புது மொபைல் வாங்கிட்டேன்

Last updated on November 9th, 2023 at 11:26 pm

நான் புதுசா ஒரு மொபைல் போன் வாங்கியிருக்கிறேன். அதனைப் பற்றி சொல்வதற்காகவே இந்தப்பதிவு. இந்தப் பதிவில் வேறு எதுவும் பயனுள்ள விடயங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் இதற்கு முன்னர் பாவித்துக் கொண்டிருக்கின்ற மொபைல் வாங்கி நான்கு வருடங்கள் ஆகப்போகிறது. அந்த மொபைல் 2019-ல் AL படித்துக்கொண்டிருந்த போது வாங்கினேன். அன்றைக்கு நாள் முழுவதும் மழைதூறிக்கொண்டிருந்தது. அன்று மாலை வேளையில் மொபைல் போன் வாங்கிய இனிமையான நினைவுகள் நினைவில் இருக்கின்றன. அதுதான் என்னுடைய முதல் ஸ்மார்ட் மொபைல்.

அந்த மொபைல் வாங்கியதற்கு நான்கு வருடங்கள் பாவித்தது பரவாயில்லை என்றுதான் நினைக்கின்றேன். சில மாதங்களுக்கு முதல் என்னுடைய மொபைல் சேதமடைந்தது. அப்போது மொபைலின் திரை ஒரளவுதான் உடைந்திருந்தது. அதற்குப் பிறகு ஒரு நாள் கைதவறி மொபைலை நிலத்தில் போட்டுவிட்டேன். ஒரளவாக உடைந்திருந்த திரை அதிகமாகவே திரையை ஆக்கிரமித்துவிட்டது.

திரை மட்டும் உடைஞ்சிருந்தா பரவாயில்லை. ஆனால் மொபைல் என்னுடைய பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை. ஆரம்பத்தில் இருந்தது போல Performance பின்னர் இல்லை. அந்த மொபைல் 2GB Ram-உம் 32GB Storage Space உம் ஆதி காலத்து Processor உம் கொண்டது. இப்போது அவை பிரயோசனமற்றதாகிவிட்டது.

என்னுடைய பழைய மொபைல் பாவிக்க முடியாத அளவுக்கு மோசமடையாவிட்டாலும் நினைச்ச மாதிரி Applications எல்லாம் இன்ஸ்டால் செய்து பாவிக்க முடியாமல் திரை உடைந்து போய் வேறலெவலில் மொபைல் இருக்கிறது.

அன்று முதல் மொபைல் என்பதாலே மொபைல் என்று ஒன்று வேண்டும் என்று வாங்கியதால் Specification பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால் இப்போது அப்படியில்லை. பயன்படுத்த நினைக்கிற Apps பயன்படுத்த வேண்டும், Performance-ம் ஒரளவேனும் நன்றாக இருக்க வேண்டும், Storage அதிகமாக தேவை என்று எதிர்பார்ப்பு இருக்கும்.

அதற்காக High Range-ல் என்னால் மொபைல் வாங்க முடியாது. அதனால் பழைய மொபைல் போன்று இல்லாமல் ஒரளவு நடுத்தரமான Specification-ல என்னுடைய தேவைக்கேற்ற மாதிரி ஒர் மொபைல் வாங்க வேணும் யோசித்தேன்.

நான் தெரிவு செய்தது Redmi Note 12. ஏன் Redmi mobile வாங்கினேன் என்று கேட்டால், நான் பார்த்தவற்றுள் எதிர்பார்த்த விலைக்கு அது பரவாயில்லாமல் இருந்தது. பொதுவாகவே Redmi Note மொபைல்கள் எல்லாவிதத்திலும் ஒரளவு நன்றாகவே இருக்கும் என்று நிறையப் பேர் சொல்கிறார்கள். அதே விலைக்கு இதைவிட சிறந்த மொபைல்கள் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. எனக்கு Redmi Note 12 நன்றாக இருப்பதாக தோன்றியதால் அதனையே வாங்கிவிட்டேன்.

நான் இங்கு மொபைல் பற்றி Review எதுவும் சொல்லப் போவதில்லை. Review எழுத வேண்டுமானால் அதிகமாக மொபைல் பற்றி தெரிந்திருக்க வேணும், நிறைய மொபைல்கள் பயன்படுத்திய அனுபவம் வேணும், மொபைல்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பீடு செய்து பார்க்க தெரிந்திருக்க வேண்டும். இவற்றுள் ஒன்றில் கூட அனுபவம் இல்லாததை என்னால் உணர முடிகின்றது.

மொபைலினுடைய Specification பற்றி கூறினால் 8GB Ram, 128GB Storage, Snapdragon 685 Processor, 5000 mah பற்றரி, 50 MB கமெரா போன்று சொல்ல வேண்டுமானால் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே போக முடியும். மொபைல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் கூகுள் அண்ணாவிடம் கேட்டாலே எல்லா மொபைலைப் பற்றிய எல்லா விபரங்களையும் சொல்லிவிடுவார்.

நான் முதலில் பாவிச்ச மொபைலுடன் ஒப்பிடும் போது பல மடங்கு Specification உடன் எல்லா வகையிலும் மொபைல் நன்றாகவே இருக்கின்றது. என்னுடைய பொதுவாக பயன்பாட்டிற்கு இந்த Specification கொண்ட மொபைலே அதிகம்.

மொபைல் வாங்கி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. புதிய மொபைலை முழுவதுமாக எனக்கேற்ற மாதிரி Customize செய்துவிட்டேன். தேவையான Apps-லாம் install செய்துவிட்டேன். ஆனால் மொபைலை ஆராய்வதற்கும் (Explore), உணர்ந்து அனுபவித்துப் பயன்படுத்துவதற்கும் நிறையவே இருக்கின்றன.

பழைய மொபைலுடன் ஒப்பிடும் போது கமெராவும் பரவாயில்லாமல் இருக்கின்றது என்றுதான் நினைக்கின்றேன். இனிமேல்தான் புகைப்படங்கள் எடுத்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். இப்போதைக்கு நமது வலைப்பதிவில் ஏதேனும் நான் எடுத்த புகைப்படங்கள் பதிவேற்றம் செய்தால் பெரும்பாலும் Redmi Note 12-ல் எடுத்ததாக இருக்கும்.

பழைய மொபைல் பயன்படுத்திவிட்டு புதிதாக இந்த மொபைலை பயன்படுத்துகிற உணர்வே நன்றாக இருக்கின்றது. இந்த பதிவில் புதிய மொபைல் பற்றி சொல்லிவிட்டேன். மொபைலைப் பற்றி வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

நீங்கள் பயன்படுத்தும் மொபைல் பற்றியும் மற்றும் உங்களுடைய கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading