- தரவறிவியல் – Data Science - November 27, 2023
- திருக்கார்த்திகை தீபம் - November 25, 2023
- 1984 (நாவல்) - November 14, 2023
நமது சூழலில் அடிக்கடி அவதானிக்ககூடிய அழகிய பிராணி அணில். மென்மையானதாக ஆபத்து விளைவிக்காமல் உள்ள செல்லப் பிராணி போன்றே அணில்களை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. பாலூட்டி வகையைச் சேர்ந்த இந்தப் பிராணியைப் பற்றிய சில சுவாரஷ்யமான தகவல்களை இந்தப் பதிவிலே பார்க்கலாம்.
- அணில்கள் உலகளவில் பெரும்பாலும் எல்லாப் பிரதேசங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் வசிக்கின்றன. காடுகள், விவசாய நிலங்கள், கிராமங்கள், நகரங்கள், பனிப்பிரதேசங்கள் போன்ற பல்வேறுபட்ட இடங்களிலும் அணில்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
- அணில்கள் கூடுகட்டி வாழும் உயிரினமாகும். கோளவடிவில் அமைந்திருக்கும் இவற்றின் கூடுகளை இலைகள், தும்புகள், கிளைகள், புற்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி அமைக்கின்றன. உயரமான மரங்களில் பெரும்பாலும் கூடுகள் அமைந்திருக்கும். மரங்களைத் தவிர கட்டடங்கள், கொட்டகைகளின் வளைகள் போன்றவற்றிலும் அணில்கள் கூடுகளை அமைக்கும்.

- உலகெங்கும் 200-இற்கும் மேற்பட்ட அணில் இனங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அணில்களை வகைப்படுத்தும் போது மர அணில், தரை அணில், பறக்கும் அணில் என்று பல்வேறு விதமாக வகைப்படுத்தலாம்.
- பறக்கும் அணில் என்றவுடன் பறவை போன்று சிறகுகளுடன் பறக்கும் என்று அர்த்தமில்லை. உயரமான இடத்திலிருந்து காற்றில் மிதந்துகொண்டு நீண்டதூரம் தாவிச்செல்லும் வகையில் உடலமைப்பு அமைந்திருக்கும்.
- உலகின் மிகப்பெரிய அணில் இந்தியாவில் உள்ள ஒர் இனமாகும். இவை 1m நீளம் வளரக்கூடியவை. அதேபோல மிகச்சிறிய அணில் ஆபிரிக்காவில் உள்ள ஒர் இனமாகும். இந்த இன அணில்கள் 7cm இலிருந்து 15cm நீளத்திற்கு உட்பட்டவையாக இருக்கும்.

- அணிலின் முன்பக்க நான்கு பற்களும் சிறப்பு வாய்ந்தவை. ஏனெனில் முன்பக்க நான்கு கூர்மையான பற்களும் தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டேயிருக்கும். இவை உணவைக் கொறிப்பதன் காரணமாக பற்கள் தேய்வடைந்து தொடர்ந்து சரியான அளவில் பேணப்படுகின்றன.
- அணிலின் முக்கியமான உடற்பாகங்களில் ஒன்று வால். உடலின் நீளத்திற்கு சமனான அளவிற்கு அணில்கள் நீளமான வாலைக் கொண்டிருக்கும். தாவும் போது அல்லது விழும் போது சமநிலையைப் பேணுவதற்கு வால் பயன்படுகின்றது. அத்துடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கும் அணில்கள் வாலைப் பயன்படுத்துகின்றன.
- அணில்கள் குரல் எழுப்புவதன் மூலம் ஒன்றோடொன்று தொடர்பாடலை மேற்கொள்கின்றது. அத்துடன் சைகைகளை ஏற்படுத்துவதன் மூலமாகவும் அணில்கள் தொடர்பாடலை பேணுகின்றது.

- அணில்கள் 20mph வேகத்தை அடையக்கூடியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாதாரணமாக அவ்வளவு வேகமாக செல்வதை நம்மால் அவதானிக்க முடியாது. அணில்கள் 30m உயரத்திலிருந்து விழுந்தாலும் எவ்வித சேதமும் அவற்றிற்கு ஏற்படாது.
- அணிலின் சிறப்பியல்புகளில் ஒன்று பார்வைத்திறன். அணிலின் கண்கள் அவற்றிற்கு பின்பக்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளின் மேல் பார்வையை செலுத்துமளவிற்கு பரந்தளவிளலான பார்வைத்திறனை கொண்டுள்ளன.
- அணில்கள் 15 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் வாழும் திறன் படைத்தவை. ஆனால் பொதுவாக ஐந்து முதல் பத்து வருடங்களே உயிர்வாழ்கின்றன. பாம்பு, நரி போன்ற பல விலங்குகளிற்கு உணவாக அணில்கள் இருப்பதனால் அவற்றினால் வேட்டையாடப்பட்டு 5 வருடங்களிலேயே அணில்களின் ஆயுட்காலம் முடிவடைந்துவிடுகின்றது.