புர்ஜ் கலிபா பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள்

Last updated on August 15th, 2023 at 08:20 pm

நாம் வாழும் இந்த உலகில் இயற்கையாக அமைந்த அதிசயங்கள் நிறையவே இருக்கின்றன. அதே நேரம் செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட படைப்புக்களும் நிறையவே இருக்கின்றன.

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படுகின்ற படைப்புக்களுள் கட்டடங்கள் மிகவும் முக்கியமானவை. உலகில் உள்ள கட்டடங்களில் மிகவும் உயரமான கட்டடம் என்றால் அதற்கென தனிச்சிறப்பு இருக்கும்.

அந்த வகையில் இந்த பதிவில் உலகின் தற்போதைய உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா (Burj Khalifa) பற்றிய சுவாரஷ்யமான தகவல்களை பார்க்கப்போகின்றோம்.

Burj Khalifa

 • உலகின் மிகவும் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா (Burj Khalifa) ஐக்கிய அரபு இராச்சியத்தில் (United Arab Emirates) துபாய் (Dubai) நகரத்தில் அமைந்துள்ளது.

 • 163 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபாவினுடைய உயரம் 828 மீற்றர்கள் ஆகும். நீங்கள் ஈபெல் கோபுரம் (Eiffel Tower) பற்றி அறிந்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அதனுடைய உயரத்தின் மூன்று மடங்கு உயரத்தை புர்ஜ் கலீபா கொண்டுள்ளது.

 • புர்ஜ் கலிபாவினுடைய கட்டுமானப் பணிகள் 2004-ல் தொடங்கப்பட்டு 2009-ம் ஆண்டு கட்டுமானம் நிறைவடைந்த பின் 2010-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

 • உலகின் உயரமான கட்டடம் என்ற சாதனையைத் தவிர வேறு பல சாதனைகளையும் புர்ஜ் கலிபா கொண்டுள்ளது. அதிகமான மாடிகளைக் கொண்ட கட்டடம், அதிக தூரம் பயணம் செய்யும் Elevator-ஐ கொண்டுள்ள கட்டடம், உயரமான Elevator-ஐ கொண்டுள்ள கட்டடம், வேகமாக பயணம் செய்யக்கூடிய Elevator-ஐ கொண்டுள்ள கட்டடம், அதிமான வெளியே அவதானிக்கக்கூடிய தளங்களை (Observation Deck) கொண்டுள்ள கட்டடம் போன்ற சாதனைகள் உள்ளடங்குகின்றன.

 • புர்ஜ் கலிபா (Burj Khalifa) கட்டி முடிப்பதற்கு ஆன மொத்தச் செலவு 1.5 பில்லியன் டொலர்கள் (Billion Dollars) ஆகும்.

சாதாரணமான கட்டங்களைக் கட்டும் போதே பல சவால்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. அப்படி இருக்கும் போது உலகின் மிக உயரமான கட்டடம் என்பதால் நிறையச் சாவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

புர்ஜ் கலிபா கட்டும் போது ஏற்பட்ட சவால்களுள் முக்கியமானது கட்டடத்தின் ஜன்னல் பொருத்துவதில் ஏற்பட்ட சவால்.

 • அந்நாட்டில் வெப்பம் அதிகமாக இருக்கும். அதிலும் உயரமான கட்டடம் என்றால் கட்டடத்திற்கு உள்ளேயும் வெப்பத்தின் தாக்கம் காணப்படும். சாதாரணமான ஜன்னல் கண்ணாடிகள் கட்டத்தை சுற்றி பொருத்தினால் அதனூடாக சூரியனுடைய வெப்பம் கட்டத்திற்கு உள்ளேயும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் புர்ஜ் கலிபாவிற்காகவே பிரத்தியேகமாக ஜன்னல் கண்ணாடிகள் உருவாக்கப்பட்டன. சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்யக்கூடிய கண்ணாடியுடன் அலுமினியத்தையும் கொண்டு ஐன்னல்கள் உருவாக்கப்பட்டன.

 • புர்ஜ் கலிபாவில் மொத்தமாக 26,000 கண்ணாடி பனல்கள் (Glass Panels) பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

 • புர்ஜ் கலிபாவின் கட்டுமானப் பணிகளின் போது கொங்கிரீட் கலவையை அதிக உயரத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டிய தேவை இருந்தது. இதற்காக கொங்கிரீட் கலவையை Pump செய்து உயரத்திற்கு எடுத்து செல்வதற்கு சக்திவாய்ந்த Pump செய்யும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

 • கட்டுமானப் பணிகளின் போது இரவு வேளையில்தான் கொங்கிறீட் கலவை உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்கான காரணம் பகலில் வெப்பம் அதிமாக இருப்பதால் உயரத்திற்கு கொங்கிறீட் கலவையை கொண்டு செல்லும் போது ஈரலிப்பு இல்லாமல் இறுக்கமடைகின்ற பிரச்சினையினாலாகும். இதுவரை அதிக உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட கொங்கிறீட் கலவை புர்ஜ் கலிபாவின் கட்டுமானத்தின் போதானதாகவே இருக்கின்றது.

 • ஒரு சுவாரஷ்யமான விடயம் சொல்லவேண்டுமானால் 100,000 யானைகளின் எடைக்குச் சமானான நிறையுடைய கொங்கிறீட் கட்டுமானத்தின் போது பயன்பட்டுள்ளது.
Burj Khalifa

 • புர்ஜ் கலிபாவிற்கு பிரவேசிப்பதற்கு புர்ஜ் கலிபாவிற்கு கீழே இருக்கின்ற டுபாய் மால் (Dubai Mall) மூலமாகவே பிரவேசிக்க முடியும். அங்கிருந்துதான் புர்ஜ் கலிபாவிற்குச் செல்ல முடியும்.

 • புர்ஜ் கலிபாவை பார்வையிட வேண்டுமென்று எண்ணினால் அங்கே உங்களால் நினைத்த இடத்திற்கெல்லாம் செல்ல முடியாது. புர்ஜ் கலிபாவிற்கு பிரவேசிப்பதற்கு டிக்கெட் தேவைப்படும். இரண்டு வகையான டிக்கட்டுக்கள் உள்ளன. ஒன்றின் மூலம் 124-ம் மாடி வரை செல்லலாம். மற்றைய டிக்கெட் மூலமாக அங்கிருந்து 154-ம் மாடி வரை செல்லலாம்.

புர்ஜ் கலிபா மனிதனால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட கட்டடங்களில் ஒன்று. புர்ஜ் கலிபா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றது. வாய்ப்புக் கிடைக்கும் போது சென்று பார்க்க வேண்டும். உங்களுக்கும் அந்த எண்ணம் இருக்கும் என்று நம்புகிறேன்.

இயற்கையைப் போலவே மனிதனும் செயற்கையாக அழகிய படைப்புக்களை உருவாக்கி வைத்திருக்கிறான். இயற்கையை இரசிப்பதைப் போலவே மனிதன் உருவாக்கிய படைப்புக்களையும் இரசிக்கலாம்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading