விசைப்பலகை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்

Last updated on October 29th, 2023 at 06:32 pm

கணினி இன்றைய உலகில் தவிர்க்க முடியாத சாதனமாக மாறிவிட்டது. கணினி என்று எடுத்துக்கொண்டால் அங்கே விசைப்பலகை (Keyboard) முக்கியமான பங்கு வகிக்கின்றது. கணனியுடன் வேலை செய்கின்ற மனிதர்களின் கைகளில் எப்பொழுதும் விசைப்பலகை தவழ்ந்துகொண்டிருக்கும்.

இந்த பதிவு மூலமாக விசைப்பலகை (Keyboard) பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களை பார்க்கப்போகின்றோம்.

QWERTY Keyboard

Typewriter

நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற விசைப்பலகை தட்டச்சுப் பொறியிலிருந்து (Typewriter) வந்தது. தட்டச்சு பொறியில் பயன்படுத்தப்பட்ட தளவமைப்புத்தான் (Layout) இன்றைய விசைப்பலகைகளில் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த தளவமைப்பை QWERTY என்று அழைப்பார்கள். இதற்கான காரணம் விசைப்பலகையில் எழுத்துகள் Q, W, E, R, T, Y இல் வரிசையில் ஆரம்பிக்கின்றன.

நூறு வருடங்களிற்கு மேலாக இன்று வரைக்கும் பெரும்பாலான மக்களால் QWERTY விசைப்பலகைகள் தான் உபயோகிக்கப்படுகின்றன. ஆனால் QWERTY விசைப்பலகைகளை தவிர நிறைய விதமான விசைப்பலகைகள் இருக்கின்றன என்பதை தெரிந்து.

விசைப்பலகையின் வகைகள்

கணினி விசைப்பலகையை பயன்பாட்டின் அடிப்படையில், தொழினுட்பத்தின் அடிப்படையில், வடிவமைப்பின் அடிப்படையில் பல்வேறுவிதமாக வகைப்படுத்திச் சொல்லலாம். ஆனால் பொதுவாக இரண்டு வகையான விசைபலகைகளாக வகைப்படுத்தப்படுகின்றது.

  1. Membrane Keyboard
  2. Mechanical Keyboard

விசைப்பலகையின் விசைகள்

கணினி விசைப்பலகைகளில் மொத்தமாக 101 விசைகள் (Keys) அல்லது 104 விசைகள் காணப்படும்.

விசைப்பலகையில் உள்ள F மற்றும் J விசைகளில் அடையாளத்தை அவதானிக்க முடியும். அதற்கான காரணம் விசைப்பலகையில் தட்டச்சு செய்யும் செய்யும் போது F, J விசைகளை அடிப்படையாக வைத்துத்தான் தட்டச்சு செய்யப்படுகிறது.

F, J இரண்டு விசைகளையும் அடிப்படையாக வைத்து கண்களால் விசைப்பலகையை பார்க்காமல் வேகமாக தட்டச்சு செய்ய முடியும்.

Typewriter எனும் சொல்

Typewriter எனும் வார்த்தையில் ஒரு சிறப்பு இருக்கின்றது. நாம் பயன்படுத்துகிற QWERTY விசைப்பலகையில் ஒரே வரியில் உள்ள விசைகளை ( Key ) வைத்து அமைக்கக்கூடிய மிக நீளமான சொல் Typewriter என்ற சொல் ஆகும். மேல்வரிசையில் உள்ள விசைகளை மட்டும் வைத்து Typewriter எனும் சொல்லை அமைக்க முடியும்.

மிகச்சிறிய Space Bar

விசைப்பலகையிலேயே மிகவும் நீளமான விசை Space Bar. ஆனால் ஐப்பானில் சிறியளவிலான Space Bar விசை உள்ள விசைப்பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கான காரணம் வேறு சில மொழிகளிற்கு விசைப்பலகையை மொழி மாற்றம் செய்வதற்காக தனியாக சில விசைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

தட்டச்சு வேகம்

மனிதனினால் சராசரியான நிமிடத்திற்கு 40 சொற்களை தட்டச்சு செய்ய முடிகிறது. இன்னொரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் 10000 சொற்களை டைப் செய்தால் நமது விரல்கள் அண்ணளமாக 1மைல் தூரம் பயணம் செய்திருக்கும் என்று சொல்லப்படுகின்றது..

இந்த பதிவில் விசைப்பலகை பற்றிய சில சுவாரஷ்யமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்திருக்கின்றேன். விசைப்பலகை பற்றிய வேறு சுவாரஷ்யமான தகவல்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் தெரிவியுங்கள். உங்களுடைய கருத்துக்களையும் Comments பகுதியில் தெரிவியுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading