் பகுதியாகும்.

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் இணையத்தில் காணப்படும் தகவல்களை விட Deep Web, Dark Web இல் அதிகளவான தகவல்கள் காணப்படுகின்றன என்பது இப்போது புரிந்திருக்கும்.

டார்க் வெப்பின் செயற்பாடு

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் உலாவிகளைக் (Browsers) கொண்டு டார்க் வெப் இணையத்தளங்களைப் பயன்படுத்த முடியாது. நீங்கள் டார்க் வெப்பினுள் நுழைய பிரத்தியேகமாக சில உலாவிகள் காணப்படுகின்றன. அவற்றுள் Tor Browser மிகவும் அதிகளவாக பயன்படுத்தப்படுகின்றது. அதனை இணையத்தில் இருந்து இலவசமாகவே தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

நீங்கள் டார்க் வெப்பில் உலாவுகின்ற போது அல்லது எதையாவது தேடுகின்ற போது நீங்கள் தேடுகின்ற விடயம் Encrypt ஆகியே செல்கின்றமையால் யாராலும் நீங்கள் என்ன தேடுகின்றீர்கள் என்பதை பார்க்க முடியாது.

Tor உலாவியைப் பயன்படுத்தி தேடுகின்ற போது தேடுகின்ற விடயம் பல சேவையகங்களின் (Server) ஊடாகச் சென்றுதான் உங்களுக்கான பதிலை கொண்டுவருவதனால் டார்க்வெப் Server-கள் எங்கிருந்து செயற்படுகின்றன. டார்க் வெப்பில் யார் இருக்கின்றனர் போன்றவற்றை யாராலும் கண்காணிக்கமுடியாது. 

டார்க் வெப்பின் ஆபத்து

மேலே குறிப்பிட்டது போலவே டார்க் வெப்பில் யார் யார் இருக்கின்றனர், எங்கிருந்து செயற்படுகின்றனரென யாராலும் கண்காணிக்க முடியாது. டார்க் வெப்பில் குற்றச்செயல்களை செய்பவர்களை கண்டுபிடிப்பது கடினம் என்பதனால் இணையக் குற்றங்களில் அநேகமானவை இங்குதான் நடைபெறுகின்றன. சட்டவிரோதமான வியாபாரங்கள், ஹக்கிங் போன்று டார்க் வெப்பில் எல்லாவிதமான சட்டவிரோத செயற்பாடுகளும் இங்கு நடைபெறுகின்றன.

டார்க் வெப் பயன்படுத்துவது ஆபத்தானதா? என்ற கேள்வி உங்கள் மனதிலும் எழுந்திருக்கும். நமக்குப் பரீட்சயமில்லாத இணையத்திற்குள் நாம் கவனமாக இருக்காவிட்டால் நிச்சயமாக ஆபத்தில்தான் முடியும். டார்க்வெப்பிற்கு உள்ளே சென்றால் எங்களுடைய தரவுகளை நாங்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். டார்க் வெப்பை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என தெரிந்து பயன்படுத்த வேண்டும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading