Affiliate Marketing என்றால் என்ன?

Last updated on January 25th, 2024 at 04:53 pm

Affiliate Marketing என்பது டிஜிற்றல் மார்க்கெற்றிங் முறைகளில் ஒன்றாகும். Affiliate Marketing ஐ பயன்படுத்தி நம்மால் பணம் சம்பாதித்துக்கொள்ள முடியும். அதே போல நம்முடைய தயாரிப்புகளை (Products) நிறையப்பேரிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கான வழியாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Affiliate Marketing என்றால் என்ன?

Affiliate Marketing

இன்று பெரும்பாலான வணிகங்கள் இணையத்தை மையமாகக்கொண்டே நடைபெறுகின்றன. மக்கள் பொருட்களை வாங்குவதற்காக இணையத்தை அதிகமாக பயன்படுத்துகின்றார்கள்.

ஒரு நிறுவனத்தின் பொருட்களை Promote செய்து இணையத்தில் விற்பனை செய்வதன் மூலமாக Affiliate Marketing மூலம் பணம் சம்பாதிக்க முடியும். ஒருவர் ஆன்லைனில் உங்கள் மூலமாக ஒரு பொருளை வாங்கினால் அல்லது உங்கள் மூலமாக பொருள் விற்பனை செய்யப்பட்டால் அந்த பொருளிலிருந்து உங்களுக்கு சிறுதொகை பணம் Commission ஆக கிடைக்கும். இதுவே Affiliate Marketing என்று அழைக்கப்படுகின்றது.

நீங்கள் நேரடியாக பொருளை வாங்க வேண்டும் விற்க வேண்டும் என யோசிக்க வேண்டாம். இணையத்தில் உங்களிற்கென தரப்படும் பொருளிற்கான பிரத்தியேகமான லிங்க் (Link) மூலமாக அதாவது Affiliate Link மூலமாக யாராவது பொருளை ஆன்லைனில் வாங்கினால் அதற்கான Commission உங்களுக்கு கிடைக்கும்.

Affiliate Marketing எவ்வாறு வேலை செய்கிறது?

ஆன்லைனில் பொருட்கள் (Products) மற்றும் சேவைகளை (Services) விற்பனை செய்யும் நிறுவனங்கள், இணையத்தளங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் பல Affiliate Marketing செய்வதற்கான வசதியை வழங்குகின்றன.

நீங்கள் அவற்றில் இணைந்துகொள்ளலாம். பின்னர் அங்கே உள்ள பொருட்களிற்கான பிரத்தியேமான Link-ஐ பெற்று அதனை Promote செய்யலாம். Affiliate Product ஒன்றை Promote செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன.

உங்களுடைய லிங்க் (Link) மூலமாக யாராவது பொருட்களை வாங்கினால் அது நிறுவனத்திற்கு இலாபத்தை பெற்றுத்தரும். அந்த இலாபத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை உங்களுடன் Commission ஆக பகிர்ந்துகொள்வார்கள்.

இதே போல பல பொருட்கள் உங்களுடைய Link மூலமாக விற்பனைசெய்யப்பட்டால் அவர்களிற்கு நல்ல இலாபம் கிடைக்கும். ஒவ்வொரு பொருளிற்கும் உங்களுக்கும் Commission கிடைப்பதால் உங்களாலும் நல்ல இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியும். Affiliate Marketing இவ்வாறுதான் வேலை செய்கிறது.

Affiliate Marketing மூலமாக எவ்வளவு சம்பாதிக்க முடியும்

நீங்கள் நினைப்பதை விடவே அதிகமாகவே Affiliate Marketing மூலமாக சம்பாதிக்க முடியும். ஆனால், ஒரே நாளில் அவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்துவிடாதீர்கள்.

எந்த வேலையும் செய்யாமல் ஆரம்பித்த ஒரே நாளில் பல இலட்சங்களில் பணம் சம்பாதிக்க முடியுமான வேலை எங்கேயும் இல்லை. அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறீர்கள் என்றால் உங்களுக்கு அது தொடர்பான அறிவையும், திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக முயற்சி செய்தால் நினைப்பதைப்போன்று பணம் சம்பாதிக்க முடியும்.

Affiliate Marketing என்பதும் அப்படித்தான். Affiliate Marketing பற்றி சரியாகப் புரிந்து கொண்டு உங்களுடைய நேரம், உழைப்பு, திறமை போன்றவற்றை சரியாக பயன்படுத்தினால் வெற்றியடைய முடியும்.

Affiliate Marketing இல் உங்களுக்கான இலாபம் என்பது எவ்வளவு பொருட்கள் விற்பனையாகின்றன. ஒரு பொருளிற்கு எவ்வளவு Commission கிடைக்கிறது என்பதை பொறுத்து அமைகிறது.

பொதுவாக Digital Products-ஐ வைத்து Affiliate Marketing செய்வது நல்லது. அவற்றுள் அதிகமாக Commission இருக்கும். அதில் ஒரு பொருளை யாராவது வாங்கினால் 100 டொலர்களும் கிடைக்கலாம். 10பொருள்கள் ஒரு நாளில் விற்பனை செய்யப்பட்டால் 1000 டொலர்களை சம்பாதித்துவிட முடியும்.

5 டொலர் Commission ஆக இருந்தாலும் 200 பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அதிலிருந்தும் 1000 டொலர்கள் சம்பாதிக்கலாம். எதுவாக இருந்தாலும் உங்களால் Promote செய்யக்கூடிய பொருட்களாக தெரிவு செய்து Promote செய்வது சிறந்தது.

Affiliate Program வழங்கும் இணையத்தளங்கள்

ஆதிகாலம் முதலே Affiliate marketing என்றாலே எல்லோரும் முதலில் தேர்வு செய்வது Amazon இணையத்தளமாகத்தான் இருக்கும். அமசோன் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் பெரிய நிறுவனமாக இருப்பதனால் அநேகமானவர்கள் அமசோனையே தெரிவு செய்கின்றார்கள். 

ஆனால் Amazon நிறுவனம் Affiliate Commission மிக குறைவாகவே தருகின்றது. உண்மையில் அமசோனை விட அதிக இலாபம் தரக்கூடிய தளங்கள் நிறையவே இருக்கின்றன.

பொருட்கள் என்றால் தொட்டுணரக்கூடிய பொருட்கள் (Physical Products) மட்டும் அல்ல. பொருட்கள் என்று சொல்லும் போது Software, Digital Products, Online Courses, E-books, Services என எல்லாவிதமான பொருட்களிலும் Affiliate Marketing Program இருக்கின்றது.

ஒவ்வொரு விதமான பொருட்களிற்கும் வேறு வேறு Affiliate Marketing தளங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் ஆராய்ந்து தேடிக் கண்டறிய வேண்டும். நான் எனக்கு தெரிந்த சில தளங்களை சொல்கின்றேன்.

Clickbank, Amazon, Digistore24, ShareASale, Cj Affiliate போன்ற தளங்களை நிறைய பேர் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கின்றார்கள். JVZoo, Warrior Plus போன்ற Affiliate தளங்களில் Digital Products அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.

Udemy போன்ற தளங்களில் Online Courses ஐ எடுத்து Affiliate Marketing செய்யலாம். Fiver எனும் Freelance தளத்தில் Freelance சேவையை வைத்து Affiliate Marketing செய்யலாம். ShareASale இல் ஒவ்வொரு Leads இற்கும் பணம் தருகின்றார்கள். அதாவது யாரும் எந்த பொருளும் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. Sign Up செய்வது, Free Trial எடுப்பது போன்றவற்றை உங்களுடைய லிங்க் மூலமாக செய்வதற்கு பணம் தருகிறார்கள்.

Affiliate marketing செய்வது எப்படி?

எப்பொழுதுமே முதலாவது வேலையாக எந்த மாதிரியான பொருட்களை, எந்த Niche-யை Promote செய்ய போகின்றீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதே போல எப்படி Promote செய்யப்போகிறீர்கள் என்பதையும் முடிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

பின்னர், உங்களுடைய Niche-க்கு ஏற்ற Affiliate Marketing தளத்தை கண்டறிந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். சில Affiliate தளங்களில் Affiliate Marketing Program இல் பதிவு செய்ய உங்களிடம் இணையத்தளம் தேவைப்படலாம்.

பதிவு செய்த பின்னர் நீங்கள் Affiliate Marketing செய்ய விரும்புகின்ற பொருளை தெரிவு செய்ய வேண்டும். ஒரு பொருளை தெரிவு செய்வதற்கு முன் சரியாக ஆராய்ந்து பொருட்களை தெரிவு செய்யுங்கள்.

அங்கே, பொருளிற்குரிய பிரத்தியேகமான லிங்க்-ஐ உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். அந்த Link-ஐ தான் நீங்கள் Promote செய்ய வேண்டும். அந்த லிங்க் மூலமாக யாராவது பொருட்களை வாங்கும் பட்சத்தில் உங்களிற்கு இலாபம் கிடைக்கும்.

Affiliate பொருட்களை Promote செய்வதற்கு நிறைய நிறைய வழிகள் இருக்கின்றன. நீங்கள் உங்களுக்கு ஏற்ற மாதிரியான யுக்திகளை பயன்படுத்தி Affiliate Marketing செய்துகொள்ள முடியும். Affiliate Marketing செய்யக்கூடிய ஒரு சில வழிகளை அடுத்து பார்க்கலாம்.

Affiliate பொருட்களை promote செய்தல்

Marketing

உங்களிடம் சொந்தமாக வலைத்தளம் இருந்து அதற்கு நிறைய பார்வையாளர்கள் இருந்தால் Affiliate Marketing பொருட்களை விளம்பரப்படுத்தல் செய்வது மிக இலகுவானது. உங்களுடைய வலைத்தளத்தினுடைய Niche சார்ந்த பொருட்களை அங்கே விளம்பரம் செய்யலாம்.

Affiliate Marketing செய்வதற்காகவே வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்தாலும் நல்லது. உங்கள் வலைத்தளத்தில் Affiliate பொருட்களை பற்றி Reviews கொடுக்கலாம். Content, Articles எழுதலாம். அதனுடன் உங்களுடைய Affiliate Link ஐ கொடுக்கலாம். பல பேர் ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அந்தப் பொருளை பற்றி இணையத்தில் தேடுவார்கள்.

அப்படி தேடும் போது உங்களுடைய வலைத்தளத்தை பார்வையிடுபவர்கள் உங்கள் Affiliate link மூலம் பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், பொருட்களை விற்பனை செய்வது மட்டும் நோக்கமாக இல்லாமல் வலைப்பதிவிற்கு வருபவர்களுக்கு ஏதோவொரு பெறுமதியை உங்களால் வழங்ககூடியதாக இருக்க வேண்டும்.

Facebook, Instagram, Pinterest போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி சிறப்பாக Marketing செய்ய முடியும். சமூகவலைத்தளங்களில் அதிகமான Followers இருந்தால் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம். Pinterest தளத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். எனக்குதெரிந்தவரை Pinterest ஆனது Promote செய்வதற்கு சிறந்த தளமாகும். அதில் முயற்சி செய்து பார்க்கலாம்.

இது தவிர Email Marketing, Social Media Marketing போன்ற பலவிதமான மார்க்கெட்டிங் யுக்திகளைப் பயன்படுத்தி பொருட்களை Promote செய்யலாம். பொருட்களை Promote செய்வதற்கு நிறைய நிறைய வழிகள் இருக்கின்றன. நீங்கள் உங்களுக்கான Affiliate Marketing செய்வதற்கான யுக்திகளை உருவாக்கி பணம் சம்பாதித்துக்கொள்ள முடியும்.

இணையத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்ககூடிய வழிகளில் Affiliate Marketing எல்லோராலும் முயற்சி செய்யக்கூடிய வழியாக இருக்கின்றது. இந்த பதிவில் Affiliate Marketing பற்றி எனக்கு தெரிந்த விடயங்களையும், கருத்துக்களையும் கூறியிருக்கின்றேன். Affiliate Marketing பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading