கடலுக்கு அப்பால்

Last updated on January 29th, 2024 at 07:39 pm

ப.சிங்காரம் அவர்கள் “கடலுக்கு அப்பால்”, “புயலிலே ஒரு தோணி” ஆகிய இரண்டே இரண்டு நாவல்களை மட்டுமே உருவாக்கியுள்ளார். தமிழின் முதல் புலம்பெயர்ந்த நாவலாக ப.சிங்காரத்தினுடைய நாவல் சொல்லப்படுகின்றது.

கடலுக்கு அப்பால் என்ற பெயரில் இருப்பதைப்போலவே கடல்கடந்து தமிழ்நாட்டிற்கு அப்பால் தென்கிழக்காசிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக கடலுக்கு அப்பால் நாவல் அமைந்துள்ளது.

கதைக்களம் நகர்வது இரண்டாம் உலகயுத்த காலகட்டத்தில். நாவல் ஒருபக்கம் அன்றைய யுத்த சூழலையும், இன்னொருபக்கம் அன்றையகாலத்து தமிழர்களின் தொழில்வாழ்க்கையையும், இன்னொருபக்கம் கதாநாயகனான செல்லையாவின் காதலையும் கண்முண்ணே கொண்டுவருகின்றது.

சிறு வயதில் வைரமுத்துப்பிள்ளைக்கு வேலை செய்வதற்காக தமிழகத்தில் கப்பலேறுகிறான் செல்லையா. வைரமுத்துப்பிள்ளையும் சிறுவயதில் பெட்டியடிப்பையனாக பினாங் வந்து பின்னர் வட்டித்தொழில் நடத்தி முன்னேறியவர்.

செல்லையா வைரமுத்துப்பிள்ளையிடம் தொழிலைக் கற்று விரைவாகவே வளர்கின்றான். செல்லையாவுக்கு இன்னொரு எண்ணமும் இருந்தது. தன்னுடைய மகள் மரகதத்தை செல்லையாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது. செல்லையாவுக்கு வட்டித்தொழிலில் நல்ல அனுபவம் என்பதால் தான் உருவாக்கிய தொழிலை செல்லையா பாதுகாப்பாக தொடர்வான் என்ற காரணம் இதன் பின்னால் உள்ளது.

ஆனால் ஒரு கட்டத்தில் செல்லையா நேதாயியின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து ஐ.என்.ஏ லெப்டினனாக மாறுகின்றான். இது வைரமுத்துப்பிள்ளைக்கு பிடிக்கவில்லை.

நேதாஜியின் மறைவுக்கு பின் இராணுவத்திலிருந்து செல்லையா வெளியேறினான். ஆனால் பட்டாளத்திலிருந்து வந்த பையன் எப்படி வட்டித்தொழிலுக்கு சரிப்பட்டுவருவான் என்ற எண்ணம் வைரமுத்துப்பிள்ளைக்கு உண்டு. மரகதத்தை செல்லையாவுக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தை கைவிடுகிறார் வைரமுத்துப்பிள்ளை.

ஆனால் செல்லையாவும் மரகதமும் மிகவும் ஆழமாக ஒருவரையொருவர் காதலிக்கின்றார்கள். இறுதியில் இருவரும் பேசிக்கொள்கின்ற காட்சிகள் மூலம் அந்தக் காதலை நம்மால் உணர முடிகின்றது.

இரண்டு நாவல்களும் ஆரம்பத்தில் வாசகர்களால் கவனிக்கப்படாவில்லை. ஆனால் தற்போது இரண்டு நாவல்களும் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்புக்களாகப் பார்க்கப்படுகின்றன.

புயலிலே ஒரு தோணி நாவலுடன் இந்நாவலுக்கும் கதைக்களத்தில் தொடர்புகள் இருப்பதாக சொல்லிகிறார்கள். ப.சிங்காரம் முதலில் எழுதியது கடலுக்கு அப்பாலாக இருந்தாலும் கதையின் காலகட்டத்தின்படி புயலிலே ஒரு தோணிதான் முதலில் எழுதப்பட்டது.

ஆனாலும் “புயலிலே ஒரு தோணி” வாசிக்காவிட்டாலும் “கடலிலே ஒரு தோணி” நாவலை நம்மால் புரிந்துகொள்ள முடியும். நான் புயலிலே ஒரு தோணி இன்னும் வாசிக்கவில்லை. இரண்டு நாவல்களையும் வாசித்த பின்னர்தான் நாவல்களுக்கிடையிலான தொடர்பை பற்றி என்னால் கூற முடியும்.

நாவலில் சீனர், மலாயர், ஜப்பானியர் என வகையான மக்கள் வருகின்றனர். அவர்கள் நாவலில் பல இடங்களிலும் பல மொழிகளிலும் கதைக்கின்றனர். அவற்றை வாசித்து நாவலை தொடர்வது கடினமாக எனக்கு இருந்தது. நிறைய நேரங்களில் தமிழில் உள்ள சில சொற்களை புரிந்துகொள்வதும் கடினமாக இருந்தது.

எப்படியிருந்தாலும், அன்றைய தென்கிழக்காசிய மக்களின் வாழ்க்கையை சொல்கின்ற சிறந்த நாவல் கடலுக்கு அப்பால். எல்லோருமே வாசிக்க வேண்டிய நாவல்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading