பிளாஸ்டிக் மாசுபாடு

Last updated on December 21st, 2023 at 04:45 pm

21ம் நூற்றாண்டில் நமது பூமியும், பூமியில் வாழ்கின்ற உயிர்களும், மனிதர்களும் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படப்போகின்றது.

அவற்றுள் முக்கியமாக காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் போன்ற சவால்கள் இருக்கும். அதனுடன் பிளாஸ்டிக் மாசுபாடு (Plastic Pollution) என்பதும் முக்கியமான பிரச்சினையாக இருக்கும்.

எதிர்காலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படப்போகும் விளைவுகள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும். அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் கடல் வளத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறது.

பிளாஸ்டிக், நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்ற பெரும்பாலான பொருட்களில் காணப்படுகிறது. இன்றைக்கு பிளாஸ்டிக் இல்லாத பொருட்களை பயன்படுத்தி வாழ்வது கடினமான காரியம். அந்தளவிற்கு எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் இருக்கின்றது.

பிளாஸ்டிக் இயற்கையில் கிடைக்கின்ற பொருள் இல்லை. மனிதனால் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள் ஆகும். குறைவான செலவில் விரும்பிய வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளக்கூடியதாக இருப்பதால் உலகளவில் பிளாஸ்டிக் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது.

பிளாஸ்டிக்-இனுடைய பயன்பாடு முடிந்த பின்னர் மீள்சுழற்சி செய்யப்படவேண்டும். ஆனால் பெருமளவான பிளாஸ்டிக் கழுவுகளாக மாற்றப்படுகின்றது.

பிளாஸ்டிக் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருளாக இருப்பதனால் மக்காமல் போய்விடுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளினால் நீர், நிலம், வளி ஆகிய மூன்றும் மாசுபடுத்தப்படுகிறது. சூழல் மாசடைவதில் பிளாஸ்டிக் கழிவுகளின் பங்கு அதிகம்.

பொதுவாக கழிவுகள் நிலத்தில் புதைக்கப்பட்டால் சில காலங்களின் பின்னர் மக்கி மண்ணாக மாறிவிடும். ஆனால் பிளாஸ்டிக் மக்காத கழிவாக இருப்பதால் நிலத்தை மாசுபடுத்திவிடுகின்றது.

எரித்துவிடலாம் என்று எரித்தாலும் நச்சுத்தன்மையான வாயுக்களை வளிமண்டலத்திற்கு வெளியேற்றுகிறது. பிளாஸ்டிக்-ஐ எரிப்பது வளிமண்டலத்தை பெரியளவில் மாசுபடுத்துகிறது.

இன்று, பயன்படுத்தப்பட்டு கழுவுகளாக மாற்றப்படும் பிளாஸ்டிக்-இல் பெரும்பாலானவை சமுத்திரங்களை சென்றடைகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளினால் அதிகம் பாதிக்கப்படுவது கடலும், கடலில் வாழ்கின்ற உயிரினங்களும் ஆகும்.

பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகள் மூலமாக அதிகமாக கடலிற்கு கொண்டுவரப்படுகின்றன. இவ்வாறு கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் ஒன்று சேர்ந்து பிளாஸ்டிக் தீவுகள் (Garbage Patch) உருவாகின்றது.

கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் நீரோட்டத்தின் மூலமாக ஒன்று சேர்ந்து கடலின் நடுப்பகுதிகளில் குவிந்து பிளாஸ்டிக் தீவுகள் போல உருவாகியிருக்கின்றது. இது கார்பேஐ் பேட்ச் (Garbage Patch) என அழைக்கப்படுகின்றது.

பசுபிக், அட்லாண்டிக், இந்தியப்பெருங்கடல் போன்ற சமுத்திரப்பகுதிகளில் நிறைய இடங்களில் கார்பேஐ் பேட்ச்-கள் உருவாகியிருக்கின்றன.

சமுத்திரங்களில் பல மில்லியன் தொன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடக்கின்றன.

சமுத்திரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிகளினால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

சமுத்திரங்களில் உள்ள கடல் உயிரினங்கள் உணவென நினைத்து பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொள்கின்றன. இதுவே அவற்றின் அழிவுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது.

இறந்து கரையொதுங்குகின்ற திமிங்கிலங்களின் உடல்களிலிருந்து ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. 

அந்த கடல் உணவுகளை மனிதன் உண்ணும் போது மனிதனுடைய உடலிலும் Micro Plastics சேரும்.

பறவைகளும் சிறிய பிளாஸ்டிக் துண்டுகளை உணவு என நினைத்து உட்கொண்டு இறந்த சம்பவங்களும் நிறையவே இருக்கின்றன. அவற்றின் உடலுக்குள் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

நைலோன் நூல், கயிறு போன்றவை ஆமை போன்ற விலங்குகளில் சிக்கி வாழ்வதற்கு சிரமப்படுகின்றன.

இவை தொடர்பான காணொளிகள், புகைப்படங்கள் இன்டர்நெட்-இல் நிறையவே இருக்கின்றன. அவற்றை பார்க்கும் போது எனக்கு மனதில் வலி ஏற்படுகிறது. மனிதன் செய்த தவறால் மற்ற உயிரினங்கள் பாதிப்படைகின்றது.

உயிரினங்கள் மட்டுமே பிளாஸ்டிக்-ஐ உட்கொள்கின்றது என்று நினைத்துவிடக் கூடாது. மனிதனின் உடலிலும் நிறைய வழிகளில் பிளாஸ்டிக் சென்றுகொண்டுதான் இருக்கின்றது. உதாரணமாக போத்தலில் அடைக்கப்பட்டு வருகின்ற குடிநீரிலும் Micro Plastics கலந்திருக்கின்றன.

நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் பிரிகையடைந்து Micro Plastics உருவாகின்றன. நீர்நிலைகளிலிருந்து எடுக்கப்படுகின்ற நீர் சுத்திகரிக்கப்பட்டு போத்தலில் அடைக்கப்படுகின்றது. அந்த வழியில் Micro Plastics குடிநீரில் வந்தடைகின்றது.

2050-ல் கடலில் உள்ள மீன்களின் நிறையை விட பிளாஸ்டிக்-ன் நிறை அதிகமாக இருக்கும். எதிர்காலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளினால் இந்த உலகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து காத்துக்கொண்டிருக்கின்றது என்பது தெரிகின்றது.

நமது அன்றாட வாழ்க்கையிலிருந்து பிளாஸ்டிக்-ஐ முழுமையாக இல்லாமல் செய்வது தற்போது உள்ள நிலையில் முடியாத காரியம். விரும்பினால் நம்மால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியும்.

உதாரணமாக பிளாஸ்டிக் போத்தலுக்கு பதிலாக சில்வர் போத்தல் பயன்படுத்த முடியும். இது போன்று தேவையில்லாமல் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைத்து மாற்று பொருட்களை பயன்படுத்தலாம்.

Plastic Pollution

பிளாஸ்டிக்-இற்கு பதிலாக பயன்படுத்தவென ஒரு பொருள் இதுவரை இல்லை. நீங்கள் விரும்பியதை மாற்றுப்பொருளாக பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக் கழிவுகளை மீள்சுழற்சி செய்யலாம். மீள்சுழற்சி செய்வதன் மூலமாகவும் பிளாஸ்டிக் குப்பைகள் சூழலில் சேர்வதை குறைக்கலாம்.

இந்த விடயங்களை தனிமனிதனால் எல்லாம் நடைமுறைப்படுத்தி பிளாஸ்டிக்-இனால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்க முடியாது. ஒவ்வொரு மனிதர்களும் அரசாங்கமும் உணர்ந்தால் மட்டும்தான் எதுவும் சாத்தியப்படும்.

உண்மையை சொன்னால் இன்னும் சில வருடங்களிற்கு பிளாஸ்டிக்-ஐ ஒழிப்பது எல்லாம் சாத்தியமில்லாத விடயம். இப்போது செய்கின்ற செயல்களிற்கான விளைவுகள் எதிர்காலத்தில் தெரியும்.

அழகான இந்தப் பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானது இல்லை. எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது. இன்று நாம் இயற்கையையும், உயிர்களையும் பாதிப்படையச் செய்கின்ற செயற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறோம். 

இன்று நாம் செய்கின்ற செயற்பாடுகள் நாளை மனிதனுக்கு எதிராகவே திரும்பும். இப்படியே பூமியை மாசுபடுத்தி கொண்டிருந்தால் நாளை பூமி என்றொரு கிரகம் இருக்குமா? என்பதே சந்தேகம். 

எல்லோருமே சேர்ந்து நமது பூமியை பாதுகாத்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading