ஒட்டகங்கள் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்

Last updated on October 19th, 2023 at 09:16 pm

01. ஒட்டகங்கள் இரண்டு வகை

ஒட்டகங்களை ஒரு திமில் கொண்ட ஒட்டகம் (Dromedary Camel), இரண்டு திமில் கொண்ட ஒட்டகம் (Bactrian Camel) என இரண்டு வகையாக வகைப்படுத்தலாம்.

திமில் (Hump) என்பது ஒட்டகத்தின் முதுகுப் பகுதியில் அமைந்துள்ள கூம்பு போன்ற அமைப்பு ஆகும். உலகில் உள்ள ஒட்டகங்களில் 90% வீதமானவை ஒரு திமில் கொண்ட ஒட்டகங்களாகும்.

ஒரு திமில் கொண்ட ஒட்டகங்கள் “அரேபியன் ஒட்டகங்கள்” எனவும் அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, இந்தியா போன்ற பிரதேசங்களில் அதிகளவாக காணப்படுகின்றன.

இரண்டு திமில் கொண்ட ஒட்டகங்கள்”மங்கோலியன் ஒட்டகங்கள்” எனவும் அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மத்திய ஆசியா, கிழக்காசியா போன்ற பிரதேசங்களில் காணப்படுகின்றன.

இரண்டு திமில் கொண்ட ஒட்டகங்களில் “காட்டு ஒட்டகங்கள்” அழிவடையும் ஆபத்தை எதிரிநோக்கியுள்ளது. உளகளவில் 1000 ஒட்டகங்கள் மட்டுமே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

02. உண்மையில் ஒட்டகங்கள் நீரைச் சேமிப்பதில்லை

ஒட்டகங்கள் பல லீற்றர்கள் நீரை அருந்தி உடலில் சேமித்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தும் என்ற கதைகளை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

உண்மையில், ஒட்டகங்கள் நீரை உடலில் சேமித்து வைத்திருப்பதில்லை. ஒட்டகங்கள் திமில் பகுதியில் அதிகமான கொழுப்பை சேமித்து வைத்திருக்கும். நீர்/உணவு கிடைக்காத சந்தர்ப்பங்களில் திமிலிலிருந்து ஊட்டச்சத்துக்களை பெற்றுக்கொண்டு நீண்டநாட்கள் உயிர்வாழ்கின்றன.

ஒட்டகத்தின் திமிலில் உள்ள கொழுப்பு உடல் வெப்பநிலையை சீராகப் பேணி வெப்பமான பாலைவனங்களில் பயணிக்கும் போது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் திமிலில் உள்ள கொழுப்பு பயன்படுகின்றது.

ஒட்டகத்திற்கு முதுகுல கொழுப்பு அதிகமா இருந்தா திமில் னு சொல்றாங்க ஆனா இந்த மனித இனத்துக்கு கொழுப்பு அதிகமா இருந்தா திமிருன்னு சொல்றாங்க என ஒருவர் வலைப்பதிவு ஒன்றில் சுவாரஷ்யமாக கருத்து சொல்லியிருந்தது என் கண்ணில் பட்டது.

03. ஒட்டகப்பால் அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டது

நமது பிரதேசங்களில் பசுப்பால், ஆட்டுப்பால் போன்றவற்றை சாதாரணமாக பெற்றுக்கொள்ள முடிவதைப் போன்று அதிகமாக ஒட்டகங்கள் வளர்க்கப்படுகின்ற பிரதேசங்களிற்கு சென்றால் அங்கே ஒட்டகப்பாலை சாதாரணமாக காணலாம்.

ஒட்டகப்பால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டது. பசுப்பாலில் இருப்பதை போன்று ஐந்து மடங்கு விற்றமின் பத்து மடங்கு அயன் ஊட்டச்சத்துக்கள் ஒட்டகப்பாலில் உள்ளது.

04. ஒட்டகத்தின் வேகம்

ஒட்டகங்கள் சாதாரணமாக நடக்கும் போது மணித்தியாலத்திற்கு 2 மைல் தொடக்கம் 3 மைல் வரையான மெதுவான வேகத்தில் நடக்கும். அதுவே, வேகமாக ஒட வேண்டும் என்றால் மணித்தியாலத்திற்கு 40 மைல் வேகத்தில் ஒடக்கூடியது.

ஒட்டகம் வேகமாக ஒடுவதால் அரேபிய நாடுகளில் ஒட்டகப் பந்தயங்கள் நடத்தப்படுவதுண்டு. ஒட்டகப் பந்தயத்தை வைத்து உலகசாதனைகளும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

05. ஒட்டகத் திருவிழா & போட்டி

ஒட்டகங்களை வைத்து பந்தயங்கள் நடாத்தப்படுவது போலவே ஒட்டகத்திருவிழாக்கள் (Camel Festivals) மற்றும் போட்டிகள் (Camel Contests) பல பிரதேசங்களிலும் நடாத்தப்படுவதுண்டு.

உதாரணமாக குறிப்பிட வேண்டுமானால், எனக்கு சுவாரஷ்யமாக தோன்றியது ஒட்டகங்களிற்கிடையிலான அழகிப் போட்டி-ஐ (Miss Camel Beauty Contest) சொல்லலாம்.

06. அதிக சுமை சுமந்து செல்லக்கூடிய திறன்

பாலைவன வெப்பத்திலும் அதிக சுமையை சுமந்துகொண்டு தொடர்ச்சியாக பல மணிநேரங்கள் பயணிக்கக்கூடிய திறன் ஒட்டகங்களுக்கு மட்டுமே உடைய திறன். இதனால்தான் பாலைவனங்களில் பயணம் செய்வோர் ஒட்டகங்களை பயன்படுத்துகின்றனர்.

இரு திமில்கள் கொண்ட ஒட்டகம் (Bactrian Camel) 200kg எடையையும், இரு திமில்கள் கொண்ட காட்டு ஒட்டகம் (Wild Bactrian Camel) 400kg எடையையும், ஒரு திமில் கொண்ட ஒட்டகம் (Dromedary Camel) 100kg எடையையும் சாதாரணமாக சுமந்துகொண்டு தொடர்ச்சியாக பல மணிநேரங்கள் பயணம் செய்யும் திறன் கொண்டது.

ஆனால் சுமை ஏற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டால் இதனை விட பல மடங்கு சுமையை சுமந்து செல்லக்கூடிய திறன் ஒட்டகங்களுக்கு உண்டு.

07. பாலைவனத்திற்கேற்ற உடலமைப்பு

Camel

ஒட்டகம் ஒரு பாலைவனத்தில் வாழும் விலங்கு. அதனால் பாலைவனத்தில் வாழ்வதற்குரிய உடலமைப்பை ஒட்டகம் கொண்டிருக்கும்.

பாலைவனம் மண் நிறைந்த பகுதி. நிறைய நேரங்களில் மணல் புயல், மண் துகள்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஒட்டகங்களுக்கு உண்டு. அதனால் மண் துகள்களிலிருந்து பாதுகாக்க அடுக்கடுக்கான கண் இமைகளை ஒட்டகங்கள் கொண்டிருக்கும்.

ஒட்டக்தின் நாக்கு அதிக தடிப்பு கொண்டதாக இருக்கும். காரணம் பாலைவனச்சூழலில் உள்ள தாவரங்கள் கடினமான மற்றும் முட்கள் நிறைந்ததாக இருக்கும். அவற்றை உணவாக கொள்ள தடிப்பான நாக்கு ஒட்டகங்களுக்கு தேவைப்படுகின்றது.

ஆரம்பத்தில் பார்த்த திமில் (Hump) கொண்டிருப்பதும் பாலைவனச் சூழலில் நீர்/உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒர் மாற்றாகும்.

08. ஒட்டகத்தின் வாழ்நாள்

ஒட்டகங்கள் சராசரியாக 40 முதல் 50 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியது. ஒட்டகங்கள் நீர்/உணவின்றி நீண்ட நாட்கள் உயிர்வாழக்கூடிய உயிரினம் என்பதால் உணவு/நீர் இன்றி இறப்பதற்கான வாய்ப்புக்கள் ஒப்பீட்டளவில் குறைவு.

ஒட்டகங்கள் பெரும்பாலும் பாலைவனங்களில் வாழ்வதால் காட்டு விலங்குகளால் கொல்லப்படுவதற்கான வாய்ப்புக்களும் குறைவாகவே உள்ளது. இயற்கையான மரணம், நோய்வாய்ப்பட்டு இறப்பது அல்லது மனிதர்களால் கொல்லப்பட்டு இறப்பதே பெரும்பாலும் நிகழ்கின்றது.

09. ஒட்டகம் ஒர் சமூக விலங்கு

ஒட்டகம் ஒர் சமூக விலங்கு அதாவது ஒட்டகங்கள் கூட்டமாகவே வாழும். உங்களால் தனியாக ஒர் ஒட்டகத்தை காண்பது அரிதாக இருக்கும். ஒட்டகக்கூட்டம் மந்தை என அழைக்கப்படும். ஒட்டகங்கள் தங்களுடைய கூட்டத்துடன் தொடர்பாடலை மேற்கொள்ள ஒலிகள் எழுப்பி தொடர்பாடல் மேற்கொள்ளும்.

ஒர் சுவாரஷ்யமான தகவல்: ஒட்டகங்களுக்கு பாலைவனக் கப்பல் (Ship of Desert) என்ற சிறப்புப்பெயர் உண்டு. கப்பல் கடல் முழுவதும் பயணிப்பதை போல, ஒட்டகம் பாலைவனம் எனும் கடலில் பயணம் செய்கின்றது.

10. 3000 வருடகால வளர்ப்புப் பிராணி

வரலாற்றை நோக்கினால் ஒட்டகங்கள் உலகின் எல்லா பிரதேசங்களிலும் மனிதனால் பயன்படுத்தப்பட்ட வளர்ப்பு உயிரினம். 3000 வருடம் எனும் நீண்ட காலமாக மனிதனால் வளர்க்கப்படுகின்ற உயிரினம் ஒட்டகம்.

பயணம் செய்தல், சுமை தூக்குதல், உணவுத் தேவைகளுக்காக (பால், இறைச்சி), போர் செய்வதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மிக நீண்டகாலமாக மனிதர்களால் வளர்க்கப்படுகின்றது. இன்றும் ஒட்டகம் மனிதனுடைய வளர்ப்பு உயிரினம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading