இணையத்தில் பணம் சம்பாதிக்க முடியுமா?

Last updated on February 5th, 2024 at 04:04 pm

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அடிப்படைக் காரணிகளுள் பணம் மிகவும் முக்கியமானது. பணம் சம்பாதிப்பது எப்படி என்று கேட்டால் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்கலாம் அல்லது வணிகத்தின் மூலமாக பணம் சம்பாதிக்கலாம் போன்ற பதில்களையே பொதுவாக பலரும் சொல்வார்கள்.

இன்றைய தொழினுட்பத்தின் வளர்ச்சியினால் எல்லாமே இணையத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் போது இணையத்தின் மூலமாக பணம் சம்பாதிப்பது பற்றிய பேச்சுக்களும் மக்கள் மத்தியில் இருக்கின்றன.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியுமா? அல்லது ஆன்லைனில் சம்பாதிக்க முடியாதா? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் உள்ளன. இந்தப் பதிவின் மூலமாக ஆன்லைனில் சம்பாதிப்பது பற்றிய சில விடயங்களைப் பார்க்கபோகின்றோம்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியுமா?

இணையத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடியுமா? என்ற கேள்வியை என்னிடம் கேட்டால் ஆம் என்று பதில் சொல்வேன். எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றால் லட்சங்களில் சம்பாதிக்கலாம் என்று கூறுவேன்.

ஆனால், இப்படிச் சொன்னால் நிறையப்பேரால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு சிலருக்கு இது தொடர்பில் அனுபவம் இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது பற்றி எந்த அனுபவம் இருக்காது.

இன்போதெல்லாம் இணையத்திலே பணம் சம்பாதிப்பது பற்றி நிறையவே பொய்யான தகவல்கள் இணையத்தில் உலாவருகின்றன. யூடியூப்-இல் பணம் சம்பாதிப்பது பற்றி தேடினால், நிறைய சேனல்களில் எந்த வேலையும் செய்யாமல் பணம் சம்பாதிக்கலாம், எந்த முதலீடுமில்லாமல் பல லட்சங்களில் சம்பாதிக்கலாம், விளம்பரங்கள்/வீடியோக்கள் பார்த்து சம்பாதிக்கலாம், கேம்ஸ் விளையாடி சம்பாதிக்கலாம், ஆப் இன்ஸ்டால் செய்து சம்பாதிக்கலாம். போன்ற பல காணொளிகளை நம்மால் காணமுடிகின்றது.

இந்த மாதிரியான காணொளிகள் யூடியூப்-இல் நிறையவே இருக்கின்றன. அவற்றையெல்லாம் பார்த்தால் நம்பக்கூடிய மாதிரியாக இருக்கின்றதா? அவர்கள் சொல்கின்ற வழிகளைப் பின்பற்றி உங்களால் லட்சங்களில் பணம் சம்பாதிக்கவே முடியாது. சில வேளைகளில் சில நூறுகளை சம்பாதிக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன.

இந்த மாதிரியான வீடியோக்களை பார்த்து ஏமாந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். ஆன்லைனில் இப்படித்தான் பணம் சம்பாதிப்பது, இவைதான் ஆன்லைன் வேலை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். இவை எல்லாம் வேலைகள் கிடையாது. ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது என்பது இது கிடையாது.

ஆன்லைனில் சம்பாதிப்பது என்றால் என்ன?

Earn_Money_Online

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது என்றால் என்ன? என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது பற்றிய பார்வையை மாற்ற வேண்டும்.

நீங்கள் சாதாரணமான வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம், உங்களிடம் உள்ள பொருட்களை விற்பனை செய்யலாம், வணிக முறைமை ஒன்றை உருவாக்கலாம், உங்களிடம் உள்ள பொருட்களை வாடகைக்கு விடலாம், முதலீடுகள் செய்யலாம். நிறைய நிறைய வழிகள் இருக்கின்றன.

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது என்பதும் நிஐ உலகில் பணம் சம்பாதிப்பதைப் போன்றதுதான் ஏதாவது செய்தால் மட்டும்தான் பணம் கிடைக்கும். எந்த வேலையும் செய்யாமல் பணம் சம்பாதிப்பதற்கு ஆன்லைன் ஒன்றும் பணம் தருகின்ற மந்திரப்பெட்டி இல்லை. ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கு திறமை வேண்டும். திறமை இல்லாமல் அதிகமாக சம்பாதிக்க முடியாது.

உலகில் முன்னணியில் இருக்கின்ற நிறுவனங்கள் எல்லாமே இணையத்தை மையமாக வைத்தே வணிகம் செய்து பணம் சம்பாதிக்கின்றார்கள். அவர்களிடமிருந்து ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது பற்றி கற்றுக்கொள்ளலாம்.

அவர்கள் என்ன செய்கிறார்கள்? தமது சேவைகளை மக்களுக்கு வழங்கி சம்பாதிக்கிறார்கள், விளம்பரங்கள் மூலமாக பணம் சம்பாதிக்கிறார்கள், தமது பொருட்களையும் சேவைகளையும் விற்பனை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கென்று முறைமை ஒன்றை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.

அவர்களால் ஆன்லைனில் வணிகம் செய்து பல ஆயிரம் கோடிகளில் சம்பாதிக்கும் போது நம்மால் சில ஆயிரங்களை சம்பாதிக்க முடியாதா? நிச்சயமாக முடியும். இணையத்தில் பணம் சம்பாதிக்கக் கூடிய உண்மையான வழிகளை கண்டறிய வேண்டும். இணையத்தை மையமாகக் கொண்ட வணிகம் ஒன்றையும் உருவாக்கலாம்.

சரி, ஆன்லைனில் சம்பாதிப்பது என்றால் என்ன? நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் வேலை செய்து அல்லது ஆன்லைன் வணிகம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக பணம் சம்பாதித்தால் அதுதான் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதாகும்.

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் முதலில் பயனாளராக இருப்பவர்களுக்கு ஏதோவொரு பெறுமதியைக் (Value) கொடுக்க வேண்டும்.

நீங்கள் 500 டொலர்கள் சம்பாதித்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் வேலை, திறமை, முதலீடு போன்ற ஏதோவொரு பெறுமதியை நீங்கள் கொடுத்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டும்தான் 500 டொலரை சம்பாதிக்க முடியும். 

உதாரணமாக, ஒரு வலைப்பதிவு எழுதுகிறீர்கள் என்றால் நீங்கள் உங்களுடைய வலைப்பதிவு படிப்பவர்களிற்கு தேவையான தகவல்களை எழுத்து வடிவில் பெறுமதியாக வழங்குகிறீர்கள்.

Affiliate Marketing மூலம் பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால் யாரோ ஒருவருக்கு தேவைப்படுகின்ற பொருளை வாங்குவதற்கு Link ஐ கொடுத்து பெறுமதி ஒன்றை வழங்கியிருக்கிறீர்கள்.

ஆன்லைனில் Stock Photos விற்பனை செய்து சம்பாதிக்க போகிறீர்கள் என்றால், நீங்கள் Stock Photo-வை பெறுமதியாக கொடுக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு பணம் கிடைக்கின்றது. Fiver போன்ற தளங்களில் வேலை ஒன்றைச் செய்து கொடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் வேலை செய்து கொடுப்பதுதான் பெறுமதியாகும்.

நீங்கள் ஏதோவொரு பெறுமதியை கொடுத்தால் மட்டுமே உங்களால் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் ஆன்லைனில் ஒரு வேலை செய்து கொடுக்க போகிறீர்கள் அல்லது பெறுமதியை கொடுக்கபோகிறீர்கள் என்றால் அதற்குத்தான் திறமை அவசியம்.

Skill

எந்தவொரு திறமையும் (Skill) இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிக்க நினைப்பதெல்லாம் நடக்காத காரியம். திறமை என்று சொல்லும் போது ஏதோவொரு விடயத்தில் ஒரளவு அனுபவம் இருந்தால் போதுமென்று நான் நினைக்கின்றேன்.

ஏன் ஆன்லைனில் சம்பாதிப்பதற்கு திறமை அவசியம் என்று கேட்டால் உதாரணமாக , Blogging மூலமாக பணம் சம்பாதிக்க போகிறீர்கள் என்றால் எழுத தெரிந்திருக்க வேண்டும், ஒரளவேனும் SEO பற்றி தெரிந்திருக்க வேண்டும். இந்த திறமை இருந்தால் மட்டும்தான் உங்களால் Blog ஒன்றை உருவாக்க முடியும். இந்த திறமை இல்லாவிட்டால் எப்படி?

Fiver போன்ற தளங்களில் வேலை செய்து பணம் சம்பாதிக்க நினைத்தால் எந்த வேலை செய்து கொடுக்கப்போகிறீர்களோ அதில் திறமை இருந்தால் மட்டுமே சாத்தியம். Affiliate Marketing மூலம் சம்பாதிக்க வேண்டும் என்றாலும் ஆன்லைனில் Marketing செய்ய ஒரளவு தெரிந்திருக்க வேண்டும்.

சொல்லப்போனால் இணையத்தில் எந்த வேலையை எடுத்தாலும் அதில் திறமைகளையும் யுக்திகளையும் பயன்படுத்த வேண்டும். திறமை இருந்தால் ஆன்லைனில் சம்பாதித்துவிடலாமா? என்று கேட்டால் திறமைகளை பயன்படுத்துவதோடு தொடர்ச்சியாக முயற்சி செய்துகொண்டேயிருக்க வேண்டும்.

Blogging என்று எடுத்துக்கொண்டால் ஒரு பதிவை எழுதிவிட்டு லட்சங்களில் சம்பாதிக்கப்போகின்றேன் என்றால் அது நடக்காத காரியம். எல்லா வேலைகளுமே அதே போன்றுதான். தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருந்தால் ஒரு நாள் வெற்றி கிடைக்கும்.

பொதுவாகவே கடின உழைப்பை விட தொடர்சியாக உழைப்பதுதான் எல்லோருக்குமே வெற்றியை பெற்றுத்தரும்.

ஆகவே ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டும் என்றால், முதலில் செய்ய வேண்டியது திறமைகளை வளர்த்துக்கொள்வதுதான். அதன் பின்னர் உங்களுடைய திறமைகளை வைத்து சம்பாதிக்க முயற்சி செய்யலாம். தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.

இணையம் மிகவும் பெரியது. இன்று எல்லோருமே இணையத்தைப் பயன்படுத்துகின்றோம். பெரியளவில் வணிகம் நடைபெறுகின்ற இடமாகவே இணையம் மாறிவிட்டது. எதிர்காலத்தில் இணையம் இன்னும் பெரியளவில் வளர்ச்சியடையும்.

இணையத்தில் பணம் சம்பாதிக்ககூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால் பெரும்பாலானோருக்கு அவை தெரிவதில்லை என்பதுதான் உண்மை.

ஆன்லைனில் நிறையவே பணம் சம்பாதிக்க முடியும். அதற்கு ஒரளவேனும் திறமை இருக்க வேண்டும். ஆகவே, நீங்களும் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு பணம் சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading