இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

Last updated on August 28th, 2023 at 01:29 pm

எழில்(-ற்-)பிரகாஷ்
Follow me
Latest posts by எழில்(-ற்-)பிரகாஷ் (see all)

இன்று உலகில் அதிகமான வணிகங்கள் இணையத்தை அடிப்படையாக வைத்து நடைபெறுகின்றன. இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியாதது எதுவுமில்லை என்ற நிலை வந்துவிட்டது. உலகின் பெரும்பாலான மக்கள் தமது தேவைகளுக்காக இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதிகமான பணமும் இணையத்தில் புழக்கத்தில் உள்ளது.

இவ்வாறான ஒர் இடத்தில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் நிறையவே இருக்கின்றன. இன்று இணையத்தை எல்லோராலும் உலகின் எல்லா இடங்களிலிருந்தும் அணுக முடிவதால் நிறையப்பேர் இணையத்தை பயன்படுத்தி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி? என்பது பற்றிய விடயங்கள் நிறையப்பேருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி? என்பது பற்றி இந்தப் பதிவின் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

இணையத்தில் காணொளிகள், பதிவுகள் நிறையவே ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது தொடர்பாக உள்ளன. ஆனால் அவற்றில் பல உண்மையான தகவல்களைச் சொல்வதில்லை.

எந்த வேலையும் செய்யாமல் பணம் சம்பாதிக்கலாம், எந்த திறமையும் அவசியமில்லை, கேம்ஸ் விளையாடி சம்பாதிக்கலாம், வீடியோ பார்த்து சம்பாதிக்கலாம், 5 நிமிடத்தில் 1000 ரூபாய் சம்பாதிக்கலாம் போன்ற மாதிரியான பொய்யான தகவல்களை கொண்ட காணொளிகள், பதிவுகள் இணையத்தில் நிறையவே உள்ளன.

ஆனால் உண்மையில் அவ்வாறெல்லாம் சம்பாதிக்க முடியாது. நீங்களே யோசித்துப்பாருங்கள் எந்த திறமையும் இல்லாமல் ஒருவரால் சம்பாதிக்க முடியுமானால், 5 நிமிடத்தில் ஆயிரங்களை சம்பாதிக்க முடியுமானால், வீடியோ விளம்பரங்களை மட்டும் பார்த்து சம்பாதிக்க முடியுமானால் எல்லோருமே இலகுவாக பணம் சம்பாதித்துவிடலாமே.

உண்மையில் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கும் திறமை (Skills) நிச்சயமாக தேவை. பெரியளவில் தேவைப்படாவிட்டாலும் ஒரு விடயத்தில் ஒரளவேனும் திறமை இருக்க வேண்டும். அதே நேரம் மற்றும் உழைப்பையும் முதலீடு செய்ய வேண்டும். எதுவுமே இல்லாமல் பணம் சம்பாதிப்பது கனவில் வேண்டுமானால் நடக்கும்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பணத்தை முதலீடு செய்யாமல் எல்லோராலும் செய்யக்கூடிய இலகுவான வழி நமது திறமைகளை பணமாக மாற்றுவது. எல்லோராலும் Freelance செய்வதன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும். இணையத்தில் வேலைகளைச் செய்வதற்கு பொருத்தமானவர்களை தேடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிற்கான வேலையை செய்து கொடுத்து பணம் சம்பாதிக்கலாம்.

நிறைய Fiverr, Upwork போன்ற பல Freelance தளங்கள் இருக்கின்றன. அங்கே உங்களுக்கு தெரிந்த வேலைகளைச் செய்துகொடுத்து பணம் சம்பாதிக்க முடியும். இந்த தளங்களை தவிர இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்கள் மூலமாக வேலைகள் தேவைப்படும் நபர்களை அணுகி வேலைகளை செய்துகொடுத்து பணம் சம்பாதிக்கலாம்.

Graphic Design, Video Editing, Website Development, Digital Marketing, Content Writing போன்ற ஏராளமான வேலைகள் இருக்கின்றன. அவ்வாறான வேலைகளுள் உங்களுக்கு தெரிந்த வேலைகளைச் செய்வதன் மூலமாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம். இது ஒர் பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி.

உங்களுடைய திறமையை பயன்படுத்தி வேலைகள் செய்வதைத் தாண்டி உங்களுக்கு தெரிந்த விடயங்களை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம்.

இப்போதெல்லாம் இணையத்தை திறந்தாலே ஏராளமான Cources-களை காணக்கூடியதாக இருக்கின்றது. பணம் கொடுத்து ஒரு விடயத்தை ஆன்லைனில் கற்றுக்கொள்வதற்கும் பலர் தயாராக உள்ளார்கள். ஆன்லைனில் உள்ள பல Online Courses தனி நபர்கள் தமக்கு தெரிந்த விடயங்களை Course ஆக உருவாக்கியவையாக இருக்கின்றன. அதிலிருந்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

உங்களுக்கு குறிப்பிட்ட துறையில் நிறைய விடயங்கள் தெரியும் என்றால் அதனை மற்றவர்களுக்கு ஆன்லைனில் சொல்லிக்கொடுப்பதன் மூலமாக பணம் சம்பாதிக்கலாம்.

இந்த மாதிரியாக உங்களுடைய திறமைகளை விற்பனை செய்வதன் மூலமாக பல வழிகளில் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்.

அடுத்து, Content Creation மூலமாக பணம் சம்பாதிக்க முடியும். இணையம் முழுவதுமே Content-ஆல் நிரம்பியுள்ளது. Content எந்த வடிவத்திலும் இருக்கலாம். காணொளியாக, கட்டுரையாக, வலைப்பதிவாக, சமூகவலைத்தளப் பதிவாக எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம். Content Creation மூலமாகவும் பலவழிகளில் பணம் சம்பாதிக்கலாம்.

Content Creation இல் Blog எழுதுவது, YouTube Channel உருவாக்குவது, சமூகவலைத்தளங்களில் எழுதுவது போன்று Content ஒன்றை உருவாக்கினால் அங்கே விளம்பரங்களை காட்சிப்படுத்தலாம், Promotions செய்யலாம், Paid Posts வெளியிடலாம், Paid Reviews எழுதலாம்.

உதாரணமாக நான் இப்போது எழுதிக்கொண்டிருப்பது கூட ஒர் வலைப்பதிவு Content-தான். இந்த பதிவில் விளம்பரம் வந்தால் அதுவும் Content Creation மூலமாக பணம் சம்பாதிப்பதற்கு ஒர் உதாரணம். இன்று நிறையப்பேர் YouTube Channel மூலமாக சம்பாதிக்கிறார்கள். அது கூட Content Creation-க்கு சிறந்த உதாரணம்.

சமூகவலைத்தளம், வலைப்பதிவு, YouTube Channel எதுவாக இருந்தாலும் பல வழிகள் பணம் சம்பாதிப்பதற்கு இருக்கின்றன.

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி? என்று கேட்டால் Content Creation மூலமாக பணம் சம்பாதிக்கலாம் என்பதும் ஒர் பதிலாக இருக்கும். நீங்களும் இணையத்தில் ஏதோவொரு வகையில் Content-ஐ உருவாக்கி பணம் சம்பாதிக்கலாம்.

இவற்றையெல்லாம் தாண்டி ஆன்லைன் வணிகம் என்ற மிகப்பெரிய துறை இருக்கின்றது. ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கு இணையத்தை அடிப்படையாகக் கொண்ட வணிகம் ஒன்றை ஆரம்பிக்கலாம்.

இணையம் எல்லோருடைய கைகளையும் சென்றடைந்திருப்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் பொருட்களை (Product) விற்பனை செய்வது, சேவைகள் (Service) வழங்குவது போன்றவற்றைச் செய்கின்றன.

நீங்களும் ஆன்லைனை அடிப்படையாக கொண்ட வணிகத்தை ஆரம்பிக்கலாம். ஆன்லைன் வணிகம் என்பது மிகப்பெரிய Topic ஆகவுள்ளது. ஆனால் நாம் பெரியளவில் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறியளவான இணையத்தளம் ஒன்றை உருவாக்கி அதில் நமது சேவைகளை வழங்கினாலே அது ஒர் ஆன்லைன் வணிகம்.

இணையத்தளங்கள் மூலமாக நிறைய விதமான வணிகங்களை செய்ய முயற்சி செய்யலாம். Online Store ஒன்றை உருவாக்கி பொருட்களை விற்பனை செய்யலாம், ஆன்லைன் ஊடாக சேவைகளை (Service) வழங்கலாம். சாதாரணமாக Drop shipping மாதியான வழிகளில் பொருட்களை விற்பனை செய்கின்ற வணிகத்தை முயற்சி செய்யலாம்.

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி? என்பது தொடர்பாக சில விடயங்களை சொல்லியிருக்கின்றேன். ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. இந்த பதிவில் நமது திறமைகளை விற்பனை செய்து பணம் சம்பாதிப்பது, Content Creation மூலமாக பணம் சம்பாதிப்பது, வணிகம் ஒன்றை ஆரம்பிப்பது போன்ற விடயங்களை பற்றி சொல்லியிருக்கின்றேன். நான் கூறியவை இன்று ஆன்லைனில் பெரும்பாலானோர் பணம் சம்பாதிக்கின்ற வழிகள்.

நீங்களும் முயற்சி செய்தால் ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்கலாம். உங்களுடைய திறமைகளை சரியாக பயன்படுத்தி நேரத்தையும் உழைப்பையும் முதலீடு செய்தால் நிறையவே சம்பாதிக்கலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
%d bloggers like this: