Blogging என்றால் என்ன?

Last updated on January 22nd, 2024 at 07:28 pm

நிகழ்நிலையில் (Online) பணம் சம்பாதிப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. அவற்றுள் Blogging என்பது மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்று. நமக்குத் தெரிந்த விடயங்களை இணையத்தில் எழுத்து வடிவில் கொண்டுபோய்ச் சேர்க்கும் வழி Blogging ஆகும்.

Blog என்ற வார்த்தை Weblog என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இணையத்தின் ஆரம்ப காலகட்டத்தில் டயரி எழுதுவதைப் போலவே இணையத்திலும் பலர் எழுதினார்கள். அதனால் அது Web log என்று அழைக்கப்பட்டது.

பின்னர் Weblog என்பது blog ஆக மாற்றமடைந்தது. நாம் இணையத்தில் எழுதுகின்ற தளம்தான் Blog ஆகும். Blog இல் நாம் எழுத விரும்புகின்ற விடயங்களை பதிவுகளாக (Posts) எழுதக்கூடியதாக இருக்கின்றது.

Weblog என்ற வார்த்தைக்கு தமிழில் Web என்பதற்கு “வலை” என்றும் Log என்பதற்கு “பதிவு” என்றும் பொருள் வரும். இதனை வைத்துத்தான் Blog என்ற சொல்லிற்கான தமிழ் அர்த்தம் “வலைப்பதிவு” என்று சொல்லப்படுகின்றது.

Blogging என்றால் என்ன?

ஆரம்பத்தில் கூறியது போலவே Blog என்பது இணையத்தில் எழுதுவதற்கான தளத்தை குறிக்கின்றது. Blogging என்பது Blog தளத்தில் எழுதுவதையே குறிக்கின்றது.

உங்களுக்குத் தெரிந்த விடயங்கள், கருத்துக்கள், எண்ணங்கள், சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கின்ற விடயங்களை இணையத்தில் எழுத்து வடிவத்தின் மூலமாக மக்களுடன் பகிர்ந்து கொள்வதை Blogging என்று சொல்லலாம்.

உதாரணமாக, நான் இப்போது எழுதிக்கொண்டிருப்பதும் ஒரு Blog-தான். நான் எனக்கு தெரிந்த விடயங்களையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிற விடயங்களையும் உங்களுடன் எழுத்து வடிவில் பகிர்ந்துகொள்கின்றேன்.

ஆரம்ப காலகட்டத்தில் Blog என்பது தங்களுடைய கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதாகவே Blog-கள் இருந்தன. இப்போது Blogging என்பது பணம் சம்பாதிக்கக்கூடிய துறையாகவே மாறிவிட்டது.

நிறையப்பேருக்கு Blogging என்ற ஒரு விடயம் பற்றி தெரியாது. சில பேர் Blogging-ஐ சிறிதாக ஆரம்பித்து பின்னர் அதையே முழுநேர வேலையாக செய்து நிறைய சம்பாதிக்கின்றார்கள். நீங்களும் உங்களுக்கு தெரிந்த விடயத்தை தலைப்பாக (Topic) வைத்து தொடர்ச்சியாக எழுதினால் Blogging மூலமாக நிறையவே சம்பாதித்துக்கொள்ள முடியும்.

உதாரணமாக, நீங்கள் அதிகமாக பயணம் செய்கிறீர்கள் என்றால் Travel Blog ஆரம்பிக்கலாம். தேநீர் பற்றி அதிகம் தெரியும் என்றால் விதம் விதமான தேநீர்களை பற்றியும், அவற்றை தயாரிக்கும் முறைகள், உபகரணங்கள் பற்றியும், பல விதமான தேனீர் சுவைகள் பற்றியும் கூறி Tea Blog எழுதலாம்.

Blogging என்பது, உங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் எழுத்து வடிவில் பகிர்ந்து கொள்வதே ஆகும். ஆகவே, உங்களுக்கு தெரிந்ததை எழுத ஆரம்பிக்கலாம்.

Blog எழுதுவதற்கான தளங்கள்?

Blogging என்பது இணையத்தில் எழுதுவது என்று சொல்லிவிட்டேன். இணையத்தில் எங்கே எழுதலாம், அதற்கான தளங்கள் பற்றி பார்க்கலாம்.

Blog எழுதுவதற்கென நிறைய தளங்கள் இருக்கின்றன. உதாரணமாக Blogger, WordPress.com, WordPress, Medium, Wix, Squarespace போன்ற தளங்களை சொல்லலாம். Blogging தளங்களில் நீங்கள் உங்களுக்கென கணக்கு உருவாக்கி அதில் எழுதலாம்.

ஆனால், நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும், உங்களுக்கான Brand ஒன்றை உருவாக்க வேண்டும் என நினைத்தால் சொந்தமாக ஒரு Domain மற்றும் Hosting வாங்கி இணையத்தளம் போன்று உருவாக்கி அதில் நீங்கள் எழுதலாம். அதற்கு WordPress போன்றவை உதவியாக இருக்கும்.

நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் Tamil Blog தளமானது நான் சொந்தமாக Domain மற்றும் Hosting வாங்கி அதில் WordPress இன்ஸ்டால் செய்து சொந்தமாக இணையத்தளம் உருவாக்கி எழுதுகிறேன்.

WordPress-இல் Blogging ஆரம்பிக்க Hosting மற்றும் Domain வாங்க வேண்டிய தேவை இருப்பதால் பணம் தேவைப்படும். வேட்பிரஸில் ஆரம்பிக்கின்ற Blog உங்களுக்கு சொந்தமானதாக எப்போதும் இருக்கும்.

நீங்கள் Blogging இற்கு புதியவராக இருந்தால் Blogger மாதிரியான தளங்கள் போதுமானது. இதிலும் நிறைய வசதிகள் இருக்கின்றன. Blogger தளத்தில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் WordPress ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்களை பொறுத்து உங்களுக்கு ஏற்றாற்போல Blog தளத்தை தெரிவு செய்து எழுதலாம்.

Blog எழுதுவது எப்படி?

Blogging

உங்களுடைய Blog இல் உள்ள பதிவுகள் ஒரு Niche இல் தெரிவு செய்து எழுதுவது சிறந்தது. Niche என்பது வலைப்பதிவு எந்த Topic என்பதை குறிப்பது ஆகும். உங்களுக்குத் தெரிந்த விடயத்தை அல்லது எந்த விடயத்தில் அதிகமான ஆர்வம் இருக்கின்றதோ வலைப்பதிவின் Niche ஆக தெரிவு செய்யலாம்.

Niche என்று எடுத்துக்கொள்ளும் போது நிறைய வகையான Niche-களை கொண்ட Blog-கள் இருக்கின்றன. Food Blogs, Travel Blogs, Fashion Blogs, Lifestyle Blogs, Sports Blogs, Business Blogs, Tech Blogs, News Blogs, Movie Blogs என நிறைய வகைகளில் Blog எழுத முடியும். நீங்களும் உங்களுக்கு விருப்பமான தலைப்பை தெரிவு செய்து எழுத ஆரம்பிக்கலாம்.

எல்லாவற்றையும் விட Blog எழுதுவதில் ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வம் இல்லையென்றால் நிச்சயமாக Blogging செய்யாதீர்கள். எந்த விடயமாக இருந்தாலும் ஆர்வத்துடன் செய்தால்தான் வெற்றி கிடைக்கும்.

எழுதுவதற்கு மொழி அவசியம். எந்த மொழியில் Blog ஆரம்பிக்க வேண்டும். எந்த மொழியில் வேண்டுமானாலும் Blog தொடங்கலாம். தமிழ், ஆங்கிலம் இரண்டில் உங்களுக்கு பொருத்தமானதை தெரிவு செய்து எழுதலாம்.

ஆங்கிலம் உலகில் பொதுவாக பயன்படுத்துகின்ற மொழி என்பதால் ஆங்கிலத்தில் எழுதும் Blog-களிற்கு உலகில் எல்லா நாடுகளிலிருந்தும் நிறைய பார்வையாளர்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதுவே, தாய்மொழியாக இருந்தால் நமது Blog குறிப்பிட்டளவு மக்களையே சென்றடையும். இதனைத் தவிர, ஆங்கிலத்தில் Blog எழுதினால் Us, Uk போன்ற நாடுகளிலிருந்து அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள். இதனால் அதிகமான பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக கிடைக்கும்.

தமிழில் எழுதக்கூடாதா? என்று கேட்டால் அப்படி சொல்லவில்லை. தமிழ் நமது தாய்மொழி ஆகவே தமிழிலும் எழுத முடியும். வருமானம், பார்வையாளர்கள் என சில விடயங்களை ஒப்பிட்டு பார்த்தால் ஆங்கிலம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பதே உண்மை.

எந்த மொழியில் Blog தொடங்க வேண்டும் என்பது உங்களுடைய விருப்பம்தான். தமிழில் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றது, போட்டியும் குறைவு என்பதால் தமிழிலும் நிறையவே எழுதலாம்.

தமிழில் இருக்கின்ற நியூஸ், சினிமா போன்ற வெப்சைட்டுகள் பெரியளவில் வளர்சியடைந்துள்ளன. உலகளவில் தமிழில் வாசிப்பதற்கென நிறைய பேர் ஆர்வம் காட்டுகின்றனர்.

நீங்கள்தான் எப்படி எழுதினால் அதிகமான பார்வையாளர்களை பெற முடியும் என யோசித்து எழுத வேண்டும். உங்களிற்கென ஒரு தனித்துவத்தை பின்பற்ற வேண்டும்.

Blogging மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி?

Money

ஒருவர் Blog ஆரம்பிப்பதற்கு என்னதான் பல்வேறு காரணங்களை கூறினாலும் பலருடைய பிரதானமான நோக்கம் பணம் சம்பாதிப்பதாகவே இருக்கும்.

Blog மூலமாக சம்பாதிக்க முடியுமா என்று கேட்டால், உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய அளவுக்கு சம்பாதிக்க முடியும். ஆனால் Blog ஆரம்பித்த உடனே எதிர்பார்ப்பது போல நிறைய வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாது. நினைப்பதனை போல பணம் சம்பாதிப்பதற்கு காலம் எடுக்கும்.

அதெல்லாம் சரி, எப்படித்தான் Blogging மூலமாக பணம் சம்பாதிப்பது. Blogging இல் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் இருக்கின்றன. ஆரம்பகட்டத்தில்  உங்களுடைய Blog-இன் பிரதானமாக வருமானது கூகுள் அட்சென்ஸ் மூலமாக கிடைக்கும். 

கூகுள் அட்சென்ஸ் என்பது கூகுளின் உதவியுடன் உங்களுடைய வலைப்பதிவில் விளம்பரங்களை காட்சிப்படுத்தி அதிலிருந்து பணம் சம்பாதிக்கக்கூடிய வழியாகும். 

கூகுள் அட்சென்ஸ் தவிர Ad Networks மூலமாக Blog-ல் விளம்பரங்களை காட்சிப்படுத்தி சம்பாதிக்கலாம், Affiliate Marketing மூலமாக பணம் சம்பாதிக்கலாம், Sponsored Posts எழுதலாம், Paid Reviews எழுதுவது, Paid Promotions செய்வது, பொருட்களை விற்பனை செய்வது போன்று சம்பாதிக்க பல வழிகள் இருக்கின்றன. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது. தனித்துவமான நல்ல விடயங்களை எழுதி அதிகமான பார்வையாளர்களை கொண்டுவர வேண்டும்.

Blogging-இனால் ஏற்படும் பயன்கள்

Blogging என்பது பணம் சம்பாதிப்பதற்காக மட்டும்தானா என்றால் நிறைய பேர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக மட்டும்தான் Blogging செய்கிறார்கள். ஆனால், பணத்தை விடவும் Blogging இனால் வேறு நிறைய பயன்கள் இருக்கின்றன.

நீங்கள் சொல்ல விரும்புகின்ற கருத்துக்களை சமூகத்துடன் எழுத்து வடிவில் பகிர்ந்துகொள்ள முடியும். கட்டுரையை உருவாக்குகின்ற திறமை, SEO செய்வது, Editing, Writing, போன்ற பல திறமைகளை Blogging செய்யும் போது வளர்த்துக்கொள்ள முடியும். உங்களுடைய வணிகத்தை இணையத்தில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு Blogging தளத்தைப் பயன்படுத்தலாம். உங்களுக்கென இணையத்தில் Brand ஒன்றை உருவாக்கிக்கொள்ள முடியும்.

Blogging வளர்ந்துகொண்டே இருக்கின்றது. புதிதாக நிறைய Bloggers உருவாகிக்கொண்டேயிருக்கின்றார்கள். நிறைய பணமும் சம்பாதிக்கின்றார்கள். ஆனாலும் நிறைய பேருக்கு Blogging பற்றியும், அதன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்ற விடயம் தெரிவதில்லை.

Blog தொடங்குவதற்கு பெரிதாக பணம் தேவைப்படாது. உங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதை நோக்கமாக கொண்டு Blog ஆரம்பியுங்கள். Blogging உங்களுடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி கொண்டது.

Blogging என்பது பணம் சம்பாதிப்பதற்கான நல்லதொரு வழிதான். எல்லோருமே Blogging பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். உங்களால் முடிந்தால் Blogging மூலமாக பணம் சம்பாதித்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading