Content Writing என்றால் என்ன?

Last updated on August 28th, 2023 at 01:26 pm

இன்றைய கால மார்க்கெட்டிங் பெரும்பாலும் டிஜிற்றல் மயமாகிவிட்டது. மார்க்கெட்டிங் செய்வதற்கு டிஜிற்றல் மார்க்கெட்டிங் முறையே பயன்படுத்தப்படுகிறது. டிஜிற்றல் மார்க்கெட்டிங்-இல் Content Writing இனுடைய பங்கு மிகவும் முக்கியமானது.

டிஜிற்றல் மார்க்கெட்டிங்கிற்கு அவசியமான Content Writing துறையை நாம் சரியாக பயன்படுத்தினால் பணம் சம்பாதிப்பதற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். Content Writing பற்றி தெரிந்துகொள்ள முன் Content பற்றி தெரிந்துகொள்வோம்.

Content என்றால் என்ன?

Content என்பது தமிழில் உள்ளடக்கம் என்று பொருள். Content ஆனது எழுத்து, வீடியோ, ஆடியோ போன்ற ஏதேனுமொரு வடிவத்தில் காணப்படும். அவற்றிலிருந்து நம்மால் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமாகவிருந்தால் Content என்று அழைக்கலாம்.

உதாரணமாக, இணையத்தளம் ஒன்றில் உள்ள Article-ஐ எடுத்துக்கொண்டால் அது எழுத்து வடிவில் உள்ள Content ஆகும். யூரியூப்-இல் உள்ள காணொளி ஒன்றை எடுத்துக்கொண்டால் அது Video Content ஆகும். அதே போல Podcast ஒன்றை எடுத்துக்கொண்டால் அதில் உள்ளது Audio Content ஆகும். இவ்வாறு Content பல்வேறு வடிவங்களில் காணப்படுகிறது.

எல்லா இடங்களிலும் வகை வகையாக Content உள்ளது. Article, Social Media Post, E-mail, Blog post, E-book, News Report, Memes, Videos, Research Papers, Product Review, Advertisement, Photo, Podcast போன்ற எல்லாமே ஏதோதொரு வடிவில் Content ஆக இருக்கும்.

டிஜிற்றில் மார்க்கெட்டிங்-இல் எல்லா வகையான Content-ம் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வகையான Content-ஐயும் வைத்து வெவ்வேறு விதமாக மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது.

Content Writing என்றால் என்ன?

Content Writing என்றால் என்ன? என்பதை ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், எழுத்து வடிவில் Content ஒன்றை உருவாக்கும் செயற்பாடு Content Writing ஆகும்.

எழுத்து என்பது மிகச்சிறந்த கருவி. எழுத்து மூலமாக எமது யோசனைகளை, எண்ணங்களை, சிந்தனைகளை தெளிவாக வெளிப்படுத்த முடியும். மார்க்கெட்டிங் செய்வதாக இருந்தால் ஒரு பொருளை பற்றியோ சேவைகளை பற்றியோ எழுத்து மூலமாக தெளிவாக சொல்ல முடியும். நாம் சொல்ல விரும்புகிற விடயங்களை எழுத்து மூலமாக மக்களிடம் கொண்டுசேர்க்க முடியும்.

எழுத்து எனும் கருவி மார்க்கெட்டிங்கிற்கு உதவியாகவும் இலகுவாகவும் இருக்கிறது. இதனால் தேவையான Content சரியாக திட்டமிடப்பட்டு எழுத்து வடிவத்தில் உருவாக்கப்பட்டு மக்களிடம் கொண்டுசேர்க்கப்படுகிறது. இந்த செயற்பாடுதான் Content Writing ஆகும்.

Content Writing இல் ஈடுபடுகிறவர்கள் Content Writers என்று அழைக்கப்படுவார்கள்.

டிஜிற்றலில் எங்கெல்லாம் Content Writing பயன்படுத்தப்படுகிறது

டிஜிற்றலில் எல்லா இடங்களிலுமே Content Writing உள்ளது. இணையத்தளங்களில் அந்த இணையத்தளம் பற்றியும் அவற்றில் கிடைக்கும் சேவைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பவை Content ஆகும்.

பொருட்கள் விற்பனை செய்யும் இணையத்தளங்களில் பொருட்கள் பற்றி விளக்கங்கள், பொருட்கள் பற்றி எழுதப்பட்டிருக்கும் Reviews போன்றவை Content ஆகும்.

வலைத்தளங்களில் உள்ள Articles Content ஆகும். நீங்கள் இப்போது வாசித்துக்கொண்டிரும் இந்த கட்டுரையான What is Content Writing in Tamil என்பதும் ஒரு Content ஆகும்.

சமூக வலைத்தளங்களில் ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதற்காக நிறைய Posts போடுவார்கள் இவற்றில் எழுத்தப்படும் விடயங்களும் Content Writing ஆகும்.

உங்களுடைய மின்னஞ்சலை திறந்து பாருங்கள். அங்கே பல நிறுவனங்களிலிருந்து விளம்பரங்களை கொண்ட மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டிருக்கும். அங்கேயும் உங்களை கவரக்கூடிய வகையில் நிறையவே எழுதப்பட்டிருக்கும். அவையும் Content Writing ஆகும்.

இவை போன்று பல இடங்களிலும் Content Writing-ஐ நம்மால் அவதானிக்க முடியும்.

Content Writing-இன் முக்கியத்துவம்

ஒரு நபர் கூகுளில் ஒரு பொருளை பற்றி தேடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். தேடல் முடிவுகளாக நிறைய இணையத்தளங்கள் வரிசைப்படுத்தப்படும். முதலாவதாக வருகிற இணையத்தளத்திற்குள் அந்த நபர் பிரவேசிக்கிறார்.

இந்த இடத்தில் குறிப்பிட்ட இணையத்தளம் கூகுளில் முதலாவதாக வருவதில் அங்கே எழுதப்பட்டுள் Content இனுடைய பங்கு அதிகமாக இருக்கிறது. கூகுள் போன்ற தேடுபொறிகளிற்கு ஏற்றால் போல SEO செய்து எழுதப்பட்டிருந்தாலே இணையத்தளத்தை முன்னிலைக்கு கொண்டுவர முடியும்.

அதே போல, அந்த இணையத்தளத்தில் உள்ள விடயங்கள் (Content) அவருக்கு பிடித்திருந்தால் மட்டும்தான பொருளை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

என்னதான் இணையத்தளத்தின் வடிவமைப்பு நன்றாக இருந்தாலும் இணையத்தளத்திற்கு வருகிற நபர் Content-ஐ வைத்துத்தான் பொருளை வாங்குவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்வார். அங்கே சொல்லப்பட்டுள்ள Content அவ்வளவு முக்கியமானது.

இணையத்தளத்தல் உள்ள Article, சமூகவலைத்தளத்தில் உள்ள Post, விளம்பரத்தை கொண்ட Promotion Mail எதுவாக இருந்தாலும் அங்கே உள்ள Content பார்ப்பவரை கவரக்கூடியதாக இருந்தால் மட்டுமே மார்க்கெட்டிங் வெற்றியடையும்.

Content Writing என்பது மக்களை ஈர்க்ககூடிய வகையில் எழுதுவது என்பதற்காக எல்லோராலும் அதனை செய்ய முடியாது. Content Writing இல் நிறைய வகைகள் இருக்கின்றன. Technical Writing, Copy Writing, SEO Writing, Blog Post Writing, Book Writing, Article Writing போன்று ஏராளமான Content Writing வகைகள் உள்ளன.

ஒவ்வொரு Writing எழுதுவதற்கும் அது தொடர்பான திறமையும் அறிவும் இருக்க வேண்டும். உதாரணமாக இணையத்தளம் ஒன்றிற்கு SEO Writing என்பது மிகவும் முக்கியமானது. SEO தொடர்பான அறிவு இருக்கிற நபரால் மட்டும்தான் வலைத்தளத்திற்கு தேவையான Content-ஐ SEO-விற்கு ஏற்றால் போல் எழுத முடியும். அதே போல Technical விடயத்தை இலகுவாக எழுதி புரியவைக்க முடிந்தவரால்தான் Technical Writing எழுத முடியும்.

எப்படியிருந்தாலும் டிஜிற்றல் மார்க்கெட்டிங் செயற்பாடு சரியாக அமைய வேண்டும் என்றால் Content Writing-இல் சரியான கவனம் செலுத்துவது அவசியமாகும்.

Content Writing மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி?

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று Content Writing ஆகும். Content Writing கற்றுக்கொண்டால் இணையத்தை பயன்படுத்தி வீட்டிலிருந்தே பல வழிகளிலும் சம்பாதிக்கலாம்.

ஒரு விடயத்தை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். Content Writing மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் எழுதத்தெரிவதற்கு மேலதிகமாக Article ஒன்றை SEO-விற்கு ஏற்றால் போல எழுதுவது போன்ற சில விடயங்களை தெரிந்து வைத்திருப்பது நல்லது. அத்துடன் Content Writing இல் ஆர்வம் இருக்க வேண்டும்.

Content Writing மூலம் பணம் சம்பாதிக்ககூடிய வழிகளில் எல்லோராலும் செய்யக்கூடியது Freelancing ஆகும். Freelancing இணையத்தளங்களிற்கு சென்றால் Content Writers-ஐ நிறைய பேர் Hire செய்வார்கள். அவர்களுடைய தேவைகளிற்காக உங்களிடம் பணத்தை தந்து Content Write செய்து வாங்கி கொள்வார்கள்.

நாம் ஒரு இணையத்தளத்தை ஆரம்பித்து அதில் எழுதலாம். எங்களுடைய இணையத்தளத்திற்கு நிறைய நபர்கள் வந்து Content-ஐ படிப்பார்களானால் எங்களுடைய இணையத்தளத்திலிருந்து பணம் வருவதற்கான நிறைய வாய்ப்புக்களை உருவாக்கலாம்.

நம்மால் ஒர் இணையத்தளத்தை ஆரம்பிக்க முடியாவிட்டால் மற்றவர்களுடைய இணையத்தளங்கள், வலைப்பதிவுகளிற்கு நாம் Articles எழுதி கொடுத்து அதிலிருந்து நம்மால் சம்பாதித்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஏற்கனவே நீங்கள் எழுதி வைத்திருக்கிற Content-ஐ விற்பனை செய்வதன் மூலமாகவும் சம்பாதித்துக்கொள்ளலாம். இணையத்தளங்கள் வைத்திருப்பவர்கள் தமது இணையத்தளங்கள் பிரசுரிப்பதற்காக அவற்றை பணம் கொடுத்து வாங்கிகொள்வார்கள்.

இணையத்தளங்களில் எல்லாம் என்னால் எழுத முடியாது என்றால், நாம் சொல்ல விரும்புகிற விடயங்களை E-book ஆக எழுதி இணையத்தில் வெளியிடலாம். E-book எழுதி அவற்றை விற்பனை செய்வதன் மூலமாக நிறைய சம்பாதிக்கிறார்கள்.

இவற்றை போல Content Writing மூலமாக பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் இணையத்தில் நிறையவே இருக்கின்றன. நாம் Content Writing பற்றி தெரிந்துகொண்டு அவற்றை சரியாக பயன்படுத்தினால் பணம் சம்பாதிக்கலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading