Active Income and Passive Income

Last updated on January 28th, 2024 at 12:29 pm

இன்றைய உலகம் பணமின்றி இயங்காது என்று சொன்னால் பொருத்தமாகவே இருக்கும். பணத்தை அடிப்படையாகக் கொண்டு நிறைய விடயங்கள் உலகில் கட்டமைக்கப்படுகின்றன. இன்றைய உலகில் சக்தி வாய்ந்த ஆயுதம் பணம். இன்றைய உலகில் சக்திவாய்ந்த மனிதனாக இருக்க வேண்டுமானால் அதிகமான பணம் நம்மிடம் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட பணத்தை அதிகமாக சம்பாதிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வி கேட்டால் பணம் சம்பாதிப்பதற்கு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும், அதிகமாக உழைக்க வேண்டும் போன்ற கருத்துக்களே பொதுவாக சொல்லப்படும் கருத்துக்களாக இருக்கும்.

அப்படியானால் உலகின் முன்ணணிப் பணக்காரர்களாக இருப்பவர்கள் நல்ல வேலைக்கு செல்கிறார்களா? தினமும் அதிமாக உழைக்கிறார்களா? என்ற கேள்வி எழுகின்றது. உண்மை என்னவென்றால் சில நாட்கள் வேலை செய்யாமல் விட்டால் கூட அவர்களுக்கு வருமானம் வந்துகொண்டேதான் இருக்கும். அவர்கள் தான் வேலை செய்யாவிட்டாலும் பணம் வந்துகொண்டிருக்கின்ற வழியை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.

நமக்குத் தெரிந்தவர்களைப் பார்த்தாலே, சில பேர் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு வருமானம் வந்துகொண்டிருக்கும். சில பேர் பெரிதாக எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் வருமானம் வந்துகொண்டே இருக்கும்.

எப்படி, சில பேருக்கு மட்டும் வேலை செய்யாமல் இருக்கும் போதும் எப்படி வருமானம் வந்துகொண்டிருக்கின்றது? செல்வந்தர்கள் பணம் பற்றிய நிறைய விடயங்களை புரிந்துவைத்திருப்பதால் அவர்களால் நிறையவே சம்பாதிக்க முடிகிறது. நாமும் பணம் பற்றிய விடயங்களையும், யுக்திகளையும் புரிந்துகொண்டால் அதிகமாக சம்பாதித்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஒருவருக்கு வருமானம் வருகின்ற வழியைப்பொறுத்து Active Income, Passive Income என இரண்டு வகையான வகைப்படுத்தலாம்.

Active Income என்றால் என்ன?

Active Income Meaning in Tamil: Active Income என்ற வார்த்தைக்கு தமிழில் செயல் வருமானம் என்று சொல்கிறார்கள்.

Active Income மற்றும் செயல் வருமானம் போன்ற வார்த்தைகளிலிருந்தே புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். செயல் அல்லது வேலை ஒன்றைச் செய்வதன் மூலமாக வருமானம் வருகின்றது என்றால் அது Active Income எனப்படும்.

உதாரணமாக, அலுவலகத்தில் 9மணி முதல் 5மணி வரை செய்யும் வேலையைச் சொல்லலாம். இங்கே குறிப்பிட்ட நேரம் வேலை செய்ய வேண்டும். வேலை செய்தால் மட்டும்தான் வருமானம் கிடைக்கும். வேலை செய்யவில்லை என்றால் வருமானம் கிடைக்காது.பெரும்பாலான மனிதர்கள், Active Income மூலம்தான் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Active Income என்பது, நீங்கள் Active ஆக இருந்தால் பணம் கிடைக்கும். அதாவது நீங்கள் செய்கின்ற வேலைக்கு பணம் கிடைக்கும். இங்கே உழைப்பையும் நேரத்தையும் கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்கின்றோம் என்று சொல்லலாம்.

Passive Income என்றால் என்ன?

Passive Income Meaning in Tamil: Passive Income என்ற வார்த்தைக்கு தமிழில் செயலற்ற வருமானம் என சொல்வார்கள்.

Passive Income மற்றும் செயலற்ற வருமானம் போன்ற வார்த்தைகளிலிருந்தே புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். செயல் அல்லது வேலை ஒன்றைச் செய்யாவிட்டாலும் வருமானம் வருகின்றது என்றால் அது Active Income எனப்படும்.

வேலை செய்யாமல் பணமா சம்பாதிப்பது என்றவுடன் வேலை எதுவும் செய்யாமல் எப்படி வருமானம் வரும் என்ற கேள்வி எழலாம். Passive Income வேண்டுமென்றால் ஆரம்பத்திலே தொடர்ச்சியாக வருமானம் வரக்கூடிய ஒரு வழியை உருவாக்கி வைத்திருக்க வேண்டும். பணம் தொடர்சியாக வரக்கூடிய முறையை (System) ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சொல்லலாம்.

எல்லோருக்கும் தெரிந்த உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், வாடகை என்பது ஒரு Passive Income ஆகும். நீங்கள் கட்டடத்தொகுதி ஒன்று வைத்திருக்கிறீர்கள் என்றால் அதனை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தை Passive Income ஆக கொள்ளலாம்.

ஆரம்பத்தில், வீட்டை தயார் செய்து கொடுத்துவிட்டால் நீங்கள் வேலை செய்யாவிட்டாலும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். இதனால்தான் Rent என்பது ஒரு Passive Income ஆகும்.

Passive Income மூலம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. பங்குச்சந்தையில் முதலீடு செய்வது, வணிகம் ஒன்று ஆரம்பிப்பது, சொத்துக்களை வாடகைக்கு கொடுப்பது, ஆன்லைன் மூலமாக Passive Income சம்பாதிப்பது போன்றவற்றை சொல்ல முடியும்.

ஒருவர் செல்வந்தராக வேண்டும் என்றால் Passive Income ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

செல்வந்தர்கள், அதிகமாக வேலை செய்யாவிட்டாலும் நிறைய சம்பாதிக்க முடிவதற்கான காரணம் அவர்கள் Passive Income வரக்கூடிய வழிகளை உருவாக்கி வைத்திருப்பார்கள்.

ஆனால், ஒர் உண்மை என்னவென்றால் நினைத்தவுடன் எல்லோராலும் Passive Income சம்பாதித்து செல்வந்தராக மாற முடியாது. ஆரம்பத்தில் அதிகமாக வேலை செய்ய வேண்டும். Passive Income வரக்கூடிய வழியை உருவாக்கும் அளவிற்கு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். முறைமை ஒன்றை உருவாக்க வேண்டுமானால் முதலீடுகளும் தேவைப்படலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக நமக்கான Passive Income கிடைப்பதற்கான படிகளை உருவாக்கினால் ஒரு கட்டத்திற்குப் பிறகு பெரியளவில் வேலைகள் செய்யாமல் அதிகமாக சம்பாதிக்க முடியும்.

தற்போதைய காலகட்டத்தில், பெரிளவில் பணம் முதலீடு செய்யாமல் Passive Income உருவாக்குவதற்கு இணையம் உதவியாக இருக்கும். இணையத்தின் உதவியுடன் சிறிதளவாக ஆரம்பித்து பெரியளவான வணிகமாக மாற்ற முடியும். தற்போதைய நிலையில் நிறையப் பேர் நிகழ்நிலை மூலமாக Passive Income சம்பாதிக்க முயற்சிக்கின்றார்கள்.

எப்படியாயினும் நாம் செல்வந்தராக விரும்பினால், நமக்கான நேரத்தை சேமிக்க விரும்பினால் Passive Income வழி ஒன்றை உருவாக்குவது சிறந்த திட்டமாக இருக்கும்.

Share

You may also like...

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments

Discover more from Tamil Blog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading