கிரிப்டோகரன்சி என்றால் என்ன?

Last updated on January 31st, 2024 at 09:14 pm

கிரிப்டோகரன்சி என்பது டிஜிற்றல் வடிவிலான பணம் என்று சொல்லலாம். கிரிப்டோகரன்சிகள் நாம் சாதாரணமாகப் பயன்படுத்துகின்ற ரூபாய், டொலர், பவுண்ட், யூரோ போன்ற நாணயங்களைப் போல கைகளால் தொட்டுரணக்கூடிய பணமாக இருக்காது.

கிரிப்டோகரன்சிக்கு வடிவம் கிடையாது. கிரிப்டோகரன்சி இணையத்தினைப் பயன்படுத்தி மட்டுமே பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். கிரிப்டோகரன்சி Digital Currency, Virtual Currency போன்று பலவகையான பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

சாதாரணமாகப் பயன்படுத்துகின்ற பணத்தை வங்கியில் சேமித்துக்கொள்ள முடியும். கைகளில் பணத்தை எடுத்து பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். இதுவே கிரிப்டோகரன்சியாக இருந்தால் வங்கியில் சேமிக்கமுடியாது. கிரிப்டோகரன்சி வெலெட்களில் (Cryptocurrency Wallet) டிஜிற்றலில் விர்ச்சுவலாக சேமித்துக்கொள்ளவும் பரிமாற்றம் செய்துகொள்ளவும் முடியும்.

சாதாரணமாகப் பயன்படுத்துகின்ற பணத்தில் டொலர், பவுண்ட், ரூபாய் போன்று பலவகையான பணங்கள் இருப்பது போலவே கிரிப்டோ கரன்சியிலும் Bitcoin, Ethereum, Lite coin, Polygon போன்ற பல வகையான ஆயிரக்கணக்கான கிரிப்டோகரன்சிகள் உள்ளன.

Cryptocurrency

இன்றைக்கு ஏராளமான கிரிப்டோகரன்சிகள் புழக்கத்தில் உள்ளன. எல்லா கிரிப்டோகரன்சிகளுக்கும் முன்னோடி பிட்கொயின் (Bitcoin) ஆகும். இன்றும் கூட அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற, பிரபல்யமான, பெறுமதி கூடிய கிரிப்டோகரன்சி பிட்காயினாகவே உள்ளது.

பிட்கொயின் கரன்சியை சதொசி நாகமொட்டோ எனும் கணணி நிரலாளர் 2009 ஆம் ஆண்டு உருவாக்கினார். ஆரம்பத்தில் பிட்கொயினின் பயன்பாடும் பெறுமதியும் மிக மிக குறைவாகவே இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல மிகப்பெரியளவில் வளர்ந்தது. பிட்கொயின் போன்ற நிறைய கிரிப்டோகரன்சிகளும் உருவாக்கப்பட்டன. கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்துவது, Mining செய்வது போன்றவை வணிகமாகவே மாறிவிட்டது.

நிறைய நாடுகள் கிரிப்டோகரன்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும் இன்று உலகளவில் வணிகப் பரிமாற்றங்களில் கிரிப்டோகரன்சியும் பயன்படுத்தப்படுகின்றது.

கிரிப்டோகரன்சியானது ப்ளொக்செயின் (Blockchain) எனும் தொழினுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்குகின்றது. பிளொக்செயின் தொழினுட்பத்தின் மூலமாக வங்கி போன்று நடுநிலையில் யாரும் இல்லாமல் இரண்டு நபர்களிடையே கிரிப்டோகரன்சி பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். பிளொக்செயின் தொழினுட்பம் மிகவும் பாதுகாப்பானது. இதன் மூலமாக கிரிப்டோகரன்சியை திருடுவது, Hack செய்வது போன்ற செயற்பாடுகள் நடக்காது.

கிரிப்டோகரன்சியை கொள்வனவு செய்து பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தலாம். முதலீடுகளும் கிரிப்டோகரன்சியில் செய்து பணம் சம்பாதிக்கலாம். ஆனால் கிரிப்டோகரன்சியில் முதலிடுவது ஆபத்தானதாக அமையலாம். சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்ற பணமாக இருந்தால் பணத்திற்குப் பொறுப்பாக அரசாங்கம், வங்கி போன்றவை இருக்கும்.

இதுவே கிரிப்டோகரன்சியாக இருந்தால் யாரும் அப்படியில்லை. இரண்டு நபர்களிற்கிடையிலான தனிப்பட்ட பரிமாற்றமாகவே இருக்கும். உலகம் முழுவதற்கும் கிரிப்டோகரன்சி முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று இல்லை. கிரிப்டோகரன்சியின் பெறுமதி எப்போது அதிகரிக்கும், குறையும் என்பது தெரியாது போன்ற சில சிக்கல்களும் இருக்கின்றன.

எவ்வாறினும் கிரிப்டோகரன்சி என்பது வளர்ந்துவருகின்ற தொழினுட்பம்தான். WEB 3.0 வளர்ந்துவரும் போது அங்கே பணப்பரிமாற்றம் செய்வதற்கு கிரிப்டோகரன்சியின் பயன்பாடு அதிகமாக இருக்கலாம்.

நம்மால் எதையும் இன்றைக்கே சொல்லிவிட முடியாது. காலம் செல்லச் செல்ல தொழினுட்பங்கள் வளரும் போதுதான் நம்மால் எதனையும் கூறமுடியும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading