ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

Last updated on August 1st, 2023 at 10:33 pm

“ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற நூல் ஜான் பெர்கின்ஸ் எழுதிய Confessions of an Economic Hitman என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும். தமிழில் இந்நூலை இரா. முருகவேள் அவர்கள் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

இந் நூலை எழுதிய ஜோன் பெர்கின்ஸ் தன்னை ஒரு பொருளாதார அடியாளாக விபரிக்கிறார். ஜோன் பெர்கின்ஸ் தனது படிப்பை முடித்த பிறகு மெய்ன் என்ற நிறுவனத்தில் பொருளாதார நிபுணராக வேலையில் இணைகிறார். இந்த நிறுவனத்தில் உலக நாடுகளை பொருளாதார ரீதியில் அடிமைப்படுத்தும் திட்டங்களில் பொருளாதார நிபுணராக செயற்படுவதாலேயே தன்னை ஒரு பொருளாதார அடியாளாக பெர்கின்ஸ் கருதுகிறார்.

பொருளாதார அடியாளாக இருந்து நாடுகளை அடிமைப்படுத்துவதில் எவ்வாறு செயற்பட்டோம் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக பெர்கின்ஸ் இந் நூலை எழுதியிருக்கிறார்.

ஜோன் பெர்கின்ஸ் இனுடைய தனிப்பட்ட வாழ்க்கையுடன் இணைந்து ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொடர்ச்சியான கதை போன்று நூல் செல்வதால் இலகுவாக வாசித்து புரிந்துகொள்ளக்கூடியதாகவிருக்கிறது. ஒரு மொழிபெயர்ப்பு நூலை படிப்பது போன்ற உணர்வு இல்லாத அளவிற்கு தமிழ் மொழிபெயர்ப்பு தரமானதாக இருக்கிறது.

புத்தகத்தின் கவர் மட்டையை (Cover Page) பார்த்து புத்தகம் எதைப்பற்றி சொல்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். அமெரிக்கா என்கிற கழுகு உலகை தன் அலகுகளால் கொத்தி உணவாக எடுத்துக்கொள்வதாக அந்த அட்டைப்படம் காட்டுகிறது. இந்தப் புத்தமும் இதைப்பற்றித்தான் விபரிக்கிறது.

உலகமயமாக்கலின் பின்னர் அமெரிக்கா என்ற ஏகாதிபத்திய நாடு உலக நாடுகளின் வளங்களை எப்படி சுரண்டுகிறது, உலக நாடுகளை எப்படி தனக்கு கீழ் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது, ஒரு நாட்டின் மீது எப்படி தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்துகிறது போன்ற நிறைய விடயங்களை விபரிக்கிறது இந்த நூல்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தொடர்பில்லாத ஒரு நபர் அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றி நூல் எழுதுவதற்கும், உலக நாடுகளின் வளங்களை சுரண்டுவதிலும் அடிமைப்படுத்துவதிலும் பங்குகொண்ட ஒருவர் தன்னுடைய அனுபவங்களை வைத்து நூல் எழுதுவதற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

இதுவே இந்த நூலில் உள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை அதிமாக்குகிறது. ஆனால் இவ்வளவு வெளிப்படையாக அமெரிக்காவை பற்றி எதிர்மறையான கருத்துக்களை நூலாக வெளியிடும் போது அமெரிக்காவால் நூலுக்கு, நூலாசிரியருக்கு ஏதேனும் எதிர்மறையான விளைவுகளை எற்படுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் இன்றுவரை இந்நூல் வெளிவந்துகொண்டிருப்பது சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

எவ்வாறிருப்பினும் இந்நூல் கூறவருகின்ற மையக்கருத்து என்பது நூறுசதவீதம் உண்மையானது. உலகின் அரசியல் பற்றிய தெளிவு உங்களிடம் இருந்தால் உங்களால் இதனை புரிந்துகொள்ள முடியும்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூலை எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டும்.

உலக நாடுகளில் நடக்கிற சம்பவங்களுக்கு அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாட்டின் பங்கு இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வதற்கும், நாம் வாழ்கிற வாழ்க்கையை தீர்மானிக்கின்ற நமது அரசியலில் அமெரிக்க போன்ற வல்லாதிக்க நாடுகளின் தாக்கத்தை புரித்துகொள்வதற்கு இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும்.

நீங்கள் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகத்தை படித்திருந்தால் உங்களுடைய கருத்துக்களையும் கீழே பதிவு செய்யுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading