Overview Effect என்றால் என்ன?

Last updated on February 12th, 2024 at 02:16 pm

பூமியை விட்டு வெளியே வெண்வெளிக்குச் சென்று அங்கிருந்து நாம் வாழ்கின்ற பூமியை அவதானிக்கின்ற விண்வெளி வீரர்களுக்கு பூமியைப் பற்றிய எண்ணம், கண்ணோட்டம் வேறுமாதிரியாக இருக்கும். Overview Effect என்பது இதனையே சொல்கின்றது.

பூமியில் இருக்கும் போது நம்முடன் நிறைய மனிதர்கள் இருப்பார்கள். நாடுகள், கண்டங்கள், இனம், மதம் என பல பிரிவுகள் வேறுபாடுகள் இருக்கும். மனிதர்களிடையே வேறுபாடுகள், போட்டி, பொறாமை என பல இருக்கின்றன. எல்லோருக்குமே இந்த உலகம் மிகப் பெரியதாகவே தோன்றும்.

விண்வெளியிலிருந்து  வெண்வெளிவீரர் ஒருவர் பூமியை அவதானித்தால் பூமி அவ்வளவு பெரியதாகத் தெரியாது. நாடுகள், கண்டங்கள், இனங்கள், மதங்கள் என்ற பிரிவினை தெரியாது. போட்டி, போர்கள் எதுவுமே கண்ணுக்கு தெரியாது. பூமி என்ற ஒர் கோளம் மட்டுமே கண்களுக்குத் தெரியும்.

இவ்வளவு பெரிய அண்டத்தில் பூமி என்பது ஒரு சிறிய பகுதியாகவே அவர்களுடைய கண்களுக்குத் தெரியும். அது ஒரு நல்ல மனநிலையை உருவாக்கும். அவர்களுக்கு பூமி பற்றிய பார்வை, கண்ணோட்டம் வித்தியாசமாக இருக்கும். இதுவே Overview Effect ஆகும்.

நீங்கள் இரவு வேளையில் வீட்டிற்கு வெளியிற் சென்று இருட்டிலே நின்றுகொண்டு வானத்தை அவதானித்துப் பாருங்கள். வானில் ஏராளமான நட்சத்திரங்கள் கண்ணுக்கு தெரியும். நாம் வாழ்கின்ற பிரபஞ்சம் மிகப் பெரிதாக தெரியும். அமைதியாகத் தோன்றும். அதே நேரம் பூமி மிக மிகச் சிறியதாகத் தோன்றும்.

பிரபஞ்சத்தின் ஒரு சிறிய புள்ளியில் அழகான கிரகத்தில் இருந்து கொண்டு நமக்குள் நிறைய பிரிவினைகள், வேறுபாடுகள், போட்டி, பொறாமை எல்லாமே இருக்கின்றது. விண்வெளில் இருந்து பார்த்தால் எதுவுமே கண்ணுக்கு தெரியாது. பூமி என்ற கோளம் மட்டும்தான் தெரியும்.

நாம் வாழ்வது ஒரேயொரு வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் பிரிவினைகள் எதுவுமின்றி மகிழ்சியாக வாழ்வோம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading