Deep Work and Shallow Work

Last updated on January 26th, 2024 at 05:01 pm

ஒரு வேலை செய்கின்றோம் என்றால் அந்த வேலையை எவ்வளவு நேரம் செய்தோம் என்பது முக்கியம் இல்லை. குறுகிய நேரம் வேலையை செய்தாலும் எவ்வளவு கவனத்துடன் வினைத்திறனாக செய்திருக்கின்றோம் என்பதே முக்கியம்.

ஆனால் தற்போதைய காலகட்டதில் வேலை செய்வதாக இருந்தாலும் சரி படிப்பதாக இருந்தாலும் சரி கவனச்சிதறல் இல்லாமல் வினைத்திறனுடன் செய்வது கடினமாக காரியமாக உள்ளது.

நமது கவனத்தை சிதறடிக்கின்ற விடயங்கள் நிறையவே இருக்கின்றன. இன்று நம்முடைய வேலைகளைச் செய்யவிடாமல் குறுக்கிடுவதில் இணையம், மொபைல் போன்ற டிஜிற்றலின் பங்கு மிக அதிகம். நமது மொபைலைத் தூக்கி தூர எறிந்துவிட்டாலே வேலைகளை கவனத்துடன் செய்ய முடியும்.

நாம் வேலை செய்கின்ற முறையை வைத்து வேலை செய்வதை Shallow Work, Deep Work என இரண்டு வகைப்படுத்தலாம். Deep Work, Shallow Work பற்றி Cal Newport இனால் எழுதப்பட்ட Deep Work எனும் புத்தகத்தில் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.

Deep Work என்றால் என்ன?

வேலை ஒன்றைச் செய்யும் போது குறிப்பிட்ட ஒரு வேலையை மட்டும் எந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் முழு ஈடுபாட்டுடனும் முழு கவனத்துடனும் செய்தால் அது Deep Work ஆகும்.

Deep Work Meaning in Tamil: Deep Work என்பதற்கு தமிழில் ஆழமான வேலை என்று அழைக்கிறார்கள். ஒரு வேலையை முழு கவனத்துடன் ஆழமாக செய்வதால் அதனை Deep Work என்று சொல்லப்படுகிறது.

Shallow Work என்றால் என்ன?

வேலை ஒன்றைச் செய்யும் போது முழு கவனமும் வேலையில் இருக்காது. இடையிடையே வேறு வேலைகளை செய்வீர்கள் உதாரணமாக வேலை செய்யும் போது மொபைலை எடுத்துப்பார்ப்பது மற்றவர்களுடன் கதைப்பது போன்றவற்றை செய்வீர்கள். இந்த மாதிரியாக வேலை செய்தால் அது Shallow Work ஆகும்.

Shallow Work Meaning in Tamil: Shallow Work என்பது தமிழில் ஆழமற்ற வேலை என்று அழைக்கிறார்கள். வேலை ஒன்றைச் செய்யும் போது வேலையில் மூழ்கி முழு கவனத்துடன் செய்யாததால் அதனை Shallow Work என்று சொல்லலாம்.

Deep Work மற்றும் Shallow Work

இன்று பெரும்பாலானோர் செய்து கொண்டிருப்பது Shallow Work-தான். வேலைக்கு நடுவே அடிக்கடி வேறு வேறு வேலைகள். தேவையில்லாத சிந்தனைகள் இல்லாமல் கவனச்சிதறல்கள் இல்லாமல் முழு கவனத்துடன் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் இல்லை.

Deep Work மற்றும் Shallow Work இவை இரண்டில், நாம் எப்படி வேலை செய்ய வேண்டும்? எந்த வேலை செயல்திறன் கூடியது என்று பார்த்தால் நிச்சயமாக Deep Work செய்வதுதான் நமது செயல்திறனை பல மடங்கு அதிகரிக்கும். வெற்றியாளர்கள் நிறைய பேர் Deep Work செய்வதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் நினைப்பதை விட Deep Work சக்திவாய்ந்தது. 21ம் நூற்றாண்டில் Deep Work செய்வது ஒரு Superpower என சொல்லலாம். இதற்குக் காரணமும் இருக்கின்றது. கவனச்சிதறல் இல்லாமல் வேலை செய்வது இன்றைக்கு நிறையப் பேரால் முடியாத காரியம் . யாராலும் முடியாத காரியத்தை நீங்கள் செய்தால் அதனை Superpower என்றுதானே சொல்ல வேண்டும்.

Deep Work செய்வது ஒரு திறமை. அந்தத் திறமையை நீங்கள்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். Deep Work எனும் திறமையை வளர்த்து அதனை பின்பற்றினால் செயற்திறனை அதிகரித்து உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு Deep Work உதவியாக இருக்கும்.

கடினமான விடயங்கள், புதிய விடயங்களை கற்றுக்கொள்ளும் போது Deep Work மூலமாக இலகுவாக கற்றுக்கொள்ள முடியும்.

எப்படி Deep Work செய்யலாம்

Planning

கவனச்சிதறல்களுடன் வேலைகளை செய்யப் பழக்கியிருப்பதால் ஆரம்பத்தில் Deep Work செய்வது கடினமாக இருக்கும். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக Deep Work செய்வதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்யலாம்.

முதலில் ஒவ்வொரு நாளையும் சரியாக திட்டமிட வேண்டும். செய்ய வேண்டிய வேலைகளிற்கான நேரத்தை சரியாக திட்டமிட்டு வேலை செய்ய வேண்டும். பெரும்பாலானோர் வேலை செய்வதற்கு நேர திட்டங்கள் தயாரிப்பது இல்லை. ஆனால் திட்டமிடல் உங்களுடைய நேரத்தை சரியாக பயன்படுத்துவதற்கு உதவி செய்யும்.

வேலைகள் செய்யத் தொடங்கும் போது கவனத்தை சிதறடிக்கூடிய விடயங்களை எல்லாம் அருகில் வைக்கக்கூடாது. முக்கியமாக மொபைலை தூரமாக வைக்கலாம். மொபைலை தூரமாக வைத்தாலே கவனம் சிதறல் ஏற்படுவது குறைவாக இருக்கும். 

வேலை செய்யும் போது செய்கின்ற வேலை பற்றி மட்டுமே சிந்திந்து முழு கவனத்துடன் வேலை செய்யலாம். தேவையில்லாத யோசனைகளைத் தவிர்க்க வேண்டும். ஒரு வேலையை செய்யத் தொடங்கினால் நீங்கள் திட்டமிட்ட நேரம் வரைக்கும் அல்லது வேலை செய்து முடியும் வரைக்கும் கவனத்துடன் வேலைகளை செய்ய வேண்டும். தொடங்கிய வேலையை முடிக்காமல் அடுத்த வேலையை பார்க்க செல்லக்கூடாது.

ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் பழக்கப்படுத்திக்கொண்டால் செயல்திறன் அதிகமாவதை உங்களால் உணர முடியும்.

வேலை செய்யும் போது முழு கவனத்துடன் Deep Work செய்வதைப் போலவே ஒய்வும் Deep-ஆகவே இருக்க வேண்டும். ஒய்வு என்பது எல்லோருக்குமே மிகவும் முக்கியமானது.

Deep Work செய்து முடித்த பின்னர் ஒய்வு எடுப்பது அவசியம். வேலை செய்யும் நேரத்தில் தேவையில்லாத சிந்தனைகள் இருக்கக்கூடாதோ அது போலவேதான் ஒய்வெடுக்கும் போதும் வேலை பற்றிய சிந்தனைகள் எதுவும் இருக்கக்கூடாது. நிம்மதியாக இருக்க வேண்டும்.

படிப்பதற்கும், வேலைகளை செய்வதற்கும், இலக்குகளை அடைவதற்கும் நிறைய வழிகளைப் பின்பற்றலாம். அதில் Deep Work செய்வதும் முக்கியமானது. உங்களை வெற்றியாளராக மாற்றக்கூடியது.

உண்மையில் Deep Work என்பது Super Power-தான் ஆகவே, Deep Work செய்யும் திறமையை வளர்த்துக் கொள்வோம். வேலையாக இருந்தாலும் படிப்பாக இருந்தாலும் Deep Work மூலம் நமது செயற்திறனை அதிகரித்து நமது இலக்குகளை அடைவோம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading