ChatGPT என்றால் என்ன?

Last updated on January 22nd, 2024 at 07:40 pm

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புதிய தொழிநுட்பங்களைப் பற்றி உலகளவில் வைரலாக (Trending) மக்களால் பேசப்பட்டுக்கொண்டிருக்கும். சமீபகாலமாக வைரலாக பேசப்படுகின்ற விடயங்களில் ChatGPT முக்கியமானது.

ChatGPT என்பது ஒரு செயற்கை நுண்ணறிவுத் தொழினுட்பம். செயற்கை நுண்ணறிவுத் தொழினுட்பத்தைப் பற்றிய கதையை மையமாக கொண்ட திரைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதிலே வருகிற ரோபோக்களால் மனிதனால் கேட்கப்படுகின்ற எல்லாவிதமான கேள்விகளுக்கும் பதில் கூற முடியும்.

ChatGPT என்பது கிட்டத்தட்ட அதே போன்ற தொழினுட்பம்தான். ஆனால் திரைப்படங்களில் காட்டப்படுவது போன்று மனிதனை போன்ற உருவம் கொண்ட ரோபோ நம்முடன் குரல் வழியாக உரையாடலை மேற்கொள்ளாது.

அதற்குப்பதிலாக, ரோபோ இணையத்தில் ஒரு Application ஆக இருக்கிறது என்று சொல்லலாம். அதில் உள்ள Bot உடன் நாம் Chat செய்து கேள்விகளை கேட்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கே நாம் கேள்விகள் கேட்கலாம், உரையாடலாம், உதவிகள் கேட்கலாம். அங்கே உள்ள ரோபோ நமக்கு தேவையான பதில்களை தந்து உதவி செய்யும்.

ChatGPT என்பதில் GPT என்பதன் விரிவாக்கம் Generative Pre-trained Transformer என்பதாகும். ChatGPT பயிற்சியளிக்கப்பட்ட ரோபோ என்று சொல்லலாம். அதிகமான தரவுகள் உள்ளீடாக கொடுக்கப்பட்டு நடைமுறைக்கு ஏற்றாற்போல பதில்கள் சொல்லும் வகையில் ChatGPT பயிற்சியளிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் கேள்வி கேட்கும் போது அந்தத் தரவுகளை வைத்து கேள்விக்கு ஏற்றாற்போல பதில்களை ChatGPT வழங்குகிறது.

ChatGPT-ஐ உருவாக்கியது OpenAI எனும் நிறுவனம். OpenAI நிறுவனம் 2015 இல் நிறைய பேர் இணைந்து ஆரம்பித்த நிறுவனம். இந் நிறுவனத்தை ஆரம்பித்தவர்களில் எலான்மஸ்கும் ஒருவராக உள்ளார்.

ChatGPT நவம்பர் மாதம் 2022-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ChatGPT-ன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் SignUp செய்து ChatGPT-ஐ பயன்படுத்த முடியும்.

ChatGPT நிறைய விடயங்களில் தேடுபொறிகளை விட Advance ஆக உள்ளது. அதனாலேயே கூகுள் மாதிரியான தேடுபொறிகளுக்கு மாற்றாக ChatGPT-ஐ பயன்படுத்தலாம் என்ற கருத்து நிலவுகிறது.

மைக்ரோசொப்ட் நிறுவனமும் ChatGPT-யில் முதலீடு செய்துள்ளது. மைக்ரோசொட்டின் தேடுபொறியான Bing-இல் ChatGPT-யின் தொழினுட்பத்தை பயன்படுத்தப்போகிறார்கள். இது Bing தேடுபொறியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதால் கூகுளிற்கு போட்டியாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் மாதிரியான தேடுபொறிகளிற்கும் ChatGPT-க்கும் உள்ள வித்தியாசம் கூகுளில் ஒரு விடயத்தை தேடினால் அது முடிவுகளாக நிறைய இணையத்தளங்களை வரிசைப்படுத்தும். இதுவே ChatGPT-ல் ஒரு விடயத்தை கேட்டால் தன்னிடம் உள்ள தரவுகளை வைத்து பதிலை வழங்கும்.

இவற்றையெல்லாம் தாண்டி கூகுளால் செய்ய முடியாத பலவற்றையும் ChatGPT செய்கிறது. நீங்கள் எழுதிய Coding-ஐ ChatGPT-யிடம் கொடுத்தால் அதில் உள்ள தவறுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்கிறது, உங்களுக்கு கதை ஒன்று சொல்ல வேண்டும் என கேட்டால் அது கதை சொல்லும், எப்படி ஒரு விடயத்தை செய்வது என்று கேட்டால் அதற்கான படிமுறைகளை சொல்லும், எனக்கு Love Letter எழுதித்தரச் சொன்னால் அதனையும் ChatGPT எழுதித்தரும்.

ChatGPT இவ்வளவு Advanced இருப்பதால் கூகுளை அழித்துவிடுமா? கூகுளை பயன்படுத்துபவர்கள் ChatGPT-க்கு மாறிவிடுவார்களா? என்று கேட்டால் தற்போதைக்கு அது சாத்தியமில்லை.

ChatGPT-யிடம் இருப்பது 2021-இற்கு முற்பட்ட தரவுகளே. அதற்கு பின்னரான தரவுகள் ChatGPT-யிடம் இல்லை. கூகுளில் ஒரு விடயத்தை தேடினால் இந்த நொடி வரை உள்ள தரவுகளை வைத்து காட்சிப்படுத்தும்.

அதே போல ChatGPT என்பது ஒரே ஒரு AI. ஒரேயொரு AI சொல்வதை சரியென்று எடுத்துக்கொள்ள முடியாது. இதனை வைத்து உலகளவில் தவறான கருத்துக்களையும் பரப்ப முடியும். கூகுளாக இருந்தால் உலகில் பல்வேறு வலைத்தளங்களையும் முடிவுகளாக வரிசைப்படுத்தும். அங்கே வெவ்வேறு பிரதேசங்களில் உள்ள பல மனிதர்களினதும் கருத்துக்களை நம்மால் உள்வாங்கக்கூடியதாக இருக்கும்.

ChatGPT இன் அறிமுகம் மனிதர்களுடைய வேலைவாய்ப்புக்கள் பறிபோகும் என்ற கருத்துக்களும் இணையத்தில் உலாவருகின்றன. ஒவ்வொரு தொழினுட்பமும் அறிமுகம் செய்யும் போதும் மனிதர்களுடைய வேலை பறிபோகும் என்ற கருத்து நிலவுவது வழமையானதுதான்.

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழினுட்பத்தினால் நிறைய வேலைவாய்ப்புக்கள் இழக்கப்படும் என்பது உண்மை. அதே நேரம் பல புதிய வேலைகளும் உருவாகலாம்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புதிய தொழினுட்பங்கள் உருவாகிக்கொண்டும் அவை வளர்ந்துகொண்டும்தான் இருக்கும். நாம் புதிய தொழினுட்பங்களுக்கேற்ப நம்மை நாமே தகவமைத்துக்கொண்டு அவற்றுடன் இணைந்து வாழ வேண்டும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

4 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading